...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......அஞ்சல் மூன்றின் அகிலஇந்திய மாநாடு ஹைத ராபாத் 20.10.2019 --22.10.2019 சிறக்கட்டும் .......

Monday, August 19, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                                               நேற்றைய நிகழ்வுகள் 
18.08.2019 ஞாயிறு காலை இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (BEFI) திருநெல்வேலி மாவட்ட 5 வது மாநாடு மற்றும் 12 வது மாநில மாநாடு வரவேற்பு குழு கூட்டம் நெல்லைமூட்டா  அலுவலகத்தில் நடைபெற்றது .நெல்லையில் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றினைக்கும் விதமாக நடந்த நிகழ்வில் NELLAI NFPE சார்பாக கலந்துகொண்டு நமது பங்களிப்பை செலுத்தினோம் .வந்திருந்த அனைத்து சங்கத்தினரும் நமது போராட்டத்தின்இன்றைய நிலை குறித்து கேட்டறிந்தனர் .
 நேற்று இரவு மருதகுளத்தில் நடைபெற்ற மின்னொளி கபடி போட்டியில் தொழிற்சங்க செயலர் என்ற அந்தஸ்தோடு ஒரு போட்டியை துவக்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது .NELLAI NFPE புகழ் எல்லா அரங்கிலும் நிலைநிறுத்த படுவது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் .
                                       நாளைய நிகழ்வுகள் 
20.08.2019 அன்று காலை 10 மணிக்கு நமது SSP அவர்களுடனான மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .ஏற்கனவே நாம் மாதாந்திர பேட்டியில் விவாதிக்கவேண்டிய பிரச்சினைகளை அனுப்பியுள்ளோம் .அதன் விவரங்கள் நாளை பிரசுரிக்கப்படும் .
                                           ஆர்ப்பாட்டம் 
  20.08.2019 செவ்வாய் மாலை 6 மணிக்கு SSP அலுவலகம் முன்பு GDS ஊழியர்களை இலக்கு எனும் பெயரில் உபகோட்ட அதிகாரிகளால் துன்புறுத்தப்படும் கொடுமையை எதிர்த்து GDS ஊழியர்களின் சங்கங்களின் சார்பாக நடைபெறும் ஆர்பாட்டத்தில் பங்கேற்பு .
                     அனைத்து இயக்கங்களையும் வென்றெடுக்க அணிதிரள்வோம் .
 போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கொட்ட செயலர் நெல்லை Saturday, August 17, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
மீண்டும் ஒரு வெற்றி --ஜூன் மாதம் பணிஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு INCREMENT வழங்கிடவேண்டும் என தோழர் ஐயம்பெருமாள் வழக்கில் உச்சநீதிமன்றம் அரசு தாக்கல் செய்த SLP மனுவை தள்ளுபடி செய்து உன்னத தீர்ப்பை வழங்கியுள்ளது 
வழக்கம் போல் வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டுமே இந்த தீர்ப்பு பொருந்தும் என அரசு அறிவிக்கப்போகிறதா அல்லது ஒரு மாதிரி அரசாக (MODEL EMPLOYER)  இருந்து ஜூன் மாதம் ஓய்வுபெற்ற அனைவருக்கும் ஒரு INCREMENT வழங்கி ஓய்வூதியத்தை மறுநிர்ணயம் செய்ய DOPT முடிவெடுக்க ஆணை பிறப்பிக்கப்போகிறதா ? 
 MACP வழக்குகளில் கூட DEFENSE ஊழியர்களுக்கு பொருந்தும் தீர்ப்பை சிவில்  ஊழியர்களுக்கு அமுல்படுத்திட தயங்கும் அரசு -இந்த வழக்கில் என்ன சொல்லப்போகிறது ---பொறுத்திருந்து பார்ப்போம் ..
                            பாளையம்கோட்டை தலைமை அஞ்சலக ஊழியர்களின் கவனத்திற்கு ஞாயிறு பணிசெய்ய யாரையும் கட்டாயப்படுத்தமாட்டோம் -இதுவரை யாரையும் கட்டாயப்படுத்தவுமில்லை என்றும் ARRANGEMENT செய்வது பாளையம்கோட்டை போஸ்ட்மாஸ்டர் தான் என்று நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகவும் -கேட்கின்ற மேல்மட்ட அதிகாரிகளிடமும் சொல்லிவருகிறது .ஆகவே யாரையும் கட்டாயப்படுத்தமாட்டோம் என்கின்ற நிர்வாகத்தின் நிலையினை ஊழியர்கள் உணர்ந்து கொண்டு தொடர்ந்து நமது கோட்ட சங்க செயல்பாட்டிற்கு உங்கள் ஆதரவை நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் 
                                                   இறுதி வெற்றி நமதே !
                தோழமை வாழ்த்துக்களுடன் 
                                    SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, August 16, 2019

அன்பார்ந்த தோழர்களே !
               நாட்டிலேயே முதன்முதலாக DEFENCE ஊழியர்கள் ஒருமாத வேலைநிறுத்தம் செய்திட முடிவெடுத்துள்ளனர் -வருகிற 20.08.2019 முதல் வேலைநிறுத்தத்தை தொடங்குகிறார்கள் .அவர்களின் கோரிக்கைகளும் போராட்டங்களும் வெற்றிபெற NELLAI NFPE வாழ்த்துகிறது 
              41 பாதுகாப்பு தளவாடங்களை தயாரிக்கும் அரசு நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனமாக மாற்றிட முயற்சிக்கும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்து நடந்திடும் வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் வெல்லட்டும் !
            
                                                                        

Thursday, August 15, 2019

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
         உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய சுதந்திர தினவிழா வாழ்த்துக்கள்
               இந்திய சுதந்திர  போராட்டத்தில்   திருநெல்வேலி மாவட்டத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு .அந்த சிறப்பிற்கு உரியவர்கள் நம் தாய் நாட்டின் உரிமைக்காக இன்னுயிர் நீத்த   தியாகிகளை தலைவர்களை நாம் நினைவு கூறுவோம்   ஆம் .நம் மண்ணின் மைந்தர்களை நினைவுகூறுவோம் .
                                    வீர பாண்டிய கட்ட பொம்மன்
ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 1760 ஆம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பிறந்தார்..வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அவர்கள் மனதிலும் வீரவித்தை விதைத்தது. ஜாக்சன் துரைக்குப் பின்னர், லூஷிங்டன் என்பவர் கலெக்டராகப் பதவியேற்றார். ஆங்கிலேய ஆதிக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு பேரிடைஞ்சலாகக் கருதப்பட்ட மைசூர் மன்னரான திப்பு சுல்தான் அவர்களை மே மாதம் 1799 ஆம் ஆண்டில், பீரங்கிகுக்குப் பலி கொடுத்தப் பின்னர், ஆங்கிலேயர்களின் இலக்குக் கட்டபொம்மனாக இருந்தது. அவருக்கும் பிரித்தானிய அரசு நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது. போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதிலும், கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார். இந்தப் போரில், கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால், கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கோரினார். ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரைப் புதுக்கோட்டை மன்னன் காட்டி கொடுத்ததால், ஆங்கில நிர்வாகிகள் அவரைக் கைது செய்தனர்.
மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட “குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. மேலும் கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையகாரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.
                                                 மாவீரன் வாஞ்சிநாதன் 
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன்.வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.வரை படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே முன்னீர் பள்ளம் சீதாராமய்யாரின் மூத்த புதல்வியான பொன்னம்மாளை மணந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், புனலூர் காட்டிலாகாவில் [2] பணியாற்றினார்.
 1911 ஜூன் 17 காலை 6:30 மணிக்கு மணியாச்சித் தொடருந்து சந்திப்பில், திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது மனைவியோடு கொடைக்கானலுக்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார். இவரின் உடல் கங்கைகொண்டான் பாலத்திற்கு வரும் போது உயிர் பிரிந்தது, அதன் பின் இரண்டு நாட்கள் திருநெல்வேலி சந்திப்பு பாலம் காவல் நிலையத்தில் வைத்திருந்து பாளையங்கோட்டை மிலிடரி லைன் ஆங்கில சர்ச் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
வாஞ்சியின் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான காரணமும், சென்னையில் 3,000-த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தன்னுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை என்றெழுதி இருந்தது.
                                    வ .உ .சிதம்பரம் பிள்ளை 
 வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.
தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.
இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.40 ஆண்டு தீவாந்திரத் தண்டனை! யாருக்கும் கொடுக்கப்படாத கொடுமையான தண்டனை. ஆங்கில அரசுக்கு வ.உ.சி.யிடத்தில் அளவு கடந்த பயம். இந்தக் கொடுமையான தண்டனைக்கு அந்த பயமே காரணம். அவரைச் சிறையில் அடைத்தால்தான் அவர்களால் தொடர்ந்து இந்தியாவில் ஆட்சி செய்ய முடியும். வ.உ.சி.க்கு அப்பொழுது 36 வயது தான்.
                                         சுப்ரமணிய பாரதியார் 
சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
நன்றி வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 
                             

Wednesday, August 14, 2019

                                   மீண்டும் நினைவூட்டுகிறோம் 
நமது கோட்ட கண்காணிப்பாளருடனான இந்த மாத மாதாந்திர பேட்டி வருகிற 20.08.2019 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது .ஏதேனும் பிரச்சினைகளை விவாதத்தில் சேர்க்கவேண்டும் என்றால் கோட்ட செயலருக்கு உடனே தெரிவிக்கவும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்
 P 3நெல்லை &SK .பாட்சா கோட்டசெயலர் P 4

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                   கோட்டத்திற்கு ஒரு மகளீர் அஞ்சலகம் திறக்க கேரளா CPMG  உத்தரவு 

Tuesday, August 13, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                          இந்த மாதம் கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுடனான மாதாந்திர பேட்டி வருகிற 20.08.2019 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது .மாதாந்திர பேட்டிகளில் விவாதிக்கவேண்டிய பிரச்சினைகள் ஏதும் இருப்பின் இன்று மாலைக்குள் கோட்ட செயலர்களுக்கு தெரிவிக்கவும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை NFPE 
To
PMs/SPMs concerned

No. ASP(HQ)/Union Meeting/Dlgs dated at TVL – 2 the  07/08/2019

The proposed Monthly Meeting of representatives from Service Union and Associations with the Divisional Head will be held on 20/08/2019 at the O/o SSPOs Tirunelveli Division as per the below mentioned schedule. The subjects for discussion during the proposed meeting should be submitted to this office on or before 16/08/2019 along with the list of officials who are attending the meeting. It is requested to intimate the same to Divisional Secretaries of the Service Unions/Associations accordingly.
  1. AIPEU P3 & P4              1000 hours

அன்பார்ந்த தபால்காரர் /MTS தோழர்களே !
                          LGO தேர்விற்கு தயாராகும் உங்கள் அனைவருக்கும் NELLAI NFPE சார்பாக வாழ்த்துகிறோம் .இந்த தேர்விலும் நமது கோட்டத்தில் சுமார் 24 காலியிடங்கள் இருப்பதாக தெரிகிறது .இதில் எல்லாப்பிரிவுகளிலிலும் இருக்கிறது .மீண்டும் உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .நன்றி .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, August 9, 2019

  அன்பார்ந்த தோழர்களே !
             மிக    நீண்ட இடைவெளிக்கு  பிறகு  நெல்லையில்  ஏனைய தொழிற்சங்க அமைப்புகளுடன் இணைந்து நமது கோரிக்கைகளுக்காக அனைத்து துறை சார்ந்த சங்கங்களுக்கும் நமக்கு ஆதரவாக 01.08.2019 அன்று நடைபெற்ற  ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர் .அதன் தொடர்ச்சியாக தென்மண்டல ஆயுள் காப்பீடு கழக ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பாக பொதுத்துறைகளை    பாதுகாக்க வலியுறுத்தி பாளையம்கோட்டையில் 09.08.2019 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நமது   NFPE  இயக்கத்திற்கும் அழைப்பு விடப்பட்டு நாமும்       கலந்துகொண்டோம் .ஒரு ஒன்றுபட்ட இயக்கங்களை நடத்தவேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதனை அனைத்து சங்க பிரதிநிதிகளும் வலியுறுத்தி பேசினார்கள் .
                                         

                                           முக்கிய செய்திகள்
C மற்றும் B கிளாஸ் SPM களுக்கு பெரும் சுமையாக இருந்த SMR முறை ரத்து செய்யப்படுவதாக வடக்கு கர்நாடக மண்டல PMG அவர்கள் தனது கீழுள்ள அனைத்து கோட்ட அதிகாரிகளுக்கும் 08.08.2019 தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளார்கள் .

Discontinuation of SMR Report from Sub Post offices

Thursday, August 8, 2019

அகில இந்திய தபால்காரர் /MTS சங்கத்தின் சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை CPMG அலுவலகம் முன்பு மாபெரும் தர்ணா போராட்டம் மிக எழுச்சியோடு நடைபெற்றது .தர்ணாவிற்கு ஆதரவாக அஞ்சல் /RMS பென்ஷனர் சங்கமும் பங்கேற்றது .நமது கோட்டத்தில் இருந்து தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா -T .புஷ்பா கரன் G.கிருஷ்ணன் மற்றும் முருகையா  என மொத்தம் 5 தோழர்கள் பங்கேற்றோம் .தர்ணாவில் சில காட்சிகள் ......


Tuesday, August 6, 2019

   அன்பார்ந்த தோழர்களே ! 
               சென்னையில் அஞ்சல் நான்கு சங்கம் சார்பாக  நாளை 07.08.2019 அன்று CPMG அலுவலகம் முன்பு தர்ணா      
                  தபால்காரர் /MTS காலிப்பணியிடங்களை நிரப்பிடவேண்டும் சீருடை அலவன்ஸ் ரூபாய் 10000 ஆக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் தர்ணா போராட்டம் வெல்லட்டும் .நமது கோட்டத்தின் சார்பாக தோழர் SK .ஜேக்கப் ராஜ் SK .பாட்சா மற்றும் T .புஷ்பாகரன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
                                                  நன்றி !நன்றி ! நன்றி !
 ஞாயிற்றுக்கிழமை பணிசெய்ய அழைக்கும் நிர்வாக உத்தரவிற்கு எதிராக நாம் நடத்தும் .போராட்டத்திற்கு ஆதரவாகவும்  நமது வேண்டுகோளினை ஏற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திருமதி விஜிலா சத்தியானந்த் அவர்கள் நமது CPMG மற்றும் நமது SSP அவர்களிடம் நேற்று காலை புதுடெல்லியில் இருந்து தொலைபேசியில் பேசினார்கள் அவர்களிடம் நமது SSP அவர்கள் பெண் ஊழியர்களை இனிமேல் கட்டாயப்படுத்தி ஞாயிறு பணிக்கு அழைக்கமாட்டோம் என உறுதியளித்துள்ளார் .மேலும் இதுகுறித்த முழுவிவரங்களை நமது MP அவர்கள் 08.08.2019 அன்று நெல்லை வந்தவுடன் நேரில் சந்தித்த பின் தெரிவிக்கிறோம் .நமது கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் செயல்படுத்தும் நமது அன்பிற்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திருமதி விஜிலா சத்தியானந்த் அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 
                                        பாளை சட்ட மன்ற உறுப்பினருடன் சந்திப்பு 
 நமது கோரிக்கைகளுக்கு ஆதரவு வேண்டி மக்கள் பிரதிநிதிகளை நாம் சந்தித்துவருகிறோம் .அதன் ஒருபகுதியாக நேற்று நமது பாளை சட்டமன்ற உறுப்பினர் திரு .TPM .மைதீன் கான் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .நேற்றைய சந்திப்பில் தோழர்கள் ஜேக்கப் ராஜ் வண்ணமுத்து மற்றும் SK .பாட்சா ஆகியோர் கலந்துகொண்டனர் .
                                           PLESAE இதை நம்புங்கள் 
1.01.08.2019 அன்று நமது ஆர்பாட்டத்தில் சுமார் 60 பேர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக நிர்வாக தரப்பு அறிக்கை அளித்துள்ளது 
                    நன்றி .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Sunday, August 4, 2019

                                            அலைகள் ஓய்வதில்லை 
அன்பார்ந்த தோழர்களே !
                     ஒரு மாபெரும் எழுச்சி போராட்டத்திற்கு பிறகும் ஏதும் நடக்காதது போல் பாராமுகமாய் கோட்ட நிர்வாகம் நடந்து      கொள்வது ஆரோக்கியம் அல்ல .நமது  இன்றைய     நிலையினை குறித்து நேற்று மாநில /  மண்டலச்செயலர்களுக்கும் நெல்லைக்கு  வந்த தோழர் K .ராகவேந்திரன் பொதுச்செயலர் AIPRPA 
அவர்களிடமும் நேரிடையாக கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது .மேலும் வருகிற 07.08.2019 அன்று சென்னையில் நடக்கும் தபால்காரர் தர்ணா   போராட்டத்தில் கலந்துகொண்டு NFPE சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து மாநிலசெயலர்களுக்கும் நமது கோரிக்கைகளுக்கு ஆதரவு கேட்டு கடிதம் கொடுக்கவுள்ளோம் .
மேலும் வருகிற 08.08.2019 அன்று திருநெல்வேலியில் உள்ள மக்களவை /மாநிலங்களவை உறுப்பினர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளோம் .இதற்கிடையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  கீழ்கண்ட    தகவல்களை பெற விண்ணப்பித்துள்ளோம் 
     From                             
            S.K. Jacobraj
            S/o  K.Samuel.
            C-10 Gandhi Street
            Manakavalam Pillai Nagar
            Palayamkottai -627002

To
            The CPIO
            O/O Sr.Supdt of Pos
            Tirunelveli Division
            Tirunelveli-627002

Sir
            Sub : Request supply of information under RTI Act, 2005 – reg

            It is requested to kindly supply the following information under RTI Act.

1.      Copy of the orders issued by the SSPOs. Tirunelveli Division to Postmaster, Palayankottai HO regarding carrying out Aadhaar enrolment / updation work during Sundays.

2.      Copy of the instructions/orders issued by R.O Madurai / C.O Chennai regarding carrying out Aadhaar enrolment / updation work during Sundays in Tirunelveli Division.

3.      The date from which the Aadhaar enrolment / updation work is commenced at Palayankottai HO and the date of Sunday from which Sunday enrolment/updation started at Palayankottai HO.

4.      Name of the officials who were trained for Aadhaar Enrolment / updation work at Palayankottai HO.

5.      Total number of post offices identified for Aadhaar Enrolment / updation under Tirunelveli Division.

6.      Total number of officials who were trained for Aadhaar Enrolment / updation work in Tirunelveli Division.

IPO for Rs.10/- dated 03.08.2019 is enclosed for further action.


            05.08.2019
            Palayamkottai

                                                                                                                                     Yours faithfully,


/S.K JACOBRAJ/Saturday, August 3, 2019

அன்பார்ந்த தோழர்களே !
               ஞாயிற்றுக்கிழமை ஆதார் பணிசெய்ய நமது கோட்ட நிர்வாகமும் கூட இன்றுவரை எழுத்துப்பூர்வமான கடிதத்தை பாளையம்கோட்டை போஸ்ட்மாஸ்டர் அவர்களுக்கு கொடுக்கவில்லை என்பது இப்பொழுதான் தெரிகிறது ..சாதாரணமாக ஒரு வாய்மொழி உத்தரவை நிர்வாகம் பிறப்பித்தால் அதனை ஊர்ஜிதம் படுத்திட உடனே எழுத்துபூர்வமான உத்தரவை நிர்வாகம் கொடுத்திடவேண்டும் என்பது நமது இலாகா விதி .
ஆனால் இன்று இந்த விஷயத்தில் இலாகா விதி மிதி ....மிதி ..என நிர்வாகத்தால் மிதிக்கப்டுகின்றது ஊழியர்களின் நிம்மதி நசுக்கப்படுகின்றது .ஆகவே தொடரும் நம் முயற்சிகளுக்கு உங்கள் ஆதரவை தர வேண்டுகிறோம் .இதோ நமது கோட்ட சங்கத்தின் அடுத்த கடிதம் 
NFPE
          ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                    TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI-627002
No.P3-EC/dlgs dated at Palayankottai- 627002 the 03.08.2019

To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,

Sub:    Gross violation of rules and procedures by the DivisionalAdministration of Tirunelveli Division – Request toRestore peace among the employees - reg
            Ref:    This Union Lr No. P-3 Dlgs dated 22.07.2019& 31.07.2019

            In continuation of this Association’s letters under reference, we further point out the following to take corrective measures.

1.      It is seen that no orders/instructions have been received from R.O, Madurai / C.O Chennai to have the Aadhaar Enrolment / updation during Sundays.  Our request to give a copy of the same, if any, to represent to the Regional/Circle Administration was not heeded by the SSP, Tirunelveli Division.

2.      Further, it is seen that even after a lapse of three weeks of implementation,  no written instruction was issued to the Postmaster, Palayankottai HO to do enrolment/updation on all Sundays but he was told orally by the SSP, Tirunelveli Division which is against the departmental rules and procedures.

3.      Similarly, there only 5 officials having the biometric authentication and hence working on Sundays sacrificing their family/social responsibilities is against human right / natural justice.

4.      Rule 2(iii) of CCS (Conduct) Rules, 1964 provides that the direction of official superior shall be in writing;where the issue of oral directionbecomes unavoidable, the official superior shall confirm it in writing immediatelythereafter.  But, it is regret to mention that the SSP who is the authority to ensure implementation of the said rules, he himself has violated and set a bad precedence.

5.      Hence, this association urges the SSP, Tirunelveli Division to withdraw the so-called oral orders immediately and restore peace.

Awaiting favourable response….
                                                                
                                              Yours faithfully


                                                                         [S.K.JACOBRAJ]Copy to : 1. Circle Secretary, AIPEU Group C, Tamilnadu Circle, Chennai-600018
                2. Regional Secretary, AIPEU Group C, Dindigul-624002

Friday, August 2, 2019

அன்பார்ந்த தோழர்கள் !தோழியர்களே !
                                                  நன்றி !நன்றி !நன்றி !
ஞாயிறு பணிசெய்ய உத்தரவிட்ட நெல்லை கோட்டநிர்வாகத்தின் தன்னிச்சையான போக்கை கண்டித்து பாளை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் நெல்லை NFPE சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
                         ஆதரவு கரம் நீட்டிய அனைத்து தொழிற்சங்க அமைப்புகளுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
ஆர்ப்பாட்ட முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகளை உறுதியாக நின்று அமுல்படுத்துவோம் .அதன்படி இந்தவாரம் பணிக்கு வரச்சொல்லி பாளையம்கோட்டை போஸ்ட்மாஸ்டர் உத்தரவிட்டால் தங்களது இயலாமையை/உண்மை நிலைமையை /குடும்பசூழ்நிலையை  எழுத்துப்பூர்வமாக ஒவ்வொரு தோழர் /தோழியர்களும் கொடுத்திடவேண்டும் .(அதன் மாதிரி படிவம் தனியே கொடுக்கப்பட்டுள்ளது ) அதனையும் மீறி எந்த ஊழியர்களையாவது கட்டாயப்படுத்தினால் சனிக்கிழமை மாலை நமது முக்கிய நிர்வாகிகள் கூடி அடுத்தகட்ட முடிவுகளை அறிவிப்பார்கள் .
                      நமது தோழர்கள் /தோழியர்களின் உணர்வினை இனியாவது புரிந்துகொண்டு கோட்ட நிர்வாகம் நல்லதொரு முடிவினையெடுத்திட கேட்டுக்கொள்கிறோம் .
                     அடுத்தகட்டமாக சட்டப்போராட்டங்களிலும் முடியாவிட்டால் வேலைநிறுத்தம் என்ற முடிவிற்கு செல்லவேண்டும் என நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்த பட்டதையும் கோட்ட சங்கம்  மேல்மட்ட நமது தலைவர்களிடம் கலந்துபேசி முடிவெடுப்போம் என்பதனையும் தெரிவித்துக்கொக்கிறோம் .
                        நேற்றைய ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றிபெற களப்பணியாற்றிய அஞ்சல்மூன்று /அஞ்சல் நான்கு /மற்றும் GDS நிர்வாகிகளுக்கும் குறிப்பாக NFPE மகிளா கமிட்டி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை செலுத்துகிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                        
                           

Thursday, August 1, 2019

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
               இலாகா விதிகளுக்கு புறம்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் 
பணிசெய்ய அழைக்கும் நெல்லை கோட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளை தடுத்து 
நிறுத்திட வலியுறுத்தி 01.08.2019 இன்று நடைபெறும் ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு மீண்டும் நினைவூட்டுகிறோம் .
 1.தமிழகத்தில் NIGHT POST OFFICE  உள்ள அலுவலகங்களில் மட்டும் .ஆதார் சேவையை ஞாயிற்றுக்கிழமைகளிலும் விரிவுபடுத்திடத்தான் உத்தரவே தவிர -பிற தலைமை அலுவலகங்களில் இதுகுறித்து அறிவிப்பு ஏதும் இல்லை .
2.இதுகுறித்து நமது SSP அவர்களிடம் நேரிடையாக விசாரித்தபோதும் பாளையம்கோட்டையில் ஞாயிற்று கிழமை  இயங்க CPMG அவர்களின் உத்தரவு ஏதும் இல்லை என்று தெரிவித்தார்கள் 
3.பரிச்சார்த்த முறையில் இயங்கவும் மேல்மட்ட உத்தரவு இல்லை 
4.ஞாயிற்றுக்கிழமை ஒரு அலுவலகத்தை இயக்குவதற்கு DG (P)  அவர்கள் தான் உத்தரவு போட முடியும் .
                       இத்தனை விதிமீறல்களை மீறி ஊழியர்களை கட்டாயப்படுத்தி விடுமுறைநாட்களில் பணிக்கு வரவழைக்கும் கொடுமையை தடுத்துநிறுத்தவேண்டியது நமது கடமை .ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றுதான் நம் துயரோட்டும் என்கின்ற வரிகள் உண்மை என நிரூபிப்போம் .நேற்று நமது கண்காணிப்பாளர் அவர்களுக்கு மேலும் ஒருகடிதத்தை 
மெ யிலில் அனுப்பிவிட்டு அதன் நகலை நமது மாநிலசெயலர் மற்றும் மண்டலச்செயலர் ஆகியோர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பிவிட்டோம் .நமது மணடலசெயலர் அவர்களையும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அழைத்தோம் .அதேபோல் நேற்று சென்னையில் இருந்து வந்திருந்த அஞ்சல்நான்கின் தமிழ்மாநிலசெயலர் தோழர் கண்ணன் அவர்களையும் அழைத்திருக்கிறோம் .ஆகவே நமது போராட்டம் வீண்போகாது .நிச்சயம் வெற்றிகான்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது .நமது போராட்டத்திற்கு ஆதரவாக நெல்லையில் உள்ள SRMU- LIC -BANK -ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் -தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் என அழைத்திருக்கிறோம் .அதே போல் நமது பகுதியில் அஞ்சல்நான்கு NFPE GDS மற்றும் AIGDSU சங்கங்களும் ஆதரவு தருகின்றன .மீண்டும் ஒரு புதிய சரித்திரம்  படைப்போம் .
    நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, July 31, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                     ஞாயிற்றுக்கிழமை கட்டாய பணிசெய்ய நிபந்த்திக்கும் 
கோட்டநிர்வாகத்தை கண்டித்து நடக்கும் 01.08.2019 ஆர்ப்பாட்டம் வெல்லட்டும் .
                               நமது செயற்குழுவின் முடிவுகளுக்கேற்ப நாம் கொடுத்த 22.07.2019 கடிதத்திற்கு நமது கோட்ட நிர்வாகம் கொடுத்த பதில் (29.07.2019) நேற்று நமக்கு கிடைத்தது .ஞாயிறு ஆதார் பணி ஒரு 
பரிட்சார்த்த முயற்சி என்று கூறியிருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது .அதேபோல் வேலைப்பளுவுள்ள அலுவலகங்களில் இருந்து ஆட்களை எடுத்து தலைமை அஞ்சலகங்களில் அட்டாச் செய்வதும் ஏற்கமுடியாது -மற்றதெற்கெல்லாம் CPMG /PMG  INSTRUCTIONS என கூறும் நிர்வாகம் HSG 11 மற்றும் HSG 1 OFFICIATING க்கு மட்டும் CPMG அலுவலக உத்தரவை அமுல்படுத்த தயங்குவது ஏன் ? 
                              ஆகவே நேற்றைய கோட்ட அலுவலக கடிதத்திற்கும் நமது கோட்ட சங்கம் சார்பாக பதில் இன்று அனுப்பப்படுகிறது .இதன் நகல்கள் நமது மாநில சங்கத்திற்கும் /மண்டல நிர்வாகத்திற்கும் அனுப்பப்படுகிறது .மாநிலச்சங்கம் உடனடியாக நெல்லை  கோட்ட பிரச்சினைகளில் தலையிட்டு எங்களின் நியாயமான கோரிக்கைகளின் தீர்விற்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
    நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
NFPE
                          ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                                         TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI-627002
No.P3-EC/dlgs dated at Palayankottai- 627002 the 31.07.2019

To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,

            Sub:    Resolution passed in the emergent executive committee
                        Meeting of AIPEU Group ‘C’ Tirunelveli Division – urges
                        Attention of the Divisional Administration – reg

            Ref:    1. This Union Lr No. P-3 Dlgs dated 22.07.2019
                        2. SSP, Tirunelveli Division Lr No. Union/Dlgs/Tvl dated 29.07.2019.

            We regret to place on record our disappointment on the approach of the Divisional Administration in dealing the demands of this union.

1.      It was informed that the Aadhaar Enrolment/updation is being carried during Sundays on experimental basis which is a clear violation of Directorate orders.  This is not adopted anywhere else.  Moreover, even it is told as experimental basis by the Administration, it is seen that more advertisement and distribution of pamphlets to households is being done to make it a permanent one.  Already submitted, the staff particularly female employees are deliberately forbidden to deliver their family duty/social obligation which created an unrest among the working force. Developing such negative attitude among the fellow employees will end in poor performance or non-performance.  This is a basic management theory.  Hence, we once again request the Divisional Administration to cancel the order for Sunday duty once for all as giving compensation off will not serve the purpose.

2.      It is informed that considering medical / humanitarian grounds only attachment of PAs were done which is also incorrect.  Such humanitarian or medical consideration was not extended to all instead a selective set of people are benefitted. Even a physically challenged person was thrown out ruthlessly which was set-aside by the Regional Office on appeal.. We can cite such several example for the in-human approach of the Divisional Administration against selective officials and human approach for other selective officials. Further, attachment of PA to the whim and fancy of the administration is against the rules on the subject.  After implementation of the Transfer and Placement Committee, such discretionary power was withdrawn from the SSPOs., and he can act only as per the recommendation of the TPC.  When the rule position is like this, how can the SSPOs., attach the staff through back door that too for a particular officials?  Hence, we would again request the SSPOs., to detach all such attachments and render justice for the suffering employees.

3.      Further, when establishment statistics is shown as a reason for detaching an official from Mundradaippu, why the same yardstick is not followed for all other offices.  Moreover, during melas hundreds of accounts are being opened and number of policies are being procured, due to utter failure of DARPAN, the officials are facing unexplained agony.   These facts are not considered by the Divisional Administration instead some old statistics is shown as reason is nothing but an insult to the officials who die-hard to get the name and fame for the Division by contributing to the achievement of the target.

4.      No one will accept the attachment of LR PA to Divisional Office as the LR PAs are posted specifically for the purpose of leave arrangement.  Moreover, no volunteers were called for.  After the intervention of this union only, volunteers have been called for to hide the violation on the part of the Divisional Administration.

5.      Instructions for local arrangement of HSG-I / HSG-II has been issued by the Circle Office long back.  Till citing one or other reason for implementing the said orders will definitely affect morality of the officials and will not be useful for the Administration to extract work from them.  Hence, this union requests the Divisional Administration to consider the request of the officials who worked more than 2 or 3 decades in this department and issue favourable orders.

6.      Further, the extended working hours of the POS Counter of Tirunelveli HO has not been modified/cancelled though this union brought to the notice of the SSPOs., about the practical difficulties and other problems.

7.      This association still believes that the SSPOs., Tirunelveli Division will consider the demands and issue favourable orders.  To attract the attention of the SSPOs., on the issues raised above, a demonstration will be held on 01.08.2019 in front of Palayankottai HO.

8.      If the issues are not settled, trade union action will be further intensified and the responsibility lies with the Divisional Administration.

Awaiting favourable response….
                                                                
                                              Yours faithfully


                                                                         [S.K.JACOBRAJ]Copy to : 1. Circle Secretary, AIPEU Group C, Tamilnadu Circle, Chennai-600018
                2. Regional Secretary, AIPEU Group C, Dindigul-624002