...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... ........ செங்கல்பட்டில் 38 வது மாநில மாநாடு --25.11.2017--27.11.2017 மூன்று நாட்கள் நடைபெறுகிறது .........புதிய பென்ஷன திட்டத்திற்கு எதிராக ஊழியர்களை திரட்டுவோம் ............அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை முன்னெடுப்போம் ........... .......

Thursday, November 16, 2017

                                                      வாழ்த்துகிறோம் 
தோழியர் ஏஞ்சல் எபேனேசர் பட்சப்பூ GDSBPM ALWANERI மூலைக்கரைப்பட்டி அவர்கள் MTS ஆக பணிமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் .தோழியரின் பதவி உயர்வு காலங்கள் சிறக்க நெல்லை NFPE வாழ்த்தி வரவேற்கிறது .வாழ்த்துக்களுடன் 
SK ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
SK பாட்சா கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 

Wednesday, November 15, 2017

                  நேர்மைக்கு பெயர்பெற்ற அஞ்சல் துறைக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை துடைப்போம் -
தபால்காரர் -MTS நியமனத்தில் மீண்டும் முறைகேடு --தமிழகம் -மகாராஷ்டிரா என்று பட்டியல் நீளுகிறது --இதுவரை யாரும் கைதுசெய்யப்படாத வினோதம் --மர்மம் நீளுகிறது --
தேர்வுகளை ரத்து செய்தால் மட்டும் போதுமா ? சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?அஞ்சல் துறையின் முதுகெலும்பாக விளங்கும் GDS ஊழியர்களுக்கான ஒதுக்கீட்டில் கைவைத்து -இன்று ஊழலுக்கு வழிகொடுத்த நேரடி தபால் காரர் -MTS நியமனத்தை அஞ்சல் வாரியம் சீர் செய்யுமா ?
கடந்த ஆண்டுகளில் GDS பதவிகளுக்கான ஆன்லைன் தேர்வு முடிவுகளை வெளியிட தாமதம் ஏன் ? விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கடைசி நாளுக்கு மறுநாளே முடிவுகள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு SMS மூலம் தகவல் வரும் என்ற
அறிவிப்பு என்னானது ? 2015 இல் நடந்த நேரடி  எழுத்தர் தேர்விலும் தேவையற்ற காலதாமதம் ஏன் ?
  லஞ்சம் -லாவண்யம் இல்லா அஞ்சல் துறையில் ஏற்பட்டிருக்கும் களங்கத்தை துடைக்க அணிதிரள்வோம் -ஊழலை வெளிக்கொணர்வோம் -முறையான உண்மையான நியமனத்திற்கு துணை நிற்போம் 
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே !
 நெல்லை கோட்ட நிர்வாகம் டெபுடேஷன் பிரச்சினையில் காட்டுவது அலட்சியமா ? பாரபட்சமா ?
குமுறும் ஊழியர்கள் -நிர்வாகம் சீர்படுத்துமா ?சீர்படுத்தனுமா ?

   மற்ற கோட்டங்களை ஒப்பிடுப்பார்க்கையில் நமது கோட்டத்தில் ஊழியர்களின் மீது தேவையில்லாத அச்சுறுத்தல்கள் -பழிவாங்கல்கள் -RULE 16 இன் கீழ் தண்டனைகள் என அவ்வளவாக இல்லை .அதனால் தான் நாமும் நிர்வாகத்தோடு ஒருசுமுகமான போக்கை கடைபிடித்து வருகிறோம் .ஆனால் சமீபத்தில் டெபுடேஷன் பிரச்சினையில் சிலபகுதி ஊழியர்கள் மட்டுமே பாதிக்கப்படுவதை நம்மால் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது .
குறிப்பாக வள்ளியூர் அஞ்சலகம் 12 அலுவலகங்களுக்கு CASH OFFICE ஒரு காலத்தில் HEADOFFICE ஆக மாறுவதற்கான தகுதி படைத்திருந்தது .அப்படி வேலைப்பளுவுள்ள வள்ளியூர் அஞ்சலகத்திற்கு தொடர்ந்து டெபுடேஷன் .மூன்று எழுத்தர்கள் கூட இல்லாமல் வள்ளியூர் அஞ்சலகத்தை இயக்க சொல்லுவது நியாயமா ? ICPETTAI -மானுர் -பணகுடி போன்ற வேலைப்பளு அதிகமுள்ள A கிளாஸ் அலுவகத்தில் எத்தனை நாட்கள் தனிநபர் வேலைபார்த்த கொடுமை தொடர்கிறது -ஆனால் மாறாக மாநகர் பகுதியிலுள்ள சில LSG அலுவலகத்தில் நாற்காலிகள் போட இடமில்லாமல் நிரம்பி வழிகிறது மேலும் ஒரு ஆள் விடுப்புக்கும் அந்த LSG அலுவலகத்திற்கு டெபுடேஷன் கொடுக்கப்படுகிறது .ஒரு அலுவலகத்தில்  DEPUTATION உத்தரவை பார்தவுடன்  VIP களுக்கு  விடுமுறை  கொடுக்கப்படுகிறது .கோட்டநிர்வாகம் எல்லாருக்கும் பொதுவாக நடக்கவேண்டும்.இதுகுறித்து விரிவான புகார் கடிதம் கோட்ட சங்கத்தால் கொடுக்கப்படவுள்ளது .தேவைப்படும்பட்சத்தில் எந்தெந்த அலுவலகங்களில் இருந்து டெபுடேஷன் அனுப்பப்பட்டுவருகிறது எந்தெந்த அலுவலகங்கள் மழை மறை பிரதேசம் போல் டெபுடேஷன் மறை அலுவலகம் என்பதனை தகவல் பெறும் உரிமைச்சட்டம்  மூலம் கேட்டு அடுத்த கட்ட இயக்கங்களை முன்னெடுத்து செல்லப்போகிறோம் .ஆகவே உங்கள் பகுதி பிரச்சினைகளை உரிய ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க கேட்டு கொள்கிறேன் .ஊழியர்கள் பிரச்சினைகளை ஆர்வமாகவும் -நம்பிக்கையுடனும் கோட்ட சங்க கவனத்திற்கு கொண்டுவரும் அன்பு தோழர்களுக்கு நன்றி !நன்றி !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை