...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, March 29, 2019

  அன்பார்ந்த தோழர்களே !
                          நமது SSP   அவர்களை நேற்று சந்தித்து  இரண்டு தோழர்களை அவர்களது விருப்பங்கள் இல்லாமல் வெவ்வேறு அலுவலகங்களுக்கு (ராதாபுரம் -பத்தமடை )ATTACHMENT செய்யப்பட்ட விஷயம் குறித்து விவாதித்தோம்  .இரண்டு தோழர்களுக்கும் சுழல் மாறுதலில்  அவர்களது  கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்க்கப்படும் என உறுதியளித்தார்கள் .நமது கோரிக்கைகளை /நியாங்களை ஏற்றுக்கொண்ட நமது SSP அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
                         LSG இடமாறுதலில் நமது கோட்டத்தில் ஒரு தோழர் மட்டும் (GR .துளசி ராமன் ) PMG அவர்களுக்கு மேல்முறையிடு செய்துள்ளார்கள் .இது குறித்து நாமும் நமது மாநிலச்சங்கத்திற்கு கடிதம் மூலமம் /தொலைபேசி வாயிலாகவும் தெரிவித்துள்ளோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

-------------------------------------------------------------------------------------------------------------------

அன்பார்ந்த தோழர்களே !
                                             இந்த வார நிகழ்ச்சிகள் 
தோழர் R .முத்துகிருஷ்ணன் LSG PA நான்குனேரி அவர்களின் பணிநிறைவு விழா 
நாள் --30.03.2019  சனிக்கிழமை  நேரம் மாலை 6 மணி 
இடம் -அக்கசாலை விநாயகர் கோயில் -வள்ளியூர் 
--------------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் TAP .ஷேக் மதார் LSG PA சேரன்மகாதேவி அவர்களின் பணிநிறைவு விழா 
நாள் -31.03.2019 ஞாயிறு   நேரம் காலை 11.00 மணி 
இடம் தேவி திருமண மண்டபம் சேரன்மகாதேவி 
------------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் A.சமுத்திரம் MTS திருநெல்வேலி டவுண் அவர்களின் 
பணிநிறைவு விழா 
நாள் 30.03.2019 நேரம் மாலை 6 மணி 
இடம் -குன்னத்தூர் டவுண் 
----------------------------------------------------------------------------------------------------------------
                               திருமணவிழா வாழ்த்துக்கள் 
தோழர் S.லெலின் முருகன் LRPA பாளையம்கோட்டை அவர்களின் சகோதரி தோழியர் செல்வேஸ்வரி பாரதி PA மண்டல அலுவலகம் மதுரை அவர்களின் திருமணவிழா 
நாள் -31.03.2019  நேரம் காலை 9-10.30
இடம் செல்லக்கனி திருமணமகால் சாத்தான்குளம் 
                                                           மணமக்கள் 
செல்வேஸ்வரி பாரதி BE -PA RO மதுரை --விஜயபால ராஜா BSC -SR -SSA {MINISTRY OF Labour & Employment )              
    அனைத்து விழாக்களும் சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது .
 தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


Wednesday, March 27, 2019

                                                                    முக்கிய செய்திகள் 
GDS ஊழியர்களுக்கும் CEA வழங்குவது தொடர்பாக அஞ்சல் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இது குறித்த கோப்புகள் DOPT ஒப்புதலுக்கு சென்றுள்ளதாகவும் தெரிகிறது 
-------------------------------------------------------------------------------------------------------------
 GDS ஆன்லைன் விண்ணப்பங்கள் குறித்த தகவல்கள் 
முதல் ஐந்து இடங்கள் தேர்வு செய்த பின்னர் கடவுசொல் ( OTP) வரும். 
அப்போது ஒரு திரை தோன்றி மேலும் இடங்கள் தேவை எனில் yes கொடுக்க வேண்டும் என message வரும்.  கண்டிப்பாக இதை செய்ய வேண்டும். 

இவ்வாறு செய்தால் 20 இடங்கள் தேர்வு செய்து கொண்டு வெற்றி 🏆 வாய்ப்பை பெறலாம்
-----------------------------------------------------------------------------------------------------------------------
இடம் மாறுதல் ( Transfer) புதிய விதிகள் படியே ஏப்ரல் முதல் வாரத்தில் அனைத்து Gds ஊழியர்களுக்கும் கோட்ட அலுவலகம் வழியாக இடம் மாறுதல் விண்ணப்பம் மற்றும் நிபந்தனைகள் குறித்து சுற்றறிக்கை ( sargular ) அனுப்பப்படும். 
இடம் மாறுதல் தேவைப்படும் ஊழியர்கள் மற்றும் ஏற்கனவே காத்திருப்பு பட்டியலில் உள்ள நபர்கள் அனைவரும் புதிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து அனுப்பவும்.
  Medical ground- இல் விண்ணப்பம் செய்ய உள்ள நபர்கள் இடம் மாறும் எல்லையில் applicant அரசு "மருத்துவர் மூலம் இவ்விடத்தில் இருந்து சிகிச்சை பெறுவது நலம்" என்று சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
சொந்த இடத்திற்கு மாறுதல் கேட்பார்கள்..
அது குறித்து சான்றுகள் இனைத்து அனுப்பவும்.
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, March 25, 2019


Examination of recommendation of Kamalesh Chandra Committee on Transfer of GDS on Administrative / Vigilance ground











Thursday, March 21, 2019

                                          திருமண வாழ்த்துக்கள் 
நாகப்பட்டினம் கோட்டத்தில் இருந்து நெல்லை கோட்டத்திற்கு மாறுதல் பெற்று வரவிருக்கின்ற தோழர் சேக் பீர் முகமது அவர்களின் திருமணவிழா சிறக்க வாழ்த்துகிறோம் 
                       மணநாள் --24.03.2019 ஞாயிறு 
                       இடம் --பாத்திமா நகர் -மேலப்பாளையம் 
                                   மணமக்கள் 
A.T . சேக் பீர் முகமது POSTAL ASST நாகப்பட்டினம் --
M .பஷீலா சுல்தானா 
 மணமக்கள் பல்லாண்டு வாழ்க என நெல்லை NFPE வாழ்த்துகிறது
--------------------------------------------------------------------------------------------------------------------------
RPLI இன்சென்டிவ் முறையாக வழங்காதது குறித்து GDS சங்கம் கொடுத்த புகார் கடிதத்தின் அடிப்படையில் அஞ்சல் வாரியம் இதுகுறித்து அனைத்து CPMG அலுவலகங்களுக்கும் விளக்கம் கேட்டும் விடுபட்ட அனைவருக்கும் RPLI இன்சென்டிவ் வழங்கிடவும் 20.03.2019 அன்று அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது .
---------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, March 20, 2019


                                            முக்கிய செய்திகள்
1.இன்று நடைபெறுவதாக இருந்த மேளா பல்வேறு காரணங்களுக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது .குல தெய்வ வழிபாட்டிற்கு எப்படி செல்வது என்று ஏங்கி தவித்த GDS ஊழியர்கள் இந்த அறிவிப்பினை தொடர்ந்து சற்று ஆறுதலடைந்துள்ளனர் .
2.LSG உத்தரவுகள் நேற்று மாலை வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஏற்கனவே .LSG இடத்தில் பணியாற்றும் TS ஊழியர்களுக்கு அவர்களின் விருப்பங்களளின் அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்றிட அனுமதிக்கப்படுவார்கள் .
3. சுழல் மாறுதலுக்கான அறிவிப்புகள் விரைவில் வரவிருக்கின்றன .சூழல்மாறுதலை சேர்த்துதான் RULE 38 இடமாறுதல்கள் வழங்கப்படவிருக்கின்றன .
4.GDS காலிப்பணியிடங்களை நிரப்பிட தமிழக அஞ்சல் வாரியம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அறிவித்திருக்கும் நிலையில் இடமாறுதலுக்கு விண்ணப்பிக்க இருக்கும் /விண்ணப்பித்திருக்கும் GDS ஊழியர்கள் ஏப்ரல் மாதத்தில் புதிய விதிமுறைகளின் படி அதற்காக கொடுக்கப்பட்டுள்ள படிவம் மற்றும் DECLARATION படிவத்தோடு விண்ணப்பிக்க வேண்டும் .நீங்கள் கேட்ட இடம் ஆன்லைன் மூலம் நிரப்பப்பட அறிவிக்கப்பட்டிருந்தாலும் விண்ணப்பிக்கவேண்டும் .இதுகுறித்து CPMG அவர்களிடம் GDS சங்க நிர்வாகிகள் இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கும் ஊழியர்களுக்கு வாய்ப்புகளை வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்
 நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை .

                                              வருந்துகிறோம் 
தோழர் சுவாமிநாதன் தபால்காரர் ICPETTAI (பணிஓய்வு ) அவர்கள் 19.03.2019 அன்று உடல்நல குறைவால் இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதிச்சடங்கு இன்று 20.03.2019 நண்பகல் 12 மணியளவில் ICPETTAI சாஸ்திரிநகரில் நடைபெறுகிறது .தோழரை இழந்துதவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது 

Saturday, March 16, 2019

.. அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 
..வருகிற 21.03.2018 அன்று நமது கோட்டத்தில் கோட்ட அளவிலான மேளா நடத்துவதாகவும் அதில் நமது CPMG அவர்கள் கலந்துகொள்வதாகவும் நேற்று நமக்கு கோட்ட அலுவலகத்தில் இருந்து ஈமெயில் வந்திருந்தது .அதை அறிந்த நமது தோழர்கள் 21.03.2018 அன்று பங்குனி உத்திரம் நடைபெறுவதால் அந்த தேதியை மாற்றி வைத்திடவேண்டும் என கோரிக்கையினை வைத்தார்கள் .அதனடிப்படையில் நேற்று நமது SSP அவர்களை சந்தித்து 21.03.2018 அன்று பங்குனிஉத்திரம் இருப்பதால் மேளா தேதியை மாற்றியமைத்திட வேண்டினோம் .SSP அவர்கள் நமது தரப்பு நியாயத்தை புரிந்துகொள்வதாகவும CPMG நிகழ்ச்சி என்பதால் தேதி மாற்றம் சாத்தியமில்லை என்றும் தெரிவித்துவிட்டார்கள் .பொதுவாக மேளா களுக்கு GDS ஊழியர்களை வைத்துதான் நடத்துகிறோம் இலாகா ஊழியர்களை அழைப்பதில்லை என்பதனையும் தெளிவு பட தெரிவித்துவிட்டார்கள் .இருந்தாலும் ஊழியர்களின் எண்ணங்களை /உணர்வுகளை நாம் உரியமுறையில் பிரதிபலித்திடவேண்டும் என்பதற்காக இந்த கடிதம் அனுப்பப்படுகிறது 
.

NFPE
    ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                            TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-org  / dated at Palayankottai- 627002 the 19.03.2019

To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,

Sub : Request change of date fixed for Mega Mela on 21.03.2019 - reg.

Our employees were previously told that a mega mela will be conducted on 28.03.2019 and all officials are doing their best to show their performance in POSB/PLI/RPLI on that day.  
But suddenly it is announced that the mega mela will be conducted on 21.03.2019.  In this connection, we bring to the notice of the administration that the famous 'Panguni Uthiram' which is a key celebration of Hindus will be observed on 21st  March, 2019 and most of the  officials will worship the God even by availing leave.
Hence, it is requested to change the date of mega mela by considering the sentiments of the  officials working in Tirunelveli Division.

                         Yours faithfully


[S.K.JACOBRAJ]


Friday, March 15, 2019

அன்பார்ந்த தோழர்களே !
      LSG பதவியுயர்வு தொடர்பான  கமிட்டி நெல்லையில் 14.03.2019 அன்று நடைபெற்றது .இந்த கூட்டத்தில் விடுபட்ட தோழர் ஞான அன்புராஜன் அவர்களின் பெயரும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது .முன்னதாக PUNISHMENT CURRENT என்ற காரணத்தால் நிறுத்திவைக்கப்பட்ட பதவி உயர்வு நேற்று மீன்டும் வழங்கப்பட்டது .இதற்காக கோட்ட நிர்வாகத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
           LGO தேர்வில் வெற்றிபெற்று IN HOUSING பயிற்சியில் இருக்கும் ஆறு தோழர்களுக்கும் இடமாறுதல் வழங்குவது தொடர்பான கமிட்டி இன்று கூடுகிறது .நாளை முதல் அவர்கள் புதிய இடங்களுக்கு எழுத்தராக பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள் .புதிய பாதையில் பயணிக்கவிருக்கும்  அனைத்து தோழர்களுக்கும் நெல்லை NFPE யின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
                     LSG பதவிகளில் DECLINE செய்யப்பட்ட ஊழியர்களை கணக்கில் கொண்டு ஏற்கனவே வேறுகோட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஏழு ஊழியர்க்ளுக்கு நமது கோட்டத்திலே RE ALLOTMENT கொடுப்பது  தொடர்பாக நமது கோட்ட நிர்வாகமே   மண்டலநிர்வாகத்திக்கு பிரச்சினைகளை எடுத்துச்செல்லும் என்ற முடிவும் பாராட்டுதலுக்குரியது .
                       நமது கோட்டத்தில் ஊழியர்களின் இடமாறுதல்களை குறித்து ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தவேண்டும் என்று 05.03.2019 காலை 10 மணிக்கு நடைபெற்ற மாதாந்திரப்பே ட்டியில் நாம் எடுத்துவைத்த சப்ஜெக்ட் உங்கள் பார்வைக்கு மீண்டும் தருகிறோம் .அன்று நடைபெற்ற பேட்டியில் நமது SSP அவர்கள் கலந்தாய்வு நடத்துவோம் என்று ஏற்றுக்கொண்டதும் அதன்படி நடத்தப்பட்டது என்பதனையும் நன்றியோடு நினைவு படுத்துகிறோம் .
12. There are due transfers like LSG Postings, Shifting of LSG Treasurers and filling unfilled HSG II with LSG officials are upcoming which involves more than 75 to 80 transfers. Hence, it is requested to conduct a counselling like methods to reduce the grievances of the officials concerned which will be appreciated by all as a model employer.
             நன்றி .
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, March 14, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நெல்லையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க LSG ஊழியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு இனிதே நடைபெற்றது 
52 ஊழியர்களில் 26 தோழர்கள் பதவியுயர்வை ஏற்றுக்கொண்டார்கள் -25 தோழர்கள் பதவியுயர்வை ஏற்கவில்லை -ஒரு தோழருக்கு மட்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது 
 என கலந்தாய்வு கூட்டம் இனிதே முடிந்தது .தமிழக அஞ்சல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை நிகழ்த்தி காட்டிய நமது கண்காணிப்பாளர் அவர்களுக்கும் அவரது எண்ணங்களுக்கு செயல்வடிவம் தந்த ASP (OD ) அவர்களுக்கும் ஏனைய கோட்ட அலுவலக ஊழியர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
                                விடாது ..FSC .....விடாது NFPE .........
                     மீண்டும் திருநெல்வேலி HO FSC வழக்கு சூடு பிடிக்கிறது -திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட RULE 16 மண்டல அலுவலகத்தால் RULE 14 ஆக மாற்றப்பட்டுள்ளது .
       திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் கடந்த ஜூலை 16 முதல் டிசம்பர் 16 வரைக்கான FSC உயர்த்தப்பட்ட நிலுவைத்தொகை ரூபாய் 3852 யை முறையாக செலவிடப்படவில்லை என்றும் அதற்கு காரணமான திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்கள் /முயற்சிகள் காரணமாக திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டருக்கு 28.02.2018 அன்று கோட்ட அலுவலகத்தால் RULE 16 யின் கீழ்குற்றப்பத்திரிகை கொடுக்கப்பட்டது .அதனை பெற்று கொண்டு 30 நாட்கள் காலஅவகாசம் மற்றும் 21.03.2018 முதல் இரண்டு நாட்கள் ஆவணங்களை பார்வையிட அனுமதி  என எல்லா வாய்ப்புகளும் போஸ்ட்மாஸ்டருக்கு வழங்கப்பட்டு இறுதியாக 15.05.2018 அன்று 
திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டருக்கு ரூபாய் 3852 யை அவரது ஊதியத்தில் பிடித்தம் செய்ய அன்றைய கோட்ட அதிகாரி உத்தரவிட்டார்கள் .சம்பளத்தில் ரூபாய்3852 யும்  பிடித்தமும் செய்யப்பட்டது .
           தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து போஸ்ட்மாஸ்டர் அவர்கள் தனது தண்டனை RULE 16 யை குறைக்கவேண்டும் என முறையிட்டார் .வழக்கை பரிசீலித்த மண்டல நிர்வாகம் போஸ்ட்மாஸ்டரின் விருப்பத்தின் படியே 
2 புள்ளிகளை குறைத்து RULE 14 யாக வழக்கை 
மாற்றி (குறைத்து? )உத்தரவு பிறப்பித்துள்ளது .
            FSC வழக்கில் இருந்து தப்பிக்க போஸ்ட்மாஸ்டர் அவர்கள் எடுத்த நமது ஊழியர்க்ளுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையம் எதிர்த்து சமாளித்த திருநெல்வேலி தலைமை அஞ்சலக NFPE உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வீர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
                                        தோற்றதில்லை -தோற்றதில்லை 
                                         NELLAI NFPE தோற்றதில்லை 
 தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, March 13, 2019

அன்பார்ந்த தோழர்களே ! 
                    நேற்றையஆலோசனை கூட்ட முடிவின் அடிப்படையில் கோட்ட அலுவலகத்தில் இருந்து இன்று (13.03.2019) மாலை 6 மணிக்கு ஒரு கலந்தாய்வு கூட்டம் நடைபெறவிருக்கிறது .ஏற்கனவே நாம் தெரிவித்தபடி 24 இடங்களுக்கு விருப்பமனுக்கள் ஏதும் இல்லை .அவைகளின் விபரங்கள் இங்கு தரப்பட்டுள்ளன 
கங்கைகொண்டான் -பரப்பாடி -திருக்குறுங்குடி -தெற்கு கள்ளிகுளம் -சமூகரெங்கபுரம் -பெட்டைக்குளம் -பத்மனேரி -மாவடி -விஜயநாராயணம் -இடையன்குடி -இடிந்தகரை -மகேந்திரகிரி -அனுவிஜய் -கூடன்குளம் =தெற்கு கருங்குளம் -பிரம்மதேசம் -பாப்பாக்குடி -PA நான்குனேரி -பொட்டல் புதூர் -ரவன சமுத்திரம் -இட்டமொழி -மாஞ்சோலை -நாலு முக்கு .
மேலும் கீழ்கண்ட ஊழியர்களுக்கு தாங்கள் விண்ணப்பித்த இடங்கள் ஏதும் கொடுக்கப்படாமலும் இருக்கின்றன .
N .செண்பகவள்ளி -S.சுடலைமுத்து -P.சிவஞான ஜோதி -M .நம்பி ராஜன் -R.சுகிர்தா -J.மேரி -M.ராஜேஸ்வரி -N.சுஜா -K.செல்லப்பாண்டி -
G.உமாசங்கரி -K.மீனா -C.அல்போன்ஸ் கீதா -A.கதிரேசன் -S.முத்துகுமாரி -D.மேக்தலின் அஜிதா -E.சுபா -R.சிவகாமி -D.கலாவதி 
P.தனுஜா -M.வதனா -PN .ஜெயலட்சுமி --K.குத்தாலிங்கம் -V.பூமணி செல்லதாய் 
  ஆகவே LSG பதவிகள் CIRCLE சீனியாரிட்டி அடிப்படையில் கடைபிடிக்கப்பட்டு நிரப்பப்படும் .நிர்வாகத்தில் ஒரு வெளிப்படைத்தன்மையை நிலைநாட்ட இந்த வாய்ப்புகள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது .உங்கள் சீனியாரிட்டி பட்டியலை வைத்துக்கொண்டு உங்கள் விருப்ப இடங்களை தெரிவு செய்துகொள்ளுங்கள் .ஆகவே அனைத்து புதிய LSG ஊழியர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
                             
     

Tuesday, March 12, 2019

                                         முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !
  நமது நெல்லை கோட்டத்தில் LSG பதவிகளை நிரப்புவதற்கான ஒரு ஆலோசனை கூட்டத்தை நமது கோட்ட கண்காணிப்பாளர் உயர்திரு R .சாந்தகுமார் அவர்கள் கூட்டி இருந்தார்கள் .அதன் படி மூன்று சங்க செயலர்களையும் ஒன்றாக அழைத்து கருத்துக்கள் கேட்கப்பட்டது .மொத்தம் உள்ள 59 பதவிஉயர்வு பெறும் ஊழியர்களில் ஏழுபேர் (பார்த்தீபன் கற்பகம் கனகவள்ளி அருணாரணி கீதா வெங்கடேசன் ஹேனா ) நீங்கலாக 52 ஊழியர்களுக்கு பணி மாறுதல் கொடுக்கவேண்டும் என்றும் அதில் 24 ஊர்களுக்கு விருப்பங்கள் இல்லை என்றும் நிர்வாக தரப்பில் விளக்கப்பட்டது .அதனை தொடர்ந்து இன்று ரெகுலர் LSG மூன்றுபேர் மற்றும் காசாளர் பதவியில் உள்ள இருவருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு மீதமுள்ள காலிப்பணியிடங்களை அறிவித்துவிட்டு நிரப்பலாம் என்றும் தமிழகத்திலே முன்மாதிரியாக இடமாறுதலுக்குள் வரும் ஊழியர்களை நாளை மாலை 6 மணிக்கு கோட்ட அலுவகத்திற்கு வரவழைத்து கவுன்சிலிங் அடிப்படையில் இடமாறுதல் வழங்கிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது .ஆகவே நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் இடமாறுதல் குறித்த 
கலந்தாய்வுக்கு LSG பதவி உயர்வு பெறும் ஊழியர்கள் அனைவரும் பங்கேற்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .முறையான அறிவிப்பு கோட்ட அலுவலகம் மூலம் அறிவிக்கப்படும் .நாளை நடக்கும் கூட்டத்திற்கும் SSP ,ASP (OD ), OA மற்றும் மூன்று கோட்ட செயலர்களும் பங்கேற்கிறார்கள் .இந்த புதிய முயற்சியை செய்வதற்கு ஒப்புக்கொண்ட நமது SSP அவர்களுக்கும் ASP (OD )அவர்களுக்கும் நெல்லை அனைத்து சங்கங்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, March 11, 2019

     1964 ம் ஆண்டில் புயலால் முற்றிலுமாக சேதமடைந்த தனுஷ்கோடியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு கிளை அஞ்சலகம் திறக்கப்பட்டது .சுமார் 200 குடும்பங்கள் இங்கே வசித்துவருகிறார்கள் .நேற்று தனுஷ்கோடியில் நமது கிளைஅஞ்சலகத்தை பார்க்கும் அருமையான வாய்ப்பு கிடைத்தது .அங்கு பணிபுரியும் செல்வி சரண்யா மற்றும் அவர்களின் குடும்பத்தினதிருடன் ஒரு அரிய சந்திப்பு 




                                              திருமண வாழ்த்துக்கள் 
பரமக்குடி அஞ்சல் மூன்றின் கிளை செயலர் தோழர் ராமமூர்த்தி அவர்களின் இல்ல மணவிழா 10.03.2019 அன்று பரமக்குடியில் சிறப்பாக நடைபெற்றது .மணமக்கள் பல்லாண்டு வாழ நெல்லை NFPE வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது 

Friday, March 8, 2019

                            சிறப்புடன் நடைபெற்ற மகளிர் தின விழா 
நெல்லை NFPE சார்பாக பாளையில் நடைபெற்ற மகளிர் தினவிழா சிறப்பாக நடைபெற்றது .தோழியர் பசுமதி APM A/CS தலைமைதாங்க தோழியர் முத்துப்பேச்சி அவர்கள் வரவேற்புரை மற்றும் வழக்கமான பாணியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் .தோழியர் ஹேனா அவர்களின் இறைவணக்கம் அரங்கத்தில் ஒரு நிசப்தத்தை நிலைநாட்டியது .அதன்பின் மூத்த தோழியர் விஜயராணி அவர்களின் முன்னுரையுடன் கூட்டம் தொடர்ந்தது .நமது சிறப்பு அழைப்பாளர் முனைவர் J.ஜெபமலர் வின்செஸ் மணிமாலா (துணை  முதல்வர் சாராள் தக்கர் மகளிர் கல்லூரி ) அவர்களின் சிறப்புரை தோழியர் ஆனந்த கோமதி அவர்களின் மகளிர் தின உரை அதனை தொடர்ந்து தோழியர் S .முத்துலட்சுமி அவர்களின் அருமையான கவியரங்கம் தோழியர் ஹைருனிசாபேகம் அவர்களின் நெல்லை தொழிற்சங்கத்தில் தோழியர் பங்கு எனும்  அனுபமிக்க உரை அதனைத்தொடர்ந்து  இறுதியாக தோழியர் விஜயலட்சுமி அவர்களின் 
தீர்மானங்களுடன் கூடிய நன்றியுரையோடு விழா இனிதேநிறைவுற்றது . 
                                           தீர்மானங்கள் 
1.மகளிர் தினவிழாவை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்துவது 
2.மாதாந்திர பேட்டிகளில் தோழியர்களின் பிரதிநிதியாக மாதம் தோழியர் ஒருவருக்கு வாய்ப்பு .
3.ஆர்ப்பாட்டங்கள் /தர்ணா போன்ற இயக்கங்களில் தோழியர்களை முழுமையாக ஈடுபடவைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
                                  தோழியர்கவிஞர்  S.முத்துலட்சுமி PA பாளையம்கோட்டை அவர்களின் புரட்சி வரிகள் 
                        பார்த்துவிட்டு சாகட்டும் -பழைய சமூகம் 
எட்டி உதைத்த போதும் 
எச்சில் உமிழ்ந்த போதும் 
எட்டு வைத்து வளர்ந்ததாலோ 
எட்டிலே மார்ச் எட்டிலே மகளிர் தினம் ...

ஆசைப்பட்டதெல்லாம் ஆண் ஆக 
ஆசிரியராக மட்டுமே ஆகி கொண்டிருந்தவள் -இன்று 
கரண்டி தாண்டி கணிணியையும் தீண்டியவள் 
விதி என்று வீழ்ந்து கிடந்தவள் 
விழி என்று தன்னையே எழுப்பியவள் 

வெறும் பாறை என்று ஒதுக்கிய உலகத்தில் 
தன்னையே செதுக்கி 
சிற்பியும் அவளாய் -சிலையும் அவளாய் !
நின்று காட்டியவள் 

புல் என மிதித்த காலில் 
முள் என குத்தி நின்றவள் 

அங்கங்கே அவலங்கள் 
அரங்கேறும் பொழுதெல்லாம் 
மழையில் நனைந்த பறவையாய் 
மனதை சிலிர்த்து கொண்டு 
மீண்டும் பறக்கும் இப்பறவை !

குறுகிய எண்ணங்களில் 
சறுக்கியவைதான் நம் கால்கள் 
எண்ணங்களை மாற்று -வாழ்வில் 
வண்ணங்களை ஏற்று !

கற்றுக்கொள் ஏட்டை மட்டுமல்ல 
எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் வரை !

கவலைப்படாமல் தோற்று போ !
நல்லதை செய்ய நாணம் தவிர் !
செல்வது நேர்வழி செல் 
பிறர் சொல்லை புறந்தள்ளு !

சமூகம் எப்போதும் 
நடந்ததை வைத்தே 
நடப்பதை சொல்லும் !
படைப்பதை புதிதாக்கு 
பார்த்துவிட்டு சாகட்டும் -இந்த 
பழைய சமூகம் 
                     ---------------------------------------------






















                         சர்வதேச பெண்கள் தின                                  வாழ்த்துக்கள் 
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
     பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கேபெண்
     இளைப்பில்லை காண் 

இன்று மாலை பாளையம்கோட்டையில் நடைபெறும் சர்வதேச பெண்கள் தின விழாவிற்கு உங்களை அன்போடு அழைக்கிறோம் நெல்லை NFPE 
                                   மலரும் நினைவுகள் 






Thursday, March 7, 2019

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பாக நெல்லையில்மகளிர் தினவிழா -2019
நாள் --08.03.2019 நேரம் மாலை 5.45 மணி
இடம் -பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம்
தலைமை- தோழியர்A. பசுமதி  (APM A/CS) திருநெல்வேலி HO
முன்னிலை தோழியர்S. விஜயராணி  SPM ஜவஹர் நகர் 
இறை வணக்கம் -தோழியர் D.ஹேனா PA நான்குனேரி 
வரவேற்புரை -தோழியர் S.முத்துப்பேச்சி  OA DO
                                    சிறப்பு அழைப்பாளர் --சிறப்புரை 
                      திருமதி .J.ஜெபமலர் வின்ஸ் மணிமாலா MA ,MPhil PhD
                                    (துணை முதல்வர் சாராள் தக்கர் கல்லூரி)
                                   மகளிர்    தின சிறப்புகள் குறித்த உரை 
                            தோழியர் S.ஆனந்தகோமதி  PA டவுண் 
                         தொழிற்சங்கத்தில் தோழியர் பங்கு -குறித்து உரை 
               தோழியர் M.ஹைருனிசா பேகம்  PA பாளையம்கோட்டை 
                                              மகளிர்   தின சிறப்பு கவிதை 
                     தோழியர் S.முத்துலட்சுமி  PA பாளையம்கோட்டை 
                                                   தீர்மானங்கள்
                                         V.விஜயலட்சுமி PA மேலப்பாளையம் 
                                    அனைவரும் வருக !தோழமையுடன் 
                 SK .ஜேக்கப்  ராஜ் -            SK .பாட்சா கோட்ட செயலர்கள் 




















                           சர்வதேச மகளிர்  தினம் --08.03.2019 
சர்வதேச  மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை (08.03.2019 ) அன்று   மகளிர் தின சிறப்பு கூட்டம் பாளையம்கோட்டையில்   நடைபெறுகிறது .தோழர் /தோழியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும் படி அன்போடு கேட்டு கொள்கிறோம் .
நாள் 08..03.2019  நேரம் மாலை 05.45 மணி 
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
தலைமை- தோழியர் பசுமதி அவர்கள் (APM A/CS ) திருநெல்வேலி 
முன்னிலை தோழியர் விஜயராணி அவர்கள் SPM ஜவஹர் நகர் 
இறை வணக்கம் -தோழியர் ஹேனா PA நான்குனேரி 
வரவேற்புரை -தோழியர் முத்துப்பேச்சி அவர்கள் OA கோட்ட அலுவலகம் 
                                   மகளிர்    தின சிறப்புகள் குறித்த உரை 
    தோழியர் ஆனந்தகோமதி அவர்கள் PA டவுண் 
                         நெல்லை   தொழிற்சங்கத்தில் தோழியர் பங்கு -குறித்து உரை 
தோழியர் ஹைருனிசா பேகம்  PA பாளையம்கோட்டை 
                            மகளிர்   தின சிறப்பு கவிதை 
 தோழியர் S.முத்துலட்சுமி  PA பாளையம்கோட்டை 
                                         அனைவரும் வருக !
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் 

அன்பார்ந்த தோழர்களே !
   நடந்து முடிந்த LGO தேர்வு முடிவுகளில் -PAPER I &PAPRE II வில் நீக்கப்பட்ட வினாக்களுக்கு கூடுதல் மதிப்பெண்களை வழங்கிட கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையை மாற்றி கடந்த 2014 யில் நடைபெற்ற தேர்வில் DELETE செய்யப்பட்ட வினாக்களுக்கு கடைப்பிடிக்கப்பட நடைமுறைகளை பின்பற்றி மேலும் பல ஊழியர்கள் எழுத்தராக தேர்வு பெறமுடியும் என்று பல்வேறு தொழிற்சங்க தலைவர்களுக்கு கடிதங்களை தயாரித்து அனுப்பிவைத்துள்ளார்கள் .அந்த மாதிரி கடிதம் உங்கள் பார்வைக்கு 




 

LGO Exam/Dlg                                                                               Date:   07.03.2019
 

To

DDG (Recruitment),
O/o.Secretary, Department of Post,
Dak Bhavan, New Delhi - 110 001.

Sir,
            Sub:    Request for helping Postman candidates appeared for LGO exam
                        held on 09.12.2018 by allotting additional four marks for deleted
                        questions No.40 & 41 in 1st paper and additional six marks in Paper
                        II for 3 deleted Qns.No.26, 33 & 50 in ‘A’ Series and request for                                     prescribing 32 marks for SC/ST Candidates  instead of 33 Marks odd                number  could be given in calculation of 2 marks for each question -                                  Reg.
---------
          We wish to bring one pertinent issue to take up at Directorate level to get rid of grievances of more LGO candidates, appeared for PA exam held on 09.12.2018 and secured four marks short in Paper I and six marks in Paper II in ‘A’ Series.

          2)       It is intimated that question No.40 & 41 were deleted in Paper I  & 3 questions were deleted in Paper II in ‘A’ series, by DoP Order No.F.No.A-34012/05/2018-DE/DE Section, Dak Bhavan, New Delhi, dt.22.02.2019. (A copy of the ruling is attached herewith for kind perusal). 

3)       But, while taking a decision regarding allotment of marks for deleted questions, directorate has reduced the total marks as 96 for paper I and worked out pass mark as 38 proportionately to 48 questions for UR & OBC Candidates.  This is not correct and it has no precedence. What has to be done is 4 marks have to be added for paper I for all candidates, who have attended the deleted questions.

          4)       Similarly, in Paper II, in A series, Qn.No.26, 33 & 50 have been omitted for that exam.  Hence, the candidates secured less than pass marks are seeking to put 6 marks additionally for deleted questions at 2 marks for each question.  This will help to get many candidates to got pass marks in Paper II to get posting in unfilled vacancies in PA cadre.

          5)       It is a decision of directorate without any valid principles and by that decision, many LGOs could not get pass mark, even though many vacancies are going to lie vacant after posting.

          6)       For LGO’s to PA exam held on 23.11.14 for 2014 vacancies, result was announced on 16.09.2015 by CPM’s circular No. REP/4-1/PA-SA/14-con. dated 16.09.2015.
 In that notification it may seen in page 3, additional marks have been ordered for related questions for candidates attempted answer for the deleted questions. (Ref: - Page No. 3 in respect of paper 2 /LGP - item No 2 of memo  dated 16.09.2015 of  CPMG Tamilnadu Circle (a copy is enclosed for kind ready reference) It is learnt that additional marks are allotted in UPSC Exams also for deleted  questions. It is requested to adopt same  yard stick as done in  vacancies 2014 and procedure adopted by UPSC, for officials who attempted answers for related questions in paper 1 and 2 of LGO examination for 2016/ 2017-2018 vacancies. If it is done many postman and MTS will get elevation as PA in  remaining vacancies. 
  
7) For candidates belonging to SC candidates, pass marks has been prescribed as 33. But, while calculating two marks for each question, either 32 marks or 34 marks alone could be prescribed to SC candidates. Since 34 is more than 33, minimum pass marks for SC candidates, it should be prescribed as 32 marks only for them as minimum qualifying marks.


It is requested to arrange for coming forward for revising the decision taken already in DoP’s order dt.22.02.2019 to help the Postmen / MTS staff to get berth as PAs in our Postal Department, in unfilled vacancies of PAs after announcement of merit list of candidates, appeared for LGOs to PA exam held on 09.12.2018.


Thanking you, Sir,

Yours faithfully,


                                             முக்கிய செய்திகள் 
  திருநெல்வேலி கோட்டத்தில் இந்த முறை LSG பதவியர்வில் 7 தோழர்கள் வேறு கோட்டங்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .மாநில சீனியாரிட்டி அடிப்படையில் கடைசி 7 ஊழியர்கள் இன்று காலைக்குள் விருப்ப கோட்டங்களை தெரிவு செய்யவேண்டும் என்று கோட்ட அலுவகம் மூலம் கேட்கப்பட்டுள்ளது .இதுகுறித்து 
நேற்று இரவு நமது மாநிலசெயலர் தோழர் வீரமணி அவர்களை தொடர்புகொண்டு UNFILLED HSG II பதவிகளை LSG ஆக நமது மண்டலத்தில் அறிவிக்கவேண்டும் என வற்புறுத்தப்பட்டது .மாநிலசெயலர் இன்று CPMG அவர்களை இன்று சந்தித்து பேசுவதாக தெரிவித்துள்ளார்கள் .நமது மண்டலச்செயலரிடமும் இதுகுறித்து பேசியுள்ளோம் .இதற்கிடையில் வேறுகோட்டங்களுக்கு செல்லும் ஊழியர்கள் கீழ்கண்ட கடிதங்களை கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

FROM


TO 
           THE DIRECTOR OF POSTAL SERVICES
           SOUTHERN REGION 
            மதுரை -625002

Thro -Proper Channel 


RESPECTED SIR 
                                SUB -EXERCISE OF OPTION-REG
                                REF  -  RO MEMO.....

                         I am at present working in Tirunelveli Division .as per the RO memo cited above 
I have been promoted to LSG cadre I hereby exercise my option for divisional allotment in the LSG cadre in the following Division 
1.


                                                                    Thanking you 


                                                                                                               Yours Faithfully 
Date 
Station 

                                                   
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை                                                                                


Wednesday, March 6, 2019

LSG பதவி உயர்வினில் மாநிலம் முழுவதும் ஒரே நிலை எடுத்திட வேண்டும் --மாநிலச்சங்கத்திற்கு வேண்டுகோள் 
           கேடர் சீரமைப்பின் இரண்டாவது பட்டியலின் படி பதவி உயர்வினை அளித்திட தமிழகத்தில் சென்னை மணடலத்தில் ஒரு முடிவு ஏனைய மணடலங்களுக்கு ஒரு முடிவு என்ற நிலை மாற்றப்படவேண்டும் .UNFILLED HSG II பதவிகளை LSG ஆக கணக்கிட்டு LSG ஊழியர்களுக்கு அந்த பதவிகளில் இடமாறுதல் கொடுக்கலாம் என்ற CCR மண்டல முடிவுகள் CPMG அலுவலகத்தால் இன்று வரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை .இதற்கிடையில் தென்மண்டலத்தில் UNFILLED HSG II காலியிடங்களை VACANCY கணக்கீட்டிற்கு மட்டுமே எடுக்கப்படும் என்றும் LSG ஊழியர்களுக்கு இடமாறுதலுக்கு அறிவிக்கமுடியாது என்ற நிலை எடுக்கப்பட்டுள்ளது .இதே நிலைதான் மற்ற மண்டலங்களிலும் இருப்பதாக தெரிகிறது .HSG II பதவிகளை LSG பதவியாக தகுதி இறக்கம் செய்யப்பட்டால் புதிய LSG தோழர்களின் இடமாறுதலில் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் இன்று மெல்ல மெல்ல குறைய தொடங்கிவிட்டன .ஆகவே மாநிலச்சங்கம் இந்த பிரச்சினையில் தீவீரம் காட்டி CCR மண்டலத்தின் முடிவினை தமிழகத்தின் அனைத்து மணடலங்களுக்கும் அமுல்படுத்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் 
மாநில சங்கத்தின் முந்தைய பதிவு இதோ !
கேடர் சீரமைப்பு - 
HSG II பதவிகள் 
குறித்த நிர்வாகத்தின்  நிலைப்பாடு 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கேடர் சீரமைப்பில் தகுதி உயர்த்தப்பட்டு, தகுதியான ஊழியர் மூலம் நிரப்பப்படாத HSG II பதவிகளை இலாக்காவின் 5.12.2018 உத்திரவுப்படி தற்காலிகமாக  மீண்டும் தகுதி இறக்கம் செய்து LSG பதவிகளாக காட்டுவதில் மாநில அலுவலகம் சுணக்கம் காட்டுகிறது. 
ஆனால் இதுகுறித்த நடவடிக்கைகள் சென்னை பெரு நகர மண்டல PMG அவர்களால் எடுக்கப்பட்டு அந்தப் 
பதவிகள் LSG ஆக அடையாளமிடப்பட்டு கோப்புகள் ஒப்புதலுக்காக 
மாநில அலுவலகம் அனுப்பப்பட்டுள்ளது. 
                          எப்போது பதவி உயர்வு வரும் என்று எதிர்பார்ப்பவர்கள் மத்தியில் இப்போது ஏன் பதவி உயர்வு என மனஉளைச்சலில் இருக்கும் ஊழியர்களின் நிலைமைகளை சரிசெய்திடவேண்டும் .
               கேடர் சீரமைப்பு --இது கேடர்களின் சீரழிவிற்கு அல்ல  என்பதனை நமது மாநிலச்சங்கம் விரைந்து நிரூபிக்கவேண்டும் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, March 5, 2019

              அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 
           வணக்கம் .தென்மண்டலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த LSG பதவி உயர்வுகளுக்கான இடமாறுதல்களை உடனே பிறப்பிக்க உத்தரவு வந்துள்ளது .நேற்றுமாலை (04.03.2019)வந்த உத்தரவு படி பதவி உயர்வு பெற்ற தோழர்கள் 15.03.209 குள் புதிய இடத்தில் JOIN பண்ணியிருக்கவேண்டும் என்றும் ஏதாவது விஜிலென்ஸ் மற்றும் ஒழுங்குநடவடிக்கை  எடுப்பதாக இருக்குமானால் அவர்களுக்கு மட்டும் மண்டல அலுவலகத்தில் அதற்கான சிறப்பு அனுமதிபெறாமல் அவர்களை RELIVE செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .15.03.2019 மாலைக்குள் மண்டல அலுவலகத்திற்கு அந்தந்த கோட்ட அலுவலகங்கள் compliance  ரிப்போர்ட் கொடுத்திடவேண்டும் .
  தோழர்களே ! இந்த பின்னணியில் இன்று(05.03.2019) நமது மாதாந்திரப்பேட்டி நமது கண்காணிப்பாளர் அவர்களுடன் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது .எந்த அடிப்படையில் இடமாறுதல்கள் கொடுக்கப்படும் என்ற முழுமையான தகவல்களுடன் MONTHLY MEETING முடிந்தவுடன் தெரிவிக்கப்படும் .                 
            நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ்-SK பாட்சா  கோட்ட செயலர்கள்  நெல்லை 




Monday, March 4, 2019

நெல்லை கோட்டத்தில் டெபுடேஷன் பிரச்சினைகளில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களைகவனத்தில்கொண்டு நமது கோரிக்கைகளை ஏற்று நமது கோட்ட அலுவலகம் மூன்றாவது முறையாக கடந்த 20.02.2019 தேதியிட்ட வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது .அதற்காக நமதுSSP அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .இன்னும் விடுபட்ட பதவியுயர்வில் வந்த தோழர்களுக்கு MACP II அளவுகோல்களை சில தலைமை அஞ்சலக அதிகாரிகள் சரியாக பின்பற்ற வேண்டி நாளைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 
    நமது SSP அவர்களுடனான மாதாந்திர பேட்டி 05.03.2019 அன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது .மாதாந்திர பேட்டியில் விவாதிக்க நாம் கொடுத்துள்ள பிரச்சினைகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .

NFPE
     ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                             TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-MM/ dated at Palayankottai- 627002 the 01.03.2019

To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,
            Sub:     Subjects for monthly meeting -reg
                                                *****
              The following subjects may kindly be included for discussion during the monthly meeting.

1. Nowadays advance of TA applied through SAP is not being sanctioned before proceeding for deputation which creates financial constraints to the officials deputed.  Hence, it is requested to sanction advance of TA as out of account atleast for the officials deputed to long distance offices / long term vacancies.

2. Request early passing of pending TA bills.

3. To ensure payment of salary in the last working day, it is requested to issue instructions to upload data on 25th of every month to DAP.

4. Though there are instructions by RO to provide hands to CPCs  during leave/deputation, Postmaster Tirunelveli HO is not following the said instructions and keeping the CPC unmanned. Request to issue suitable instructions to him.

5. Request to set right the faulty air-conditioner of WCTC, Palayankottai HO.

6. Request replacement of batteries of UPS as well as Genset of Tirunelveli Pettai SO.

7. It is requested to construct one additional toilet at Tirunelveli HO for the male staff.

8. It is requested to post the Rule-38 transferees at Ambasamudram, Vallioor and Tisayanvilai .Nanguneri /Kalakadu .Vadakkankulam areas so that deputation during short term vacancies can be done without hardships to the officials.

9. It is requested to explore alternative ways as there is an undue delay in procurement of UPS batteries to HOs and other LSG SOs.

10. Request issue of fresh LRPA lists.

11. Request early disposal of the representations of the officials made in connection with discrepancies in their seniority.

12. There are due transfers like LSG Postings, Shifting of LSG Treasurers and filling unfilled HSG II with LSG officials are upcoming which involves more than 75 to 80 transfers. Hence, it is requested to conduct a counselling like methods to reduce the grievances of the officials concerned which will be appreciated by all as a model employer.

13. Kilaambur SO which is Class B Office was incorrectly configured as Class C Office.  Hence, the router has to be replaced in order to connect one more system. Now, with a single system, supervison is very difficult and time consuming.

14. Request replacement of hard disk of faulty system of Pottalpudur SO.

                                               Pending Subjects                                                             
1.     68/2018 Request to carry out the civil maintenance work at Palayamkottai HO
2.     82/2018 Request to relocate Tondarbazar S.O.
3.     83/2018 Request for shifting Tirunelveli South S.O.to a better one.
4.     91/2018 Revise MDW of SB Branch Palayamkottai
5.     95/2018 Request to raise  the ground level to prevent water stagnation at Tirunelveli HO      
6.     104/2018 Request early passing of Transfer TA bills-c/o Shri.Vennikumar
7.     105/2018Request early dispose of staff representation C/O Shri.Vennikumar
8.     106/2018 It is requested to draw Cash handling allowance to all SPMS of B&C
9.     107/2018 Request to supply of separate scanner for Aadhar Enrolment/Updation at Tirunelveli HO
10.      01/2019 Request to replace the batteries of all UPS for the back office of Palayamkottai
11.      02/2019 Request to replace the batteries of UPS  in which the server of Tirunelveli HO has been connected.
12.      03/2019 Request to allot a room for female staff restroom at Palayamkottai HO
13.      05/2019 Request preparation of  MDW  for the general branch and SB branch of Tirunelveli HO
14.      11/2019 It is requested to carry out civil patch works in the dining room (Old canteen BUILDING )at Palayamkottai HO
                      The following officials will attend the meeting.
        1     S.K.Jacobraj  Divisional Secretary &LSG PA Tirunelveli HO
             2.     S.Muthumalai PA Sankar nagar
             3.     R.V.Thiyagaraja Pandian SPM Kilambur

             
                         Yours faithfully


[S.K.JACOBRAJ]