Tuesday, August 12, 2014

                                              நெல்லை  கோட்ட செய்திகள் 


தோழர் G .செல்வராஜன் PA  வள்ளியூர்  அவர்கள் 13.08.2014 அன்று தன் விருப்ப ஓய்வில் செல்கிறார் 

அஞ்சல் துறையில் இலக்கிய வானில் --
அழகிய ஒரு நட்சத்திரம் அண்ணன் செல்வராஜன் 
 மும்பை அஞ்சல் துறையில் நுழைந்து --மெல்ல ,மெல்ல 
தருமபுரி ,தேனி ,கோவில்பட்டி கடந்து  
சொந்த கோட்டமான நெல்லையில் சேர்ந்து -- நம் 
நெஞ்சங்களில் நிரந்தர இடத்தை பெற்றவர் 
தென்பகுதி NFPE வளர்க்க -அந்த பகுதி 
தோழர்களுடன் துனை நின்றவர் -
திருப்பூர் மாநில மாநாட்டில் சார்பாளராக சென்று 
பாளைக்கு  பெருமை சேர்த்தவர் 
பணி இடத்தில பழகுவதில் இனியவர் 
அணி முடிவுக்கு முழுமையாய் ஒத்துழைத்தவர் 
அவர் இருக்கும் இடத்தில சிரிப்புக்கு குறை இருக்காது -
இது போன்ற சிறப்புக்கு இனி அஞ்சலகத்தில் ஆள் இருக்காது 

           தன் விருப்ப ஓய்வில் செல்லும் அண்ணனை 
            விருப்பமின்றி வழி அனுப்புவோம் !
                                   SKJ 
-------------------------------------------------------------------------- 

தோழர் A .உதயன் ரயில்வே துறைக்கு செல்கிறார் 
  கடந்த MTS தேர்வில் முதலிடம் பெற்று திசையன்விளை அஞ்சலகத்தில் MTS  ஆக பணியாற்றி வந்த தோழர் உதயன் அவர்கள் 
ரயில்வே துறையில் போட்டி தேர்வில் வெற்றி பெற்று சேலம் கோட்டத்தில் இன்று பணியில் சேருகிறார் .அவருக்கு NFPE இன் வாழ்த்துக்கள் 

----------------------------------------------------------------------
புதிய  பணி நியமனங்கள் 

நேற்று பாளை உப கோட்டத்தில் நடந்த GDS நேர்முக தேர்வில் தேர்ந்தெடுக்க பட்ட நம் சொந்தங்களை வாழ்த்தி வரவேற்கிறோம் 

1.தோழர் .சேர்மதுரை  GDS  பெருமாள்புரம் 

2.தோழர் .செல்வம்     GDS  பெருமாள்புரம்

3.தோழர்  G .மணி  S/O கோமு  GDS மகாராஜநகர் 

4.தோழியர் .மணிமேகலை GDS  குலவனிகர் புரம்  

   தோழமையுடன் 

                                          SK .ஜேக்கப்ராஜ் .
  

No comments:

Post a Comment