Thursday, May 31, 2018

தோழர் KG .குருசாமி முன்னாள் கோட்டத்தலைவர் &PRI (P ) பாளையம்கோட்டை பணி நிறைவு விழா 




நீயல்லவா தலைவன் ! 
ஓய்வு பெறும் கடைசி நாட்களிலும் 
ஓடி ஒழிய மணமில்லாமல் -வேலைநிறுத்தத்தை 
தேடி வந்து சந்தித்த 
நீயல்லவா NFPE யின் தலைவன் 

முன்னாள் கோட்ட தலைவர் அல்ல -இனி 
என்னாளும் எங்கள் கூட்டத்தின் தலைவர் 
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் -இயக்கத்தில் 
உன் பங்கு சிறப்பானது -பழகுவதில் 
உன் பாங்கு மகத்துவமானது 

முத்துக்கள் வரிசையில் நீ விலை மதிப்பில்லாதவன் 
 மாற்றாருக்கு ஒரு நாளும் விலை போகாதவன் 
கொள்கையிலே நீ கோபுரம் தான் 
கொடுப்பதிலே குமணனும் நீ தான் 

நீ வந்த பிறகு தான் PRI பதவியும் 
மக்கள் தொடர்பானது 
தபால்காரர்களுக்கு 
பக்க பலமானது 

அடக்கம் உனது அடையாளம் 
அமைதி நீ தரித்திருந்த ஆபரணம் 
பொறுமை நீ கடைபிடித்த பக்குவம் 
புகழ் தானாக உனக்கு சேர்ந்த பொக்கிஷம் 

உதவி கேட்டு வந்தவர்களை 
வெறுமெனே அனுப்பியதில்லை 
பதவி ஆசை காட்டியபோதும் 
அணிமாறிட இசைந்ததில்லை 
ஆண்டுக்கு ஒரு சங்கமென -சமீபகால  
ஆசைக்கு நீ அசைந்ததில்லை 
ஆயுட்கால விசுவாசத்தை விட்டு விலக 
அணுஅளவும் நீ யோசித்ததில்லை 

உன் பணி நிறைவு காலம் சிறக்கவும் 
இனி வரும் நாட்களிலும் இன்பம் தொடரவும் 
வாழ்த்தி மகிழ்கின்றோம் 
                                                                                  SK .ஜேக்கப் ராஜ் 



No comments:

Post a Comment