Wednesday, December 1, 2021

 இம்சை அரசிக்கு ஒரு தொழிலாளியின் ரத்தம் கசிந்த பதில்கள் 

சீ ..சீ .....

 சூரியன் நீ என்றால்

 நாங்கள் பிரபஞ்சம் தான் 

 ராட்சசி நீ என்றால் 

நாங்களும் (NFPE )ரட்சகன் தான் 


நீ சக்தியல்ல --சூர்பனகை தான் 

ஆதாரம் எங்களிடம் ஆயிரம் இருக்கு !


தொழிலாளியின் கண்ணீர் வடிப்புக்கு 

நீ காரணம் என்றால் 

கண்ணீரை துடைக்கும் 

கைக்குட்டை NFPE தான் 

இன்று நீ வடிக்கும் நீலி கண்ணீர் உன் 

சகாக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை 


கருணை அடிப்படையில்

வேலை கேட்டு வந்தவரிடம்  நீ 

காட்டிய கொடுமை 

ஊர் அறியும் -உன் 

பேர் தெரியும் 


OUTSIDER முதுகில் சவாரி 

செய்துவிட்டு -நீ 

விண்ணப்பித்த மைலேஜ் தொகை 

குஷ்டரோகி கையில் 

வடிந்த தேனுக்கு சமமல்லவா ?


வறுமையின் விளிம்பில் நின்ற 

OUTSIDER யிடம் நீ பேசிய பேரம் 

5 லட்சம் பாலிசியாம் --100கணக்கு

உனது பாலிசியாம் !


ஒருமையில் பேசுவதும் 

பெருமையில் வாழ்வதும் 

உன் பிழைப்பு என்றால் 

பிழைத்து போ  !

உழைத்து வாழும் எங்களிடம் ஏன் 

உரசி  பார்க்கிறாய் ?எங்களிடம் ஏன் 

அரசியல் செய்கிறாய் ?


ஆய்வு நடத்தும் இடம் உன்

அரண்மனை என்றால் என்ன ?

அலுவலகம் என்றால் எமக்கென்ன ?

TA பில் போடாமலா இருந்தாயா  !


உன் அலுவலகத்தில் சதிகார 

கூட்டம் என்றால் ?

அதனை வேட்டையாட 

எங்களுக்கென்றும் அவகாசம் 

தேவையில்லை !


உன் உப கோட்டத்தில் 

எத்தனை தொழிலாளி செத்து போனான் 

என்றாவது இறுதி சடங்கில் போனதுண்டா ?

எத்தனை குடும்பங்கள் கள் கணவனை 

இழந்து வாடியபோதும் 

கைம் பெண்களை அலையவிட்டு 

அலைக்கழித்ததை மறக்கமுடியுமா ?


எங்களின் கண்ணீர் இன்னும் இருக்கு 

அம்மாவை ஆதரிப்போர் இனியாவது 

கேட்டு பார் !

உன் சகாக்களின் சாவின் போது 

சக்தி எங்கே போனது ? 

சூரியன் எங்கே ஒழிந்து கொண்டது ?

தொடரும் ..........ஜேக்கப் ராஜ் ------











No comments:

Post a Comment