Thursday, September 3, 2015

போராட்டம் - வெற்றி

அன்பார்ந்த தோழர்களே,  தோழியர்களே,

       02/09/2015 அன்று  நடைபெற்ற ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்தை  வெற்றி கரமாக்கிய  அத்துனை உறுப்பினர்களுக்கும் மற்றும் வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து நண்பர்களுக்கும்,சகோதர சங்க தோழர்களுக்கும், அஞ்சல் நான்கு நண்பர்களுக்கும், தோழியர்கள்  அணைவருக்கும் நமது சங்கத்தின் சார்பாக நன்றி  யினை  தெரிவித்து கொள்கிறோம்,
 நமது கோட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு பொது வேலை நிறுத்தத்தில் நமது உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று உள்ளனர்.
மத்திய அரசின் ஊழியர் விரோத போக்கினையும், நமது துறையை கூறு போட நினைக்கும் போக்கிற்கும்,தனியார் மயமாக்கும் எண்ணத்திற்கும் நிச்சயம் இந்த வேலை நிறுத்தம் ஒரு பாடமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை,மேலும்,இனி வரும் காலங்களில் நம்மையும், நம் இலாக்காவையும்
காப்பாற்ற நடைபெறும் போராட்டங்களிலும் முழுமையாக ஈடுபடுவோம் என சூளுரைப்போம்.
யினை        

No comments:

Post a Comment