Thursday, January 31, 2019

இன்று பணிநிறைவு பெறுகின்ற தோழியர் C .ராணி அன்பரசி  SPM மேலப்பாளையம் பஜார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 

ராணி அன்பரசி --
ஏட்டில் மட்டுமல்ல --
வீட்டிலும் நீங்கள் ராணி தான் 

ஆரம்பம் முதல் இன்றுவரை 
NFPE யின் அடிப்படை உறுப்பினர்தான் 
ஆனாலும் எந்த சூழலிலும் 
NFPE யை விட்டு கொடுத்திடாத தோழியர் 

வேலைநிறுத்தங்களில் ஆர்வத்தோடு பங்கேற்றவர் 
பணிஓய்வின் கடைசி மாதத்திலும் 
போராட்டத்தில் பங்கேற்ற புரட்சி தோழியர் 

மாநாடுகளில் தவறாமல் பங்கேற்பதும் 
எங்களை தொடர்ந்து ஆதரித்தவர்களில் 
நீங்களும் ஒருவர் 

அதிகாரிகளின் அச்சுறுத்தல்களை 
அலட்சியமாக சந்தித்தவர் 
கெடுபிடி காலங்களிலும் 
பதட்டமில்லாமல் பணியாற்றியவர் 

தங்களின் பணி ஓய்வு காலங்கள் 
சிறக்க வாழ்த்துகிறோம் .
                                                     தோழமையுடன் 
                                                       SK .ஜேக்கப் ராஜ் 
                                                    கோட்ட செயலர் நெல்லை 


No comments:

Post a Comment