Saturday, April 2, 2016

மீண்டும் தலை தூக்கும் நெல்லை கோட்ட அலுவலக தொ(ல் )லை பேசிகள் 

பொதுவாக மார்ச்சோடு டார்கெட் பிரச்சினை முடிவுக்கு வரும்.அதன்பிறகு ஒரு 10 மாதமாவது ஊழியர்கள் நெருக்கடி இல்லாமல் இருப்பார்கள் என்பது பழைய வழக்கம் . .அனால் இந்த ஆண்டு  ஏப்ரல் 1 ம் தேதியே புதிய  நெருக்கடியை கோட்ட அலுவலகத்தில் இருந்து கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் 
                                           நேற்றைய மெயில் 
Sir/Madam

​Please intimate number of NSC/KVP purchased and accounts opened by staff immediately to the email id tvldiv.dosb@gmail.com

 மேலும் தொலைபேசியில் ஒவ்வொரு அலுவலகத்தையும் அழைத்து எத்தனை கணக்குகள் .பத்திரங்கள் உங்கள் பெயரில்  தொடங்கி இருக்கிறீர்கள்   --
இல்லை என்றால் நாளைக்குள் போடவேண்டும் என்ற அதிகார தொனியோடு தொலைபேசி உரை முடிகிறது .( voice mail வசதியை நம் தோழர்கள் பயன்படுத்தவும் )
      இதனை தொடர்ந்து பாளையங்கோட்டையில் நேற்று ஒவ்வொரு ஊழியர்களிடமும் ரூபாய் 100 வசூலித்து NSC பத்திரம் வாங்கி கொடுக்க பலமான Canvassing நடக்கிறதாம்? ..
        அன்று இலக்குகளுக்காக 10 ரூபாய் RD கணக்கு தொடங்கி குட்டு பட்டது போதாதா ? இன்று 100 ரூபாய் NSC யா ?
  இது குறித்து நமது மாநில /மத்திய சங்கத்திற்கு  புகார்கள் அனுப்பி யுள்ளோம் .மேல்மட்ட அதிகாரிகள் ஏமாற கூடாது .ஆம் 
      வாடிக்கையாளர்களை விட்டுவிட்டு -ஊழியர்களிடமே எல்லாவற்றையும் 
விற்று விடலாம் என்பது ஆரோக்கியம்தானா ?
                              சிந்திப்பீர் !
                   வாழ்த்துக்களுடன்----  SK .ஜேக்கப்ராஜ் -------------------  

No comments:

Post a Comment