...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, November 5, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
                                               முக்கிய செய்திகள் 
                           LSG யை ஏற்கவா ? MACP யை இழக்கவா  ?
             கடந்த 01.11.2019 அன்று வெளிவந்த LSG பதவி உயர்வினை பார்த்துவிட்டு பல  ஊழியர்கள் /உறுப்பினர்கள்  இந்த கேள்வியைத்தான் கேட்டார்கள் .நாங்கள் LSG யை ஏற்கவா ? MACP யை இழக்கவா ?.
இதுகுறித்து நேற்று நமது கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று பேசினோம் .அவர்களும் MACP  ஏப்ரல் 2019 -செப்டம்பர் 2019 மற்றும் அக்டோபர் 2019 -மார்ச் 2020 வரையிலான MACP பதவி உயர்விற்கான வேலைகளை துரிதப்படுத்தி பதவி உயர்விற்கான கமிட்டி அமைத்திடுவோம் என்று கூறியது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது .இந்த பட்டியலில் உள்ள 36 ஊழியர்களில் 10 பேர்களுக்கு சென்ற ஆண்டு MACP வந்துவிட்டது .மார்ச் 2020 வரை கிட்டத்தட்ட 9 ஊழியர்கள் பதவி உயர்வின் விளிம்பில் உள்ளார்கள் .ஆகவே யாருக்கும் பாதிப்புகள் இல்லாமல் நல்ல முடிவுகள் விரைவில் வரும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
                   * அதேபோல் LSG VACANCY கள் முன்னதாகவே முழுமையாக அறிவிக்கப்படும் என்பதும் வரவேற்கத்தக்கதாக இருந்தது .
                   * நமது கோட்ட அலுவலகத்தில் மீண்டும் STAFF-I  பிரிவிற்கு மாற்றம் நடைபெற்றுள்ளது .
                  *குறைந்தபட்ச ஊதியம் பற்றி....மத்திய அரசின் கருத்து ..*9 மணி நேரம் வேலைபார்த்தால்..சராசரி ஒரு வேலைநாள்
அப்படியென்றால் 8 மணி நேர....
உழைப்பு, ஓய்வு,தூக்கம் என்பது தொழிலாளி இரத்தம் சிந்தி....
போராடிப் பெற்ற உரிமை !
1 மணி நேரம் கூடுதலாக உழைக்க வேண்டும் என்றால்....
12.5% ஊதியத்தை தொழிலாளி சட்டபூர்வமாய் இழக்கிறார் ! சிந்தீப்பீர் !
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 



0 comments:

Post a Comment