Thursday, February 7, 2013

                                            கோட்ட மட்ட செய்திகள் 

06.02.2013 அன்று மாலை 6.00 மணியளவில் SP அவர்களுடனான 

சிறப்பு சந்திப்பு நடைபெற்றது .அஞ்சல் நான்கு கோட்ட செயலர் தோழர் 

SK .பாட்சா அவர்களும்  நம்முடன் கலந்து கொண்டார்கள் . கிழ்காணும் 

கோரிக்கைளை  குறித்து நீண்டதொரு விவாதம் நல்ல முறையில் நடைபெற்றது .

நமது கோரிக்கைகளை  ஏற்று புதிதாக தேர்வு பெற்ற தபால் காரர் தோழர்களுக்கு அவர்கள் விரும்பிய மூன்று இடங்களில் ஒன்றை 

அவர்களுக்கு  பணி ஆணை வழங்கினார்கள் .

தோழர்  அழகு  POSTMAN  ராதாபுரம் 

தோழியர்  தங்கலட்சுமி  POSTWOMAN  மகாராஜநகர் 

தோழர்  முருகேசன் பொட்டல்புதூர் 

தோழர்  தங்கராஜ்  ரவனசமுத் திரம் 

புதிய தோழர்கள் அனைவரும் NFPE அஞ்சல் நான்கில் தங்களை  இணைத்து 

கொண்டார்கள் .அவர்களை  NFPE வாழ்த்தி வரவேற்கிறது .

 இரண்டாவதாக  MTS ஒதுக்கீட்டில்  நிரப்பபடாத  இரண்டு பதவிகள் 

GDS  மூலமாக  ( MERIT அடிப்படையில்  நிரப்பபடுவதற்க்கு  மண்டல அலுவலகத்தில்  ஒப்புதல் பெறப்பட்டு விரைவில்  நிரப்பப்படும் 

என்றும்  தெரிவித்தார்கள் .இதற்கான தனி கடிதமும் கொடுக்கப்பட்டது .

இறுதியாக  RT  சம்பந்தமாக நமது  எதிர்பார்ப்புகளை எடுத்துரைத்தோம் .

 மொத்தத்தில்  நேற்றைய சந்திப்பு  முழு திருப்தியோடு இருந்தது .

                                           மாநில சங்க செய்திகள் 

 07.02.2013  இன்று CPMG அவர்களுடனான RJCM MEETING செனனை CPMG 
அலுவலகத்தில்  நடைபெறுகிறது . 

                                                           நன்றி 

                                                            தோழமையுடன்             
                                                              SK .ஜேக்கப்ராஜ் .

           

No comments:

Post a Comment