...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 31, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                         அஞ்சல் துறை இன்று சேவை துறையாக அறிவிக்கப்பட்டுள்ளது .இதுவரை லாபநட்ட கணக்குகளை காட்டி  GDS ஊழியர்களின் ஊதியக்குறைப்பை அரங்கேற்றிய நிர்வாகம் ,.NET கணக்குகளின் விகிதம் காட்டி அதிகமான கணக்குகளை தொடங்காவிட்டால் உங்கள் அலுவலகம இடம்பெயரும் என எச்சரித்த நிர்வாகம் இரவுபகலாக ஊழியர்களை டார்கெட் நிர்ணயம் செய்து விரட்டி விரட்டி வேலை வாங்கிய நிர்வாகம் இன்று சொல்லுகிறது அஞ்சல் துறை சேவை துறைதான் என்று ..நாம் ஏற்றுக்கொள்கிறோம் .இதுபோன்ற பேரிடர் காலங்களிலும் போர்மேகம் நமது நாட்டில் சூழ்ந்த பொழுதெல்லாம் அஞ்சல் ஊழியர்கள் தன்னார்வத்தோடு APS சேவையை தேர்ந்தெடுத்தார்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது .இந்தியா -பாகிஸ்தான் யுத்தத்தின் போது நமது தலைவர்கள் 08.09.1965 யில் நமது துறை அன்றைய அமைச்சர் சத்ய நாராயண சின்காவை 08.09.1965 யில் சந்தித்து நமது அடையாள பங்களிப்பாக நன்கொடைகளை பிரித்து கொடுத்தார்கள் .கார்கில் போரின் போது அன்றைய வேலைநிறுத்த கோரிக்கைகளை அப்படியே  விட்டுவிட்டார்கள் ..
               ஆகவே அஞ்சல் ஊழியர்கள் யாரும் சேவையை மறந்து வீட்டில் இருக்கவில்லை .இந்த கொடியநோய் தாக்கத்தில் இருந்து நாட்டை காக்கவும் பிரதமந்திரி அவர்கள் கடைபிடிக்க சொல்லும் சமூக விலகலை கடைபிடிக்கவும் தான் தனித்திருக்கிறோம் .
            இப்பொழுதும் எங்கள் கோரிக்கை இந்த தொற்று பரவாமல் தடுக்க கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை எங்களுக்கு வழங்குங்கள் .
              மாவட்ட ஆட்சியர் கூட ரேஷன் கடை பணியாளர்களுக்கு  சமூக இடைவெளியை கடைபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் .ஏன் நமது நிர்வாகமும் இங்குள்ள உபகோட்ட அதிகாரிகளை களத்தில் இறக்கிவிட்டு ஒவ்வொரு அலுவலகத்திலும் 1மீட்டர் இடைவெளியில் கவுண்டர் அமைக்கவும் ஊழியர்க்ளுக்கு தேவையான மாஸ்க் மற்றும் கையுறைகளை வாங்கித்தரவும்  உபகோட்ட அதிகாரிகளை அனுப்பினால் மிக சிறப்பாக அமையும் 
                உபகோட்ட அதிகாரிகள் எல்லா அலுவலகங்களிலும் நமது மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுளதா என ஆய்வு செய்தபின் அவர்கள் திருப்தி அடைந்தபின் அலுவலக பணிகளை செய்ய ஊழியர்களை அனுமதிக்க வேண்டும் ..
            

நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, March 30, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                இன்று நமது அமைச்சர் அவர்கள் அனைத்து CPMG அவர்களுடன் நடத்திய வீடியோ கான்ப் ரென்ஸ் அதனை தொடர்ந்து நமது CPMG அவர்கள் நாளை நடத்தவுள்ள அனைத்து மாநிலசெயலர்கள் கூட்டம் என ஒரு இறுதிக்கட்டத்திற்கு நிர்வாகம் வந்துள்ளதை பார்க்கமுடிகிறது .நமது இலாகா முதல்வர் முதல் நமது CPMG வரை அஞ்சல் சேவைகளை எப்படியாவது நடத்திடத்தான் முற்படுகிறார்களே தவிர ஊழியர்களின் பாதுகாப்பு குறித்தோ அல்லது சாலை போக்குவரத்து முற்றிலும் தடைபட்ட சூழலில் எவ்வாறு ஊழியர்கள் பணிபுரியும் இடத்திற்கு வந்துசெல்வார்கள் என்பதனை குறித்து சிறிதேனும் நினைத்துப்பார்த்ததாக தெரியவில்லை .ஆகவே நாளைய சந்திப்பில் நமது சங்க நிர்வாகிகள் பாதுகாப்பு உபக ரணங்களுக்கு நிதி வேண்டாம் நிர்வாகமே அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கவேண்டும் என்கின்ற நிலையில் உறுதியாக இருக்க வேண்டுகிறோம் .
நமது கோட்டத்தை பொறுத்தவரை சற்றுமுன் நமது கோட்ட அலுவலகத்திற்கு நாம் அனுப்பிய கடிதம் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது 

NFPE
         ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                        TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI-627002

No.P3-P4/dlgs dated at Palayankottai- 627002 the 30.03.2020

To
The Senior Superintendent of Post Offices,
Tirunelveli Division,
Tirunelveli-627 002.

           
Respected Sir,

Sub:     Reported problems in keeping the post offices opened at this harder  situation—Requisition  to ensure  the  functioning of Head Post Offices  in Tirunelveli Division  in tune with the Health Ministry guidelines-Preventive measures to combat COVID 19- Strict adherence of Ministry of Health  and family welfare-reg

                                                            ----------
We wish to bring the following for re-shaping the function of the Post Offices which requires a relook in the wake of Health Ministry’s advice.

The Postal employees including Postmen staff doing both indoor and outdoor duties are subjected to be prone to the deadly virus COVID 19 and they in turn, facilitate the  spread of the virus to their family members.  

In order to over come to this ordeal, the following pre-arrangement is requested in the interest of staff.

1.    Spraying of water mixing with bleaching powder around the office.

2.    Supply of  Masks, sanitizer, thermal scanning etc.
                       
3.    Overall cleaning of outdoor premises inside the compound by removing all waste papers and debris, periodically.

4.    Cleaning of ceiling fans by removing dust crept on the blade using soap oil

5.    Cleaning of tube lights  by removing dust crept on the surface using soap oil

6.    Floor of the office premises should be cleaned using dettol etc at periodical intervals.

7.    At entry level, arrangement for hand wash may please be made.   
      

8.    As the movement of private vehicles have been banned, transport facility may kindly be provided for the staff from their residence and back, since, limited number of staff only vg will attend duty.

            It is requested that a speedy action may kindly be taken at your end to ensure the safety of staff as well as public.  Also, permission may kindly be granted for functioning of H.O.s only with skeletal staff to handle counter transactions SB and MPCM. Otherwise it is requested to allow the staff to stay at home upto the National Curfew come to end.
           A line in reply will be very helpful to our Postal Employees since they have represented expressing concern over the safety of their life.

                   Thanking you, Sir,
                 
                                                                 Yours faithfully,


S.K.BATCHA,                                                                        S.K.JACOB RAJ,    
DIVISIONAL SECRETARY-,                              DIVISIONAL SECRETARY,                                

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                     பணிக்கு செல்லலாமா ? எப்படி செல்வது ? நமது சங்கங்கள் இதில் என்னநிலை எடுக்கிறது என்று நேற்று நள்ளிரவு வரை நமது தோழர்கள் வாட்ஸாப்ப் (NELLAI NFPE ) யில் ஒரு ஆரோக்கியமான காலத்திற்கு தேவையான விவாதங்களை பகிர்ந்துவந்தனர் .அனைவருக்கும் கோட்டசங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்திக்கொள்கிறோம் .
1ஏற்கனவே சொன்னதுபோல் இது வேலைநிறுத்த அறிவிப்பல்ல --பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டோ அல்லது அரசின் நிர்பந்தத்திற்கு உடன்பட்டோ பணிக்கு செல்லுங்கள் என அறிவிப்பதற்கு இது வேலைநிறுத்தம் அல்ல 
2.உலகளவில் மாபெரும் அழிவை சந்திக்கும் ஆபத்தில் இருந்து நமது நாடு காப்பாற்றப்படவேண்டும் என்று மத்திய அரசும் மாநில அரசும் ஊரடங்கு மற்றும் தனித்திருப்பதை அறிவித்துள்ளது .
4.நேற்றுவரை நமது ஊழியர்கள் வேலைக்கு செல்லவேண்டும் என்ற நிலை எடுக்கவில்லை .அஞ்சல் வாரியம் அறிவித்த அஞ்சல் சேவையும் அத்தியாவசிய சேவை பட்டியலில் இருக்கிறது என்றும் அதனடிப்படையில் பல மண்டலங்களில் PMG அலுவலகம் கண்டிப்பாக 30.03.2020 முதல் பணிக்கு வரவேண்டும் என உத்தரவை பிறப்பித்ததில் இருந்து ஊழியர்களுக்கு வரும் சந்தேகங்களை விளக்கவேண்டியது நமது கோட்டசங்கத்தின் கடைமை என்பதற்க்காக இந்த விளக்கத்தை கோட்டசங்கத்தின் சார்பாக தெரிவிக்கிறேன் .
5.அஞ்சல் துறை ESSENTIAL சர்விஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் நாம் வேலைக்கு செல்லாவிட்டால் என்னாகும் ஆகவே நான் வேலைக்கு செல்கிறேன் என்று சிலர் முடிவெடுக்கிறார்கள் ---அதற்கு முதலில் சின்ன விளக்கம் -எப்பொழுது நாட்டில் அத்தியாவசியசேவையை நிலைநாட்டவேண்டிய அவசியம் வருகிறதோ அப்பொழுது மத்தியஅரசு அவசர சட்டமான ESMA (ESSENTIAL SERVICE MAINTENANCE ACT  ) என்ற  சட்டத்தை பிரயோகித்தபடுத்தும் .ஆனால் இங்கு மத்திய அரசுதான் நம்மை தனிமையில் இருக்க உத்தரவு பிறப்பித்துள்ளது .ஆகவே ESSENTIAL சர்விஸ் என்பதற்காக மட்டுமே பணிக்கு செல்லலாமா என்பதை நீங்களே முடிவெடுத்துக்கொள்ளலாம் 
6.ஓரிருநாட்களுக்கு முன்பு நமது கோட்டநிர்வகம் வேண்டுகோள்விடுத்த மாதிரி இந்தமாத சம்பளம் பென்ஷன் கிடைக்கவேண்டும் ஆண்டு இறுதியென்பதால் வந்துள்ள TA பில் மருத்துவ பில் PLI /RPLI ஊக்கத்தொகை வழங்குதல் இவைகளுக்கு ஊழியர்கள் தேவை என்றார்கள் நாமும் சம்பந்தப்பட்ட பிரிவு ஊழியர்களை தொடர்புகொண்டு எந்த பின்னடைவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள உதவுகிறோம் என்று சொல்லியுள்ளோம் .
7.இதில் நமது தொழிற்சங்கத்தின் நிலை என்னவென்றால் அரசாங்கத்தின் அறிவிப்பை நீங்கள் பார்த்திருப்பீர்கள் =இந்தியா மூன்றாவது கட்டத்தில் நுழைகிறது -சமூக பரவலை தடுக்கவேண்டும் இல்லாவிட்டால் நிலைமை மோசமாகும் என்கிறார்கள் .10000படுக்கைகள் தயார் ரயில் பெட்டி பள்ளி கல்லூரி இவைகளெல்லாம் மருத்துவமனையாக மாற்றப்படுவது என்பதெல்லாம் எதற்காக ? 
8.இலாகா முதல்வர் உத்தரவு -ஹெல்த் அமைச்சக வழிகாட்டுதல்படி 
பணிக்கு வரும் அஞ்சல் ஊழியர்களுக்கு நமது நிர்வாகம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்துள்ளதா ?
9.பணிசெய்யும் இடத்திலும் தூய்மை பராமரிக்கப்படவேண்டும் நமது இருக்கையை சுற்றிலும் சுத்தம் பேணவேண்டும் என்பதற்காக நமது நிர்வாகம் செய்தது என்ன ?
10.எல்லா அலுவலகமும் வேண்டாம் பெரிய அலுவலகங்களை திறந்தால் கூட வாடிக்கையாளர்க்கும் கவுண்டர் ஊழியருக்கும் தேவையான இடைவெளியை அமைக்கப்பட்டுள்ளதா ?
11.வேலைக்கு செல்லும் ஊழியர்கள் ATTENDANCE பதிவில் கையெழுத்துபோடும்போதே அவர்களுக்கான தரமான மாஸ்க் .கையுறை கிருமிநாசினிகளை நிர்வாகம் தயார்நிலையில் வைத்துள்ளதா ?
12. ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்படும் நிலையில் ஊழியர்களை பணிக்கு அழைத்துவர வாகன வசதிகள் அல்லது வாகன அனுமதி -அடையாளஅட்டை  ஏதாவது உண்டா ?
             இதைத்தான் தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திடம் கேட்கிறது .ஆகவே .சமூக தொற்று நம்மால் பரவிட நாமும் காரணமாக இருந்துவிடக்கூடாது .பணிக்கு செல்லவேண்டும் என்று விரும்புகிறவர்களை பாதுகாக்கவும் தொழிற்சங்கம் பல்வேறுவகையில் முயலுகிறது =விடுப்பில் இருக்கிறவர்களுக்கும் தேவையான வழிகாட்டுதல்களை தொழிற்சங்கம் கொடுக்கிறது .
     நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கேற்ப தங்கள் முடிவுகளை சுதந்திரமாக எடுக்க உங்கள் அனைவருக்கும் உரிமை உண்டு .எந்நேரமும் உங்களுக்கான விளக்கங்களை /வழிகாட்டுதலை கொடுக்க நாங்கள் தயார் !
கொரனவை விரட்டுவோம் ! சமூகத்தை பாதுகாப்போம் !
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, March 28, 2020


NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION
GROUP-C, POSTMAN&MTS
TIRUNELVELI DIVISION-627001
No.Staff/Dlgs                                                                                      Date:27 03.2020
                                                                                   
To
The District Collector,
Tirunelveli District,
Tirunelveli -627009

Respected Madam

Sub:     Request to issue instructions to the Sr.Superintendent of Post Offices, Tirunelveli Division to open Head Post Offices only with limited staff – Reg.

            The Government of India has imposed National Lockdown for 21 days from 24.03.2020 to avoid the spread of Corona Virus Vide Ministry of Home Affairs order no.40-3/2020-DM-I (A) dated 24.03.2020. As per Para 1 of Annexure I of the above said order, the postal service classified as “essential service” and exemption given to the post offices from lockdown. Hence our Postal Directorate has ordered to give minimum service to the public by opening of post offices with limited staff. Butin contrary to that, many postal divisions in Tamilnadu Circle have ordered to open all the post offices. In Tirunelveli  Postal Division also, oral order has been issued to open all the post offices and all postal  staffs are compelled to attend the dutyby not even providing proper transportation facilities. Due to the mass curfew all over Tamilnadu, our postal staff arestruggling toreach officeto attend duty on compulsion by the administration due to non availability of public transportation.

            Sir, it is submitted that there is no mail transmission due to the absence of transport facility like Train/Bus etc. Further, ATM is provided with sufficient cash even in Post Office ATM also, there is no need to open all post offices for financial transactions.

            It is also submitted that most of the post office buildings are very small and counter halls do not have sufficient space. Hence the social distancing between the customer and staff isnot a possible one. It is not at all possible to accommodate the customers with social distancing.  Further it is not possible to make special arrangement at all post office campus to take care of either the staff or customer when they feel ill suddenly. This might risk the life of both the staff andthe customer. Also it is not possible to provide police security for issues like crowd management and other law &order matter.

Hence, if all the Post offices are opened and inviting the crowd, instead of extending any service to the public, it will make disorder to the curfew promulgated and leading to wide spread of Corona, throughout the country even in a single day. Simply saying, all post offices would be made in to hubs for Corona Spread.

By considering all the above facts and the risk of outbreak of spread of the deadly CORONA virus among the staff and public, our NFPE Postal Service Union, Tirunelveli Postal Division requests our Tirunelveli  District Collector that necessary order may kindly be issued to open Head Post Office only with limited staff and to close all the remaining post offices in Tirunelveli  District temporarily in the interest of saving the lives of the employees and general public.
            Once again, I pray your good self, Sir, to kindly consider our request sympathetically and issue favourable orders please.

                                           Thanking you madam


S.K.BATCHA                                                                                                (S.K.JACOBRAJ)                                                                       
Divisional Secretary                                                                        Divisional Secretary
AIPEU POSTMEN&MTS                                                                AIPEU P3
Tirunelveli =627001                                                                         Tirunelveli-627001  
9976785913                                                                                        9442123416
27.03.2020
Tirunelveli-627001                                                                                                  
                                                                       
                                                                                                         
                                                                                                           
                                                                                                         


Friday, March 27, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                      கொரானா தொற்று தடுப்பில் இருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி தனித்திருத்தல் ' சமூக விலகல் ஒன்றே தீர்வு 
                   பிரதமர் SOCIAL DISTANCING அவசியம் என்கிறார் நமது துறையோ SOCIAL RESPONSIBILITIES என்று கூறுகிறது .
                  அஞ்சல் துரையின் 25.03.2020 உத்தரவிற்கு 26.03.2020 உத்தரவிற்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை .நமது துறையின்  கடமையுணர்விற்கு நாம் எதிரானவர்கள் அல்ல .ஆனாலும் வீட்டைவிட்டு வெளியே வந்து இந்த கொரானா தொற்று பரவுவதற்க்கு நாமும் காரணமாக இருந்துவிடக்கூடாது என்ற நமது மற்றும் நமது சமூக நலன் சார்ந்த விஷயங்களை அலட்சியம் செய்திடவும் முடியாது .ஏற்கனவே 31.03.2020 வரை விடுப்பில் இருப்பவர்கள் அச்சப்படத்தேவையில்லை என்று நமது சங்கங்கள் உறுதியிட்டு தெரிவித்திருக்கின்றன .ஆனாலும் அஞ்சல் வாரிய உத்தரவை அந்தந்த மாநிலங்களில் /மண்டலங்களில் /கோட்டங்களில் /உப கோட்டங்களில் எப்படியாவது அமுல்படுத்திடவேண்டும் என்கிற ரீதியில் அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கிறார்கள் ..நேற்று நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் பேசும்போதும் மினிமம் ஊழியர்களை வைத்து மினிமம் அலுவலகங்களை இயக்கப்போகிறீர்களா ?இல்லை தலைமைஅஞ்சலகங்களில் மட்டும் இயக்கப்போகிறீர்களா ?என கேட்டோம் .கோட்ட நிர்வாகமும் ஊழியர்களின் உயிர் காக்க உத்தரவாதம் கொடுக்க முடியாது .நமது அரசும் நமது நாட்டின் மக்கள் தொகையை மனதில் கொண்டே மற்றநாடுகளில் பரவிய வேகத்தில் நமது நாட்டில் பரவினால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்துதான் தனித்திருங்கள் என மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறது .இது எதோ ஒருசங்கம் நடத்துகிற வேலைநிறுத்தம் மாதிரி நமது தோழர்கள் வேலைக்கு செல்லுங்கள் நமக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிக்கொள்வதெல்லாம் சரியான வழிகாட்டுதல்கள் இல்லை .
ஆகவே விடுப்பு விண்ணப்பித்தவர்கள் அச்சமடைய தேவையில்லை .யாரையும் கட்டாயபடுத்தி வேலைக்கு அழைக்கவும் நெல்லைக்கோட்ட நிர்வாகமும் விரும்ப வில்லை .
               இந்த வழக்கில் உங்களுக்கு நீங்களே நீதிபதி --நாட்டின் இளவரசர் முதல் ஏழைக்குடியானவன் வரை அரசன் முதல் ஆண்டி வரை நோய் தொற்று ஏற்பட்டுவிட்டால் ஏற்படும் நிலை குறித்து பார்த்திருப்பீர்கள் !படித்திருப்பீர்கள் !
ஊரடங்கு 14.04.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது -ஆபத்தினை உணராமல் அரசு இந்த அறிவிப்பை அறிவித்திருக்காது .
தனித்திருப்போம் ! துணிந்திருப்போம்! தேசம் காக்க நாமும் வீட்டிலிருப்போம் !
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


Thursday, March 26, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                    இல்லத்தில் இருப்போம். நமது நிலையில் மாற்றம் இல்லை.
                      இன்று முதல் அலுவலகம் செல்வது குறித்து நேற்று நமது கோட்ட சங்கம் அறிவித்த முடிவான பணிக்கு செல்லவேண்டாம் என்பதில் உறுதியாய் இருங்கள் .இன்று அகிலஇந்திய அளவில் NFPE -FNPO சம்மேளன தலைவர்கள் நமது இலாகா முதல்வரை சந்திக்கிறார்கள் .முடிவு ஊழியர் தரப்பிற்கு சாதகமாக வரவில்லை என்றால் வேலைநிறுத்தம் என்கிற அளவிற்கு முடிவுகள் இருக்கும் என தெரிவித்துள்ளார்கள் .தமிழகத்திலும் NFPE P 3-FNPO -P3 மாநிலசெயலர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள கடிதத்தை பார்த்திருப்பீர்கள் ...IP சொல்கிறார் ASP சொல்கிறார் என்றால் அது அவர்களுக்கு நிர்வாகம் கொடுத்துள்ள கட்டளை -எப்படியும் அலுவலகத்தை திறந்துவிட்டோம் என அவர்கள் மேலதிகாரிகளுக்கு சொல்வதற்காக கடைபிடிக்கும் ஒருநடைமுறை -இது நமக்கு ஒன்றும் புதிதல்ல =காலவரையற்ற வேலைநிறுத்த நாட்களில் நிர்வாகம் கொடுக்காத அழைப்பா ? நெருக்கடியா ? 
                     விடுப்பு விண்ணப்பித்தவர்கள் /இனிதான் விடுப்பு விண்ணப்பிக்கிறவர்கள் என அனைவரும் தங்கள் இல்லத்திலே தங்கியிருங்கள் ..கோட்ட  அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தால் தயங்காமல் பதில் கூறுங்கள் .
நேற்றைய நமது முடிவில் மா ற்றம் இல்லை .
மேற்கொண்டு தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை /சந்தேகங்கள் /நிர்வாக நெருக்கடிகள் இருந்தால் தயங்காமல் எந்தநேரமும் கோட்ட சங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் .கோட்ட அலுவலகத்தை போல நமது சங்கத்திற்கும் 24 மணிநேரம் இயங்கும் கண்ட்ரோல் ரூம் செயல்படுகிறது என்பதனை  நினைவில் கொள்ளுங்கள் .உங்களுக்குரிய வழிகாட்டுதல்கள் நிச்சயம் கோட்ட சங்கத்தால் வழங்கப்படும் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, March 25, 2020

அன்பிற்கினிய தோழர்களே ! தோழியர்களே !
                           இன்று பிற்பகல் முதல் அஞ்சல் வாரியத்தின் 25.03.2020 தேதியிட்ட உத்தரவை குறித்து விவாதித்து வருகிறோம் .இதுகுறித்து நமது கோட்ட சங்கம் சார்பாக நமது மாநில /மண்டல /அகிலஇந்திய தலைவர்களிடம் பேசிவருகிறோம் .நமது கோட்ட சங்கம் சார்பாக நமது தோழர்கள் அஞ்சல் எழுத்தர் ,தபால்காரர் .MTS.மற்றும் GDS ஊழியர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் 
1.ஏற்கனவே நாம் 31.03.2020 வரை விடுப்பு (எதாவது ஒருவகை ) விடுப்பு விண்ணப்பித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து முறைப்படி RELIVE ஆகியிருக்கிறோம் அல்லது RELIVE செய்யப்பட்டிருக்கிறோம் .
2.நேற்றைய நமது கோட்ட அலுவலக உத்தரவு படி தலைமை அஞ்சலகம் தவிர அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
3.[பாரத பிரதமர் 21 நாட்கள் தனித்திருக்க சொல்லியிருக்கிறார் .
.4..நமது மாநில அரசும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது 
5.நோயின் தாக்கம் குறித்த செய்திகள் கவலை அளிக்கும் விதத்தில் வந்துகொண்டிருக்கிறது 
6.நமது அகிலஇந்திய சங்கம் சார்பாக நாளை 11 மணிக்கு இலாகா முதல்வருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது .
   இந்த பின்னணியில் நமது ஊழியர்கள் அலுவலக பணிக்கு கோட்ட நிர்வாகத்தால் அழைக்கப்பட்டால்  யாரும் செல்லவேண்டாம் .தனிப்பட்ட முறையில் IP /ASP என யார் தொலைபேசியில் அழைப்புவிடுத்தாலும் நிராகரியுங்கள் ..
இது நமது உயிர் மட்டும் சம்பந்தபட்ட பிரச்சினையல்ல --சமூக பிரச்சினை .பாரத பிரதமரின் அழைப்பை ஏற்று தனித்திருப்போம் நாட்டை பாதுகாப்போம் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 



Tuesday, March 24, 2020

ஒருபக்கம் மரணம் துரத்துகிறது -மறுபக்கம் அரசும் அனைத்து வாசல்களையும் மூடுகிறது --அத்தியாவச சேவை அஞ்சல் துறை என்று அஞ்சல் அதிகாரிகள் இன்னும் மார்தட்டுவது எதற்காக ?
                                    உயிரும் பொதுவுடமை தான் !
வீட்டுக்குள் இரு என்று 
அரசு சொல்கிறது 
வேலைக்கு வா என்று 
அதிகாரி சொல்கிறார் 
கடிதம் கொண்டுவரவேண்டாம்  என 
தபால்காரர் துரத்தப்படுகிறான் 
பட்டுவாடா செய் என்று 
அஞ்சல் வாரியம் சொல்கிறது 
பெரிய அலுவலகத்தை திறக்க சொல்லி 
பெரிய அதிகாரி சொல்கிறார் 
மாறிமாறி அலுவலகம் வரச்சொல்லி 
உத்தரவு தருகிறார் 
உயிரும் ஒரு உடமை என்பதை 
உணராத நிர்வாகம் 
பொதுவுடமை சொத்துகளில் -மனித 
உயிரும் ஒன்று என்பதனை உணர்த்துவோம் 
------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லை கோட்ட நிர்வாகத்திற்கு நெல்லை கோட்ட சங்கம் கொடுத்துள்ள அவசர கடிதம் 
NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                               TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-ORG  / dated at Palayankottai- 627002 the 24.03.2020

To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,
                 Sub: lock down all Post Offices in Tirunelveli Division-reg

            In view of severe Corona Outbreak and invocation of Section 144 by Tamilnadu Govt, it is requested either to lock down all Post Offices or grant leave to all officials who applied for.

We request you to save our employees



             
                         Yours faithfully



[S.K.JACOBRAJ]


அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
   மாநில சங்க அறிவிப்பின் படி  இந்த அறிவிப்பை கோட்ட சங்கம் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது .
 அஞ்சல் துறை குறித்து அச்சப்படவேண்டாம் -நம்மை நாம் பாதுகாத்து கொள்வோம் !
நம்மிடம் வாக்குறுதிகளை அளித்த படியே சிபிஎம்ஜி இன்று ஆணையிட்டதன் படி ஒவ்வொரு கோட்டத்திலும் முக்கியமான சில அலுவலகங்கள் மட்டும் திறந்து வைப்பது என்று முடிவை அறிவித்து இருக்கிறார்கள். முழுமையாக அஞ்சலகம் மூடப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையினை பொதுச்செயலர் இடம் மீண்டும் வற்புறுத்தி இருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம் .
பணிக்கு வர முடியாதவர்கள் காரணம் சொல்லி மெயில் அனுப்பி வீட்டில் தங்கிடவும்.
மூன்று காரணங்களைச் சொல்லலாம் .
ஒன்று வயது ஐம்பது வயதுக்குமேல் ஆகிவிட்டது .
இரண்டு உடல் நலம் சரியில்லை பாதுகாப்பாக வெளியில் வரமுடியவில்லை. மூன்று போக்குவரத்து வசதிகள் இல்லை
 இவைகளைக் காட்டி உங்களுடைய விண்ணப்பத்தை அளித்திடவும்
நிலைமை சரியானதும் பேசி தீர்வு காண்போம்.
கவலையினை கைவிடுங்கள்.
உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள். கொரோனாவை முதலில் விரட்டியடிப்போம்.
நன்றி

A.வீரமணி
 மாநிலச் செயலர்.                   அஞ்சல் மூன்று
--------------------------------------------------------------------------------------------------------------------நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, March 23, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                              உலகமே மரண பீதியில் உழன்றுகொண்டிருக்கிறது .தனது நாட்டையும் தனது மக்களையும் இந்த பேரழிவில் இருந்து பாதுகாத்திட நமது மத்திய அரசும் மாநில அரசுகளும் இந்த நோய் தொற்றை முற்றிலும் ஒழித்திட நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன .மக்களின் சுய ஊரடங்கு பல்வேறு மாநிலங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது .அத்தியாவசிய சேவையயை தவிர மற்ற துறைகளில் எல்லாம் 31.03.2020 வரை ஊழியர்கள் வீட்டிலே .விடுப்புடனோ அல்லது வீட்டிலே பணி என்கின்ற நிலையில் இருந்திட அனுமதிக்கப்பட்டுள்ளது . .
மக்களைச் சந்திப்பதையே அலுவலாய்க் கொண்ட தபால்காரர்கள்
அன்றாடம் மக்கள் வந்து போகும் கவுண்டரில் பணிபுரியும் ஊழியர்கள் 
மெயில் பைகளை சுமந்து செல்லும் MTS 
ஊழியர்கள் 
மருத்துவ வசதி அற்ற கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் 
இவற்றையும் தாண்டி இலக்கை எட்டுவதற்காக  சேமிப்பு வங்கி கணக்குகளுக்காக
வீதிக்கு வரும் பிற  ஊழியர்கள் என நோய்த்தொற்று  அபாயத்தில் அஞ்சல் ஊழியர்களும் பணியாற்றுகின்றனர்.
                          நாட்டின் மிக அத்தியாவசிய அரசு சேவையான ரயில்வே தனது சேவைகளை முற்றிலும் நிறுத்தி விட்ட சூழலில் நமது அஞ்சல்துறை அதிகாரிகள் மட்டும் மேளா என்றும்,.வணிக விரிவாக்கம் என்றும் , ஆதார், பாஸ்போர்ட் சேவை என்றும் பொதுமக்கள் பெருமளவு  கூடும் நிலைகளை உருவாக்கி தேசத்தின் பாதுகாப்புக்கும் , ஊழியர்பாதுகாப்புக்கும் எதிரான செயல்களைச் செய்துவருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
                        நாடுமுழுவதும் 75 மாவட்டங்கள் தமிழகத்தில் 3 மாவட்டங்கள் தனிமை படுத்தப்பட்டுவிட்டன .மின்வாரியமும் பழைய அடிப்படையிலே இந்த மாத கட்டணம் செலுத்தலாம் என அறிவித்துள்ளது .
இதற்கிடையில் அஞ்சல் வாரியமும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவித்தபோதிலும் கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் இன்னும் மேளா மெகா மேளா கனவில் மிதக்கிறார்கள் .வேலையை முடித்துவிட்டு விரைந்து வீட்டிற்கு செல்லமுடியாமல் நெட்ஒர்க் பிரச்சினை அனைத்து C&Bஅலுவலக SPMS ஊழியர்கள் திண்டாடுகிறார்கள் .
                           இந்தப்பின்னணியில் அஞ்சல்துறையிலும் வருகிற 31.03.2020 வரை பணிகளை நிறுத்திவிடவும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு விடுமுறையை அறிவிக்கவும் நமது NFPE இயக்க தலைவர்கள் இன்றுகாலை 11 மணிக்கு அஞ்சல் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் .
                              ஆகவே இந்த சூழ்நிலையில் நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் குறித்து மாநில /மத்திய சங்க வழிகாட்டுதலுக்கு காத்திருக்கிறோம் .பேருந்து /ரயில் போக்குவரத்து பாதிப்பால் பணிக்கு வர இயலாத ஊழியர்கள் கோட்ட அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு தகவல்களை தெரிவிக்கவும் .
    நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 



Saturday, March 21, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                        *கொரானா வைரஸ் அச்சுறுத்தலை முன்னிட்டு மத்திய பயிற்சி மற்றும் பணியாளர்கள் அமைச்சகம் 20.03.2020 தேதியிட்ட உத்தரவு படி 50 வயதிற்கு மேலுள்ள ஊழியர்கள் சிறுநீரக பிரச்சினை சுவாச பிரச்சினை மற்றும் உயிருக்கு அச்சுறுத்தும் நோய்வாய்ப்பட்டவர்கள் ஏப்ரல் 4 ம் தேதிவரை மருத்துவ சான்றிதழ் இல்லாமல் COMMUTTED LEAVE எடுக்கலாம் என்று கூறியுள்ளது .
                   *தென் மண்டலத்தில் நடைபெறவிருந்த அனைத்துவிதமான மேளாக்களும் நிறுத்தப்படுவதாக தென்மண்டலஅலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது *
               *நேற்று 20.03.2020 அன்று நமது கோட்ட சங்கம் சார்பாக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது .RT விண்ணப்பிக்கும் முன் நமது உறுப்பினர்கள் கோட்ட சங்க நிர்வாகிகளிடம் சந்தேகங்கள் இருந்தால் விளக்கங்கள் கேட்டு பெறலாம் .நேற்றைய கூட்டத்தின் நோக்கம் தனி ஊழியர்களுக்கான சிபாரிசுக்காக நடத்தப்படவில்லை .RT குறித்த வழிகாட்டுதல்கள் சீனியாரிட்டி மற்றும் நமக்குள்ளே ஒரு கலந்தாய்விற்க்காக மட்டுமே நடந்த ஒருகூட்டம் .அனைவருக்கும் அவரவர் சீனியாரிட்டி தெரிந்திருக்கும் அதனடிப்படையில் விருப்ப இடங்களை தெரிவு செய்திட  வழிகாட்டப்பட்டது .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -கோட்ட செயலர் நெல்லை 

Thursday, March 19, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 
  வணக்கம் .
                           RT சம்பந்தமான ஆலோசனை கூட்டம் 
நாள் -20.03.2020 வெள்ளிக்கிழமை  மாலை 6 மணி 
இடம் -திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் 
தலைமை -தோழர் T .அழகுமுத்து அவர்கள் (கோட்ட தலைவர் )
பொருள் -- RT-2020 சம்பந்தமாக 
                                  அனைவரும் வருக ! வரமுடியாத தோழர்கள் தங்கள் கருத்துக்களை கோட்ட செயலரிடமோ அல்லது தங்கள் பகுதி முன்னனி தோழர்களிடமோ தெரிவிக்கவும் .
                                                       நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                  இந்த ஆண்டிற்க்கான சுழல் மாறுதல் உத்தரவிற்க்கான அறிவிப்புகள் நேற்று(18.03.2020)  கோட்ட அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது .எழுத்தர்களில் 50 ஊழியர்கள் TENURE முடிக்கிறார்கள் .அவர்களுக்கு 51 இடங்கள் காட்டப்பட்டுள்ளன .LSG ஊழியர்களில் பணிஒய்வு நீங்கலாக 29 ஊழியர்களுக்கு 66 இடங்கள் காட்டப்பட்டுள்ளன .ஆகவே Timescale எழுத்தர்களை  பொறுத்தவரை 
மிக கவனமாக விருப்ப இடங்களை தெரிவு செய்யவேண்டிய அவசியம் உள்ளது .கோட்ட மட்டத்தில் உள்ள சீனியாரிட்டி பட்டியல் 01.07.2018 இன் படி DGL எழுத்தர்களுக்கும் LSG ஊழியர்களுக்கு 10.07.2019 அன்று CPMG அலுவலகம் வெளியிட்ட CGL படி சீனியாரிட்டி குறிக்கப்பட்டு உங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளோம் .(இரண்டு LSG ஊழியர்களுக்கான சீனியாரிட்டி மட்டும் விடுபட்டுள்ளது பொறுத்தருள்க ) உங்களுக்கு நன்றாக தெரியும் .இடமாறுதல்களை பொறுத்தவரை சீனியாரிட்டி மிக சரியாக கடைபிடிக்கப்படும் என்றும் அதில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் நிச்சயம் அப்படிப்பட்ட இடமாறுதல்கள் குறித்து மண்டல அலுவலகத்திற்கு மேல்முறையீடு செய்யவும் நமக்கு வசதிகள் உள்ளது .
                    இந்த அறிவிப்பில் ஏதேனும் விடுதல் இருந்தால் உடனே தெரிவிக்கவும் .நேற்றே சில தோழர்கள் தெரிவித்தபடி தலைமை அஞ்சலகத்தில் உள்ள LSG PA பதவிகள் குறித்து தனித்தனியாக தெரிவிக்கவேண்டும் என்றுகூறினார்கள் (.உதா) .CPC PA  BPC PA என தனியாக அடையாளம் காட்டப்படவேண்டும் என்றார்கள் .காரணம் BPC LSG PA பாளையங்கோட்டையில் வேலைநேரம் இரவு 8 மணி வரை இருக்கும் . .அதற்காக நமது கோட்ட சங்கம் தனியாக கடிதம் எழுதவுள்ளது  .மேலும் TENURE முடிக்காத ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம் அதில் ஏதும் தடையில்லை .நான் ஏற்கனவே விண்ணப்பித்திருக்கிறேன் என்பது கிடையாது 
EXTENSION கேட்டு விண்ணப்பிக்க கடைசிதேதி 24.03.2020 
விருப்ப விண்ணப்பங்கள் கோட்ட அலுவலகத்தில் சேரவேண்டிய கடைசிநாள் 31.03.2020 
அறிவிப்பில் குறைகள் இருந்தால் தெரிவிக்க வேண்டிய கடைசிநாள் 24.03.2020 
குறிப்பு -கண்டிப்பாக மூன்று விருப்ப இடங்களை ORDER OF PREFERENCE அடிப்படையில் அனுப்பவும் .
மேலும் விவரங்களுக்கு கோட்ட செயலரை தொடர்பு கொள்ளவும் .
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


 

Wednesday, March 18, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                              விலைமதிப்பில்லாத மனித உயிர்கள் இங்கே அலட்சியம் செய்யப்படுகிதா ?
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, குறிப்பாக அஞ்சல் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அஞ்சல் துறை நிர்வாகம் எடுக்க வலியுறுத்தி  NFPE சம்மேளனம் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.பலமாநிலங்களில் ஆதார் பணிகள் மறு உத்தரவு வரும்வரை நிறுத்தப்பட்டுள்ளது 
  இதுகுறித்து நமது மாநிலச்சங்கமும் CPMG அவர்களுக்கு 12.03.2020 அன்று IPPB ஆதார் உள்ளிட்ட பணிகளை நிறுத்திவைத்திட கோரியுள்ளது .ஆனால் நிர்வாகம் எதற்காக காத்திருக்கிறது என்று தெரியவில்லை .இந்த சூழ்நிலையில் நமது கோட்டத்தில் புதிதாக பயிற்சியில் இருக்கும் ஊழியர்களை IPPB உள்ளிட்ட பணிகளுக்கு கேன்வாஸ் செய்யச்சொல்லி உத்தரவு போடுகிறார்களாம் ?
உலகமே இங்கு உயிர் காக்கும் போராட்டத்தில் நிற்கும் போது இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்வது ஆரோக்கியமான 
செயலா ? 
                                 உழைப்பை சுரண்டீனார்கள் 
                                 ஏற்றுக்கொண்டோம் 
                                  உரிமையை  பறித்தார்கள் 
                                  எதிர்த்து நின்றோம் 
                                  உதிரம் கேட்டார்கள் 
                                  உதவியாய்  தந்தோம் --இன்று 
                                  உயிரையும் கேட்கிறார்கள் 
                                  என்ன செய்ய ? எங்கே சொல்ல?
  இதுகுறித்து நமது கோட்ட சங்கம் சார்பாக கோட்ட நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்கு ..
NFPE
 ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                   TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-org  dated at Palayankottai- 627002 the 18.03.2020

To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,
           
Sub: Request to stop all Melas, Aadhar Camps and Account opening drives in Tirunelveli Division - reg

Everyone is aware of the Corona Outbreak that hits across the country and major shutdown is being taken place in several states. Yesterday, Chief Minister of Tamilnadu announces several precautions and warned the people against the danger of Novel Corona virus (COVID-19).

When this is the situation across the state, till the Divisional Administration is not taking anything seriously and playing with life of the staff.

Hence, this union urges to stop all Melas, IPPB Accounts opening drives and Aadhaar Camps immediately failing which we have no other go except to launch trade union action.

A line in reply is appreciated.


             
                         Yours faithfully


[S.K.JACOBRAJ]



Tuesday, March 17, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                                       மீண்டும் NELLAI NFPE 100/100 
புதியதாக தபால்காரராக பதவிஉயர்வு பெற்றுள்ள 29 தோழர்களில் 5 தோழர்கள் SORTING ASSISTANT ஆக சென்றது  3 MTS நமது உறுப்பினர்கள் போக மீதமுள்ள 21 ஊழியர்களும் நேற்றே  நமது பேரியக்கமான NFPE யில் தங்களை இனைத்து கொண்டனர் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம் .ஏற்கனவே இந்தமாதம் புதிதாக MTS ஆக பதவியேற்ற மூன்று தோழர்களும் நம்மிடம் உறுப்பினர்கள் ஆனார்கள் .இந்த இமாலய வெற்றியை பெற்றுத்தர ஒத்துழைத்த அனைத்து தோழர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
  நமது கோட்டத்தில் தபால்காரர் பதவிகள் காலியாகவுள்ள இடங்கள் கீழே (உத்தேசமாக ) கொடுக்கப்பட்டுள்ளது .புதிய தோழர்கள் தங்களுக்கு எந்த அலுவலகம் வேண்டும் என்பதனை இன்று எழுத்துபூர்வமாக கொடுக்க வசதியாக இதை பயன்படுத்திக்கொள்ளலாம் .மூன்று இடங்கள் கேட்டாலும் தங்களுக்கு தேவையான இடத்தை முதலாம் விருப்பமாக கொடுக்க கேட்டுக்கொள்கிறோம் .
                                      நெல்லை மாநகர் பகுதி 
பாளையம்கோட்டை HO--7 திருநெல்வேலி HO-7  பெருமாள்புரம் -7 
மகா ராஜநகர் -5 மேலப்பாளையம் -3 டவுண் -6 பேட்டை -2  வண்ணார்பேட்டை -1
                                        புறநகர் பகுதி 
திசையன்விளை --1 நான்குனேரி -1 வள்ளியூர் -1 களக்காடு -1 ராதாபுரம் -1  ஏர்வாடி -1
                                           அம்பாசமுத்திரம் பகுதி 
அம்பாசமுத்திரம் HO-4  வீ.கே .புரம் --2  கல்லிடைக்குறிச்சி -2 வீரவநல்லூர் -1 கடையம் -1 முக்கூடல் -1 சேரன்மகாதேவி -1 பத்தமடை -1 பாபநாசம் மில்ஸ் -1
    பதவிஉயர்வு பெற்றவர்களுக்கு தங்கள் சொந்த ஊருக்கு/வசிக்கும் பகுதியின்  அருகில் பணிசெய்திட  வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் முழு ஈடுபாட்டோடும் அர்பணிப்போடும் இலாகா பணியை செய்திடுவார்கள் என்பது உறுதி .அந்த வகையில் செயல்படும் நெல்லை கோட்ட நிர்வாகத்திற்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..
நேற்றைய உறுப்பினர்கள் சேர்ப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் அனைவருக்கும் குறிப்பாக புதியதோழர்களை ஒருங்கிணைத்த  அருமை தம்பிகள் செல்வரத்தினம்  அருண்குமார் மகேஷ் அருணாச்சலம் மருது உள்ளிட்ட இளைய தளபதிகளுக்கு நன்றி !நன்றி !இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


Monday, March 16, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                         இன்று புதிதாக தபால்காரராக பயிற்சியில் சேருகின்ற (16.09.2020-25.03.2020)அனைத்து தோழர்களையும் NELLAI NFPE அன்போடு வரவேற்கின்றது.அதுமட்டுமல்ல RULE 38 இன் கீழ் நமது கோட்டத்திற்கு வந்துள்ள எழுத்தர் (திருமதி பூர்ணிமா (நாகை) ஷேக் பீர் முகை தீன்  (நாகை) மற்றும் பால்ராஜ் (ஊட்டி )அவர்களையும் தபால்காரராக வந்துள்ள தோழியர் கவிதா (மத்திய சென்னை ) அவர்களையும் வரவேற்கிறோம் .
                                                    MTS TO POSTMAN
1.ராஜசூரியக்கண்ணன் 2.G.பரமசிவன் 3.K .இசக்கியம்மாள் 
                                                    GDSTO POSTMAN
1.பெரியசாமி 2.திருமதி .பகவதி 3.A .முத்துலட்சுமி 4.பியூலா எமிலி 
5.சிவலிங்கம் 6.அருணாச்சலம் .7. .ஆறுமுகவடிவு 8.மகேஸ்வரன் 
9அருண்குமார் 10.கங்காதரன் 11.ராமலட்சுமி  12.வெங்கடேஸ்வரி 13.உமா மகேஸ்வரி 14.சுதா 15.முருகன் 16.அனுசுயா 17.சுகந்தி 18.பாலசுப்ரமணியன் 19.ரேவதி 20.செல்வரத்தினம் 21.சிதம்பரதுரை 
                          இதில் ஏற்கனவே SA தேர்விலும் தபால்காரர் தேர்விலும் தேர்ச்சிபெற்றவர்கள் .
1.தினேஷ் 2.மருதுபாண்டி 3.செம்புக்குட்டி 4.ஸ்ரீவள்ளி செல்வகுமார் 
நன்றி .தோழமை வாழ்த்துகளுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


Friday, March 13, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                          காலிப்பணியிடங்களை நிரப்பு ! நிரப்பு ! என்ற  கூக்குரல்  டெல்லிக்கு கேட்டதோ இல்லையோ தமிழக அஞ்சல் தலைவருக்கு கேட்டுள்ளது .இத்தனை பதவிகள் PA/SA  பதவிகள் SURPLUS என அறிவிக்கவைத்தது தொழிற்சங்கங்களின் பங்கு என்பதை யாரும் மறுத்திட முடியாது .கோட்டங்களில்  VACANCY இல்லையென்றால் அவ்வளவு  தான் என்ற பழைய பஞ்சாங்கத்தை கிழித்து மாநிலம் முழுவதும் உள்ள VACANCY  களில் தேர்ச்சியாளர்களை கொண்டு நிரப்பிட நாம் வைத்த கோரிக்கைகள் இன்று ஏற்கப்பட்டுள்ளது .விளைவு மீண்டும் 254 GDS ஊழியர்கள் SA ஆக பதவி உயர்வு பெற்றுள்ள வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது .அதே போல் நமது கோட்டத்தில் தபால்காரர் VACANCY கண்முன்னே தெரிந்தாலும் தேர்வு அறிவிக்கப்பட்ட போது காட்டிய VACANCY களை அகற்றி இன்று தபால்காரராக 27  தோழர்கள்   பதவி உயர்வு பெற்றுள்ளனர் .கடந்த மாதத்தில் தான் நமது கோட்டத்தில் 25 தோழர்கள் எழுத்தராகவும் தேர்ச்சிபெற்ற செய்தியை நாம்  பார்த்தோம் ..VACANCY களை கண்டறிந்து இன்று எண்ணற்ற ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிய NFPE  பேரியக்கத்திற்கு நன்றி சொல்லுவோம் .அதுமட்டுமல்ல SURPLUS ஆக தேர்ச்சிபெற்றவர்களில் யாரெல்லாம் தபால்காரராக தேர்ச்சிபெற்றிருந்தாலும் அவர்களின் விருப்பதிக்கேற்ப OPTION கொடுத்து SA ஆகலாம் என்றும் அப்படி காலியாகும் தபால்காரர் இடங்களுக்கு இப்பொழுது தேர்ச்சிபெற்ற GDS ஊழியர்களை கொண்டு நிரப்பிடவும் அதற்கான WAITING LIST  தயார் நிலையில்  இருக்கிறது என்பதனையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம் .நமது கோட்டத்தில் ஐந்து தோழர்கள் SA ஆகவும் தபால்காரராகவும் தேர்ச்சிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .முன்பெல்லாம் Dep. Quota vacancies - அந்தந்த கோட்டத்தில்  நிரப்பியது போக மீதம் இருந்தால் open Recruitment சென்று விடும். அது எப்போதாவது நிரப்புவார்கள். ஆனால் நமது சங்க நடவடிக்கைகளால்அது மாற்றப்பட்டு முழுவதும் நமது GDS தோழர்களுக்கு வாங்கியது மிகப் பெரிய சாதனை.
                   அதேபோல் பல தபால்காரர் தோழர்களுக்கு ஒருவருத்தம் .அதாவது 2019 VACANCY யில் தபால்காரர்களுக்கு எழுத்தராக வாய்ப்பை சங்கங்கள் பெற்றுத்தரவில்லை என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கினார்கள் .அவர்களுக்கு நாங்கள் சொல்வதெல்லாம் அதற்காகவும் பணிகள் மாநிலநிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றுக்கொக்கிடிருக்கின்றன .புதிய CPMG அவர்களின் கவனத்திற்கு இந்த கோரிக்கை கொண்டுசெல்லப்பட்டுள்ளது .வாய்ப்புகள் இருந்தால் சட்டத்திற்கு உட்பட்டு 2019 LGO VANACY யில் சில தோழர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க வழிஇருக்கிறது ..
                                                    சும்மா கிடைப்பதில்லை 
                                                    சுதந்திரமும் -சலுகைகளும் .....
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                                         

Wednesday, March 11, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                   டார்கெட் நெருக்கடி /உபகோட்ட அதிகாரிகளின் அடக்குமுறைகள் மற்றும் அனைத்து தபால்காரர் பதவிகளையும் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலஅளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாளையில் 10.03.2020 அன்று அஞ்சல் நான்கின் கோட்ட தலைவர் தோழர் சீனிவாசசொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .அஞ்சல் நான்கின் முன்னனி தோழர்கள் புஷ்பா கரன் ,பாலகுருசாமி ,மோகன் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக தோழர் ச ண்முகசுந்தரராஜா அஞ்சல்மூன்றின் சார்பாக கோட்ட தலைவர் அழகுமுத்து .மாநில சுப்ரிம் கவுன்சிலர் வண்ணமுத்து அஞ்சல் நான்கின் மாநில உதவி தலைவர் SK .பாட்சா ஆகியோர்களும் இறுதியாக அஞ்சல் மூன்றின் கோட்ட செயலர் ஜேக்கப் ராஜ் அவர்களின் விளக்கவுரை என மிக எழுச்சியோடு நடைபெற்றது அஞ்சல்நான்கின் பொருளாளர் இசக்கி நன்றிகூறினார் ..ஆர்ப்பாட்டத்தில் GDS ஊழியர்க்ளுக்கு OFFICIATING பார்ப்பதில் கொடுக்கப்படும் நெருக்கடிகள் பல்லாண்டுகளாக அஞ்சலகத்தையே நம்பி கிடக்கும் OUTSIDER களுக்கு பணி மறுப்பு போன்ற அதிகாரவர்க்கத்தின் இரக்கமற்ற செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது மேலும் இதுகுறித்து மேல்மட்டங்களுக்கு புகார் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது .இந்த நிதியாண்டின் மீதமிருக்கும் நாட்களில் ஊழியர்க்ளுக்கு கொடுக்கப்படும் மனஉளைச்சலை கலைந்திட கோட்ட சங்கம் துணைநிற்கும் .பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை