Saturday, January 9, 2016

                                                 மாநிலசங்க செய்திகள் 
    ஊழியர்களை துன்புறுத்தி அதில் அற்ப சுகம்கண்ட ஈரோடு சீனியர் போஸ்ட் மாஸ்டர் இடமாற்றம் -தொடர் போராட்டங்களை நடத்திய ஈரோடு கோட்ட தோழர்களுக்கு வாழ்த்துக்கள் 
-

மாநிலச் சங்கத்தின் இடைவிடாத 

முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றிகள் !



1. மாநிலச் சங்கத்தின் இடைவிடாத முயற்சியின் காரணமாகவும் ஈரோடு கோட்டத் தோழர்களின்  தொடர்ந்த போராட்ட இயக்கங்களின் காரணமாகவும் ஊழியர் விரோத , ஊழல் அதிகாரி ஈரோடு தலைமை அஞ்சலக அதிகாரி திரு. சுந்தரராஜன் அவர்கள்  08.01.2015 அன்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.  


பிரச்சினையில் தலையிட்டு  தற்காலிகத்  தீர்வு தந்த ( பிரச்சினை இட மாற்றம் பெற்றிருக்கிறது ) CHIEF  PMG அவர்களுக்கும் , மேற்கு மண்டல PMG அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் சார்பில்   நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாநில/ மண்டல நிர்வாகம் உடனடியாக தவறுகள் பல புரிந்த அந்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திடக் கோருகிறோம்.

                            திண்டுக்கல் தொழிற்சங்க பலகை 
மீண்டும் நிறுவப்பட்டது 

2. முன்னாள்  திண்டுக்கல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளரால் அனைத்து சங்கங்களின் அறிவிப்பு பலகை  அஞ்சலக உள்  வளாகத்தில் இருந்து அகற்றப்பட்டது  உங்களுக்குத் தெரியும்.  அந்த அதிகாரியும் நம்முடைய மாநில மற்றும் அகில இந்திய சங்கங்களின் தொடர் புகார்களால்  இடமாற்றம் செய்யப்பட்டு வேறு மாநிலத்திற்கு அனுப்பப் பட்டதும் உங்களுக்குத் தெரியும் .  

தற்போது புதிய அதிகாரியிடம் இந்தப் பிரச்சினை  எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலக   உள்  வளாகத்திலேயே நம்  சங்க அறிவிப்பு பலகை கடந்த 31.12.2015 அன்று மீண்டும் 

                       10.01.2014 --மதுரை தர்ணா 

3. கடந்த 10.1.2014 COC  யின்  தென் மண்டல  தொடர் முழக்க ஆர்ப்பாட்டத் தில் பங்கு கொண்டதால்  பழி வாங்கப்பட்ட  தோழர்களில் ஏற்கனவே 12 பேர்களுக்கு மாநிலச் சங்கத்தின் இடைவிடாத தொடர் முயற்சியால் DIES NON  தண்டனை ரத்து செய்யப்பட்டது உங்களுக்குத் தெரியும். 

தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநிலச் சங்கத்தின் ஆலோசனை பெற்று ஒன்றரை வருடங்கள் கழித்து   உரிய அதிகாரிக்கு முறையாக மேல் முறையீடு செய்த  தென்காசி  கிளைச் செயலர்  தோழர். சண்முகவேல் அவர்களின் மேல்முறையீடு , காலதாமதம் CONDONE செய்யப்பட்டு , ஏற்கப்பட்டு அவரது தண்டனை முழுவதுமாக  ரத்து செய்யப்பட்டது.  - --!









No comments:

Post a Comment