Friday, June 28, 2013

                                          முருகனை   வாழ்த்துவோம்

மிலிடரிமுருகனும்
ஒய்வு  பெறுகிறார்
அய்யா பாண்டியன்  --என்று
அன்போடு அழைக்கப்படும்
அண்ணன் முருகனும்  ஓய்வு பெறுகிறார்

விஜயநாராயணம்  கண்ட
வித்தியாசமான  மனிதர்
அஞ்சல் துறை  பெற்றிட்ட
அதிசய  மாமனிதர்

அன்பு  அமைதி
அடக்கம்  ஆதரவு  என
அனைத்து அகர நிலைகளிலும்
ஆரம்பம் முதல் நிலைத்து  நின்றவர்

அடிமை நிலை  இல்லாத வாழ்க்கை
பனிவு  நிறைத்த  வார்த்தை
கொடுக்கும் நிலை இன்னும் வரவில்லை என்றாலும் --எவரையும்
கெடுக்கும்  நிலை  ஒருபோதும் இல்லை 
ஆரம்பம் முதலே -எங்களை 
ஆதரிக்க எடுத்த அவர் முடிவிலும் 
மாற்றங்கள்  ஏதும்  இல்லை 

என்றும்  எங்களோடு  இருந்த 
  தோழர்  முருகன்  பல்லாண்டு  வாழ்க 

                                    தோழமையுடன் 
    
                                      S .K .ஜேக்கப் ராஜ்  


ARAMPAM
கெடுக்கும்  நிலை  ஒரு போதும் இல்லை

No comments:

Post a Comment