Wednesday, February 6, 2013

                  கோட்ட சங்க செயற்குழு முடிவுகள் 

05.02.2013  அன்று நமது கோட்ட சங்க செயற்குழு  கோட்ட தலைவர் 

தோழர்  A ..ஆதிமூலம்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது .

செயற்குழுவில் கிழ்க்கண்ட தீர்மானங்கள்  பல்வேறு  கருத்துகளை  கேட்டு 

நிறைவேற்ற பட்டது .

                          மார்ச் 20.21 அகில இந்திய மாநாடு       

திருவனந்த புரத்தில் நடைபெறும் அகில இந்திய  மாநாட்டிற்கு  வர விரும்பும் 

தோழர்கள்  18.02.2013  குள்   கோட்ட செயலரிடம்  தங்கள் பெயர்களை 

பதிவு  செய்யும் படி  கேட்டு கொள்கிறோம் .மார்ச் 19 ம் தேதி இரவு 

நாம்  புறப்பட வேண்டும் .

                                            பிப்ரவரி  20, 21 வேலைநிறுத்தம் 

 கடந்த  12.12.2012  வேலை நிறுத்தத்தை  நமது கோட்டத்தில்  சிறப்பாக  

செய்து முடித்த  அனைத்து  தோழர்களுக்கும்  .தோழியர் களுக்கும் 

செயற்குழு  வீர வாழ்த்துக்களை  தெரிவித்து கொள்கிறது .

 இரண்டு மாத இடைவெளியில்  மீண்டும் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில்  ஊழியர்களை இறக்குவதில்  அமைப்பு  
ரீதியாக  உள்ள  தயக்கங்களை  முன்னணி  தோழர்கள்  அந்தந்த 
பகுதி ஊழியர்களிடம்  எடுத்து  சொல்லி வேலை நிறுத்தத்தை 
  சிறப்பாக  செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது .  

   இந்த வேலை நிறுத்தத்தில்  AIPEDEU  சங்கமும்  இணைந்து உள்ளதால் 

நமது பகுதி AIPEDEU  சங்கத்தையும் ,அகில இந்திய அளவில் FNPO 

சங்கமும் சேர்ந்து இருப்பதால் நமது கோட்ட  FNPO சங்கத்தையும் 

சேர்த்து  வேலை நிறுத்த பணிகளை  செய்யவும்    முடிவு எடுக்கப்பட்டது . 
                                      தோழமையுடன் 
06.02.2013
                                     SK .ஜேக்கப்ராஜ் 
                                       கோட்ட செயலர் 
                                                                                 


No comments:

Post a Comment