Tuesday, March 28, 2017

                                     கோட்ட சங்க செயற்குழு முடிவுகள் 
நமது கோட்ட சங்கத்தின் செயற்குழு கோட்டத்தலைவர் தோழர் KG.குருசாமி அவர்கள் தலைமையில் பாளையம்கோட்டையில் 27.03.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது .கீழ்கண்ட முடிவுகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன .
1.NFPE GDS கோட்டசெயலர் தோழர் E .காசிவிஸ்வநாதன் அவர்களின் PUTOFFDUTY யை நமது வேண்டுகோளை ஏற்று ரத்து செய்து கொடுத்த நமது முதுநிலை கண்காணிப்பாளர் திரு .VPC  அவர்களுக்கு நன்றி தெரிவிக்க பட்டது .
2.திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் அவர்களின் நடைமுறை விதிமீறல் /இலாகா பணம் சுரண்டல் .பிராஞ்சு ஒதுக்குவதில் பாரபட்ச போக்கு ,அலுவலக வருகையில் தன்னை சார்ந்தவர்களுக்கு அதீத சலுகை , ஊழியர் மீது பொய்புகார்ஒருமையில் பெண் ஊழியர்களை அழைப்பது  ,மாலை 5.30 மணிக்கு மேல் ஊழியர்களை கட்டாயப்படுத்தி வெளியே அனுப்புவது இவைகள் கண்டித்து 04.04.2017 அன்று  
இரண்டு கட்ட ஆர்ப்பாட்டம் நடத்திடவும் --மாநில சங்கம் மூலம் இவரது முறைகேடுகளை மண்டல அலுவலகத்திற்கு கொண்டு செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது .(ஆர்ப்பாட்டத்தில் நெய்யூர்  பகுதி ஊழியர்களை அழைப்பது )
3.16.03.2017 ஒருநாள் வேலைநிறுத்தத்தை மிக சிறப்பாக செய்த அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது .
4.புதிய பென்ஷன் குறித்த கருத்தரங்கம் வருகிற மே மாதத்தில் நெல்லையில் நடத்துவது என்றும் அதற்கு தோழர் G.சிவகுமார் PA மானுர் அவர்களை அமைப்பாளராகவும் நியமிக்க செயற்குழு அனுமதி அளித்தது .
5.2002 மற்றும் 2003 பணி இடங்களில் 2004 க்கு பிறகு நியமணம் பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் வழக்கு சம்பந்தமாக உதவ தீர்மானிக்கப்பட்டது 
6.பாளையம்கோட்டையில் மகளிர்புதிய  டைனிங் அறைக்கு தேவையான உபகரணங்களை உடனே வழங்கவும் கோட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடப்பட்டது .
முன்னதாக தோழர்கள் அம்பலவாணன் ,M.இசக்கிமுத்து அவர்களின் மறைவிற்கு  இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற பட்டது .
                  போராட்ட வாழ்த்துக்களுடன் 
                        SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 









  புதிய பென்ஷன் குறித்த கருத்தரங்க அமைப்பாளர் G.சிவகுமார் 
                                                             தோழர் பாலாஜி 
                                      

No comments:

Post a Comment