Wednesday, May 29, 2013

                                      தோழர்  முருகையா பணி  ஒய்வு               பெறுகிறார் 

தோழர் முருகையா  
பணி  ஓய்வு  பெறுகிறார் 
SBCO அமைப்பில் 
தனி ஒருவராக நின்று  -NFPE 
மான்பை காப்பாற்றிய 
முருகையா  ஓய்வு பெறுகிறார் 

SBCO சங்க மாநில தலைவராய் 
மிளிர்ந்தவர் 
 ஆட்சிக்கு எதிரான  அத்தனை 
நிகழ்வுகளிலும் பங்கேற்றவர் 
அச்சுக்கு நிகரான 
கையெழுத்தை பெற்றவர் 
அச்சம் என்பதனை அவசர காலத்திலும் 
அறியாதவர் 
ஆடம்பரம் ஏதுமின்றி  அமைதியாக 
வலம் வந்தவர் 
அலுவலக பணியிலும் சுணக்கம் காட்டாத 
சூத்திரகாரி
தனி வாழ்க்கையிலும் சோதனைகளை தாண்டி 
சரித்திரம் படைத்த போராளி 
எளிமையும் --திறமையும் 
உறுதியும்  உணர்வும்      
ஒருங்கே அமைந்திட்ட 
தோழர் முருகையா  அவர்களை 
வாழ்த்துவோம் .

                                                     அன்புடன் 
                                                          SK .ஜேக்கப்ராஜ் 
     

No comments:

Post a Comment