NFPE -P3
தமிழ் மாநிலம்
627006
----------------------------------------
அன்பார்ந்த தோழர்களே!
தோழியர்களே!
குறைந்த பட்ச ஊதியம்
------------------------------------------
ஒவ்வொரு ஊதியக்குழுவிலும் தேவைக்கேற்ற குறைந்த பட்ச ஊதியம் (Need based Minimum Wage) என்பது முக்கிய பங்கு வகிக்கும்.
இரண்டாவது ஊதியக்குழுவின் பிரதான கோரிக்கையான தேவைக்கேற்ற குறைந்த பட்ட ஊதியம் (Need based Minimum wages)இன்று வரை கோரிக்கையாகவே தொடர்கிறது.
15 -வது சர்வதேச தொழிலாளர் காங்கிரஸ் வகுத்தெடுத்துக் கொடுத்த Dr.அக்ராயாடு பார்முலாவை முன்னிலைப் படுத்தியே நமது கோரிக்கைகள் முன்னிறுத்தப்படுகின்றன.
அதன்படி ஒரு குடும்பம் என்றால் 3 பேர் (யூனிட் )அவர்களுக்கேற்ற உணவு எத்தனை கலோரிகள் ,உடை -எத்தனை கஜம் ,உறைவிடம் -என்ன பரப்பளவு,மின்பகிர்வு - ,கல்வி ,மருத்துவம் இவைகளை காரணிகளாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன.
அன்று குடும்பத்தில் மூன்று பேர்.இன்று குறைந்தபட்சம் நான்கு பேர்.உணவில் புரதச்சத்து அளவில் மாற்றம் என ஒவ்வொரு ஊதியக்குழுவிலும் நாம் கேட்ட குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படவில்லை.
ஏழாவது சம்பளக்குழுவில் நாம் கேட்ட குறைந்த ஊதியம் ரூபாய் 26000.
ஆனால் கொடுத்தது ரூபாய் 18000.குறைந்த பட்ச ஊதியத்தில் பாதிதான் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூபாய் 9000 நிர்ணயிக்கப்பட்டது.
அதனால் தான் குறைந்தபட்ச ஊதியத்தில் அரசாங்கம் இவ்வளவு இறுக்கமாகவும் ,அதிகபட்ச ஊதியத்தில் தாராளமாகவும் இருக்கிறது.
5 வது சம்பளக்குழுவில்
குறைந்த ஊதியம் Rs 2550 அதிகபட்ச ஊதியம் Rs 30000 வித்தியாசம் 11.76 சதவிகிதம்.
ஆறாவது சம்பளக்குழுவில் Rs 7000 -Rs 90000 வித்தியாசம் 12.85 சதவிகிதம்.
ஏழாவது சம்பளக்குழுவில்
Rs 18000 -Rs 250000 வித்தியாசம் 13.80
ஒவ்வொரு ஊதியக்குழுவிலும் குறைந்த பட்ட ஊதியத்திற்கும் அதிகபட்ச ஊதியத்திற்கும் உள்ள வித்தியாசம் கூடிக்கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன?
அதிகாரிகளின் போராட்ட வீச்சா?
ஊழியர் தரப்பு பேச்சுவார்த்தையின் தாக்கமா?
இரண்டுமே இல்லை ஆட்சியாளர்களின்
கொள்கை தான் காரணம்.
நாளை நமது மாநிலச்சங்கம் சார்பாக கொடுக்கப்பட குறைந்தபட்ச ஊதியம் குறித்த கோரிக்கை மனுவினை பார்ப்போம்.
தொடரும்..
தோழமையுடன்
S.K.ஜேக்கப் ராஜ்
மாநிலச்செயலாளர்
0 comments:
Post a Comment