...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, December 4, 2019

                                                      வாழ்த்துகிறோம்   

            
    அன்பு தோழியர் S . பூங்குமரிஆதிமூலம்  SPM பேட்டை அவர்கள் தன்விருப்ப        ஓய்வு --04.12.2019
    தோழியர் பூங்குமரி அவர்களும் 
    புறப்பட்டுவிட்டார்கள் 
   ஆளெடுப்பு தடை அமுலான நாட்களில் 
    அஞ்சலகம் வந்த தோழர்களில் முதன்மையானவர் 
    போராட்ட காலங்களில் -நாம் போகமலே 
    அலுவலகத்தை அடைப்பதில் இ(ரு )வரும் 
     ஒருவொருக்கொருவர் குறைந்தவரில்லை 
     இணையவர்களாகவே இணைந்து 
    இயக்க பணியை ஆற்றியவர் 
    1992  யில் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் 
     தம்பதி சகிதமாய் அலுவலகத்தை மூடி
    அண்ணன் ஆதியும் -அக்காவும் அன்றே 
    நிர்வாகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் 
     இரண்டாண்டு  ஆண்டு ஊதிய வெட்டை 
   இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட இரும்பு உள்ளம் 
   தொழிற்சங்க பணிகளில் அன்றைய நாட்களில் 
   முழுமையாய் ஈடுபடுத்தி கொண்டவர் 
   என்ன செய்தது யூனியன் என்று சராசரி ஊழியரைப்போல் 
   எந்நாளும் கேட்டதில்லை -நமது சங்கத்திற்கு 
   தன்னாலான உதவிகளை 
   தயங்காமல் ஆற்றியவர் 
  அருமை தோழியரின் பணிஓய்வு காலங்கள் 
  சிறக்க வாழ்த்துகிறோம் ! வணங்குகிறோம் !
                                    தோழமையுடன் நெல்லை NFPE 

  

Tuesday, December 3, 2019

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                 நெல்லை அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்காம் பிரிவு சங்கங்களின் கூட்டு பொதுக்குழு கூட்டம் 
நாள் --12.12.2019 வியாழன் 
நேரம் --மாலை 6 மணி 
இடம் --பாளையம்கோட்டை HO
கூட்டு தலைமை -தோழர்கள் T .அழகுமுத்து கோட்டத்தலைவர் P3
                                                                     A .சீனிவாச சொக்கலிங்கம் P4
பொருள் ;  1.ஜனவரி 8 ஒருநாள் வேலைநிறுத்தம் 
                        2.அஞ்சல் மூன்றின் 39 வது மாநில மாநாடு (பிப்ரவரி 9-11 கோவை ) நன்கொடைகள் சம்பந்தமாக மற்றும் நமது கோட்ட சங்க நிலைப்பாடு குறித்த அறிவிப்புகள் 
                       3.தலமட்ட பிரச்சினைகள் 
                          (a ) மீண்டும் தலைதூக்கும் DEPUTATION குளறுபடிகள் 
                          (b ) அடிப்படை வசதிகள் சிறிதும் இல்லாத SPM குடியிருப்புகள் 
                          (C ) இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
  தோழர்கள் /தோழியர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
                                    நன்றி .
குறிப்பு ;கோவை மாநில மாநாட்டிற்கு வரவிரும்பும் தோழர்கள் தங்கள் பெயர்களை விரைவில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .ரயில் கட்டணம் ரூபாய் 600 விரைந்து அனுப்பிடுவீர் .
இதுவரை .......ஜேக்கப் ராஜ் .வண்ணமுத்து .அழகுமுத்து ,பிரபாகர் ,ஆசைத்தம்பி மற்றும் செல்வின்ஆகியோர்  தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, December 2, 2019

                                                   முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                            அஞ்சல் துறையின் மீது அடுத்த தாக்குதல் --
பாரம்பரியமிக்க நமது துறை பல்வேறு புது புது தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது .POSB இருக்கும் போதே  IPPB ,இன்சூரன்ஸ் பிரிவிற்கு தனி இயக்குனரகம் ,பார்சல் சேவைக்கு புது இயக்குனரகம் என மூன்று திட்டங்கள் நடைமுறையில் உள்ளன .இன்று அடுத்த நடவடிக்கையாக COMMON SERVICE CENTER என்று நமது அலுவலகதிற்குள்ளே நமது சர்வரை பயன்படுத்தி தனியார் சேவைகளை நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளதாம் .கிட்டத்தட்ட சுமார் 6000 அஞ்சலகங்களில் இந்த COMMON SERVICE CENTER  தொடங்கப்படவுள்ளதாம் .எப்படி ரயில்வே துறையில் அரசாங்க தடத்தில் தனியார் ரயில் இயக்கப்படுகிறதோ ,எப்படி தொலைத்தொடர்பு துறை கேபிள் வழியாக தனியார் செல்போன் நிறுவனங்கள் சேவையை பெற்றதோ அதேபோல் அஞ்சல்துறையிலும் இந்த ஆபத்துகள் நெருங்கிக்கொண்டு வருகின்றன .1991 முதல் அரசாங்கத்தின் புதிய பொருளாதார கொள்கையை   நாம் எதிர்த்து போராட்டங்களை நடத்தி கொண்டிருந்தாலும் போராட்டத்தின் தன்மையை பார்த்துதான் சிலஇடங்களில் அரசு பின்வாங்குகிறது 
(உதா .போர்தளவாடங்களை தயாரிக்க தனியாருக்கு அனுமதி ) பல இடங்களில் அமுல்படுத்துகிறது .இந்த தாக்குதலை எதிர்த்தும் குறிப்பாக புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் புதிய தோழர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் எவ்வளவு என்பதை உறுதிப்படுத்தவும் நடைபெறவிருக்கும் ஜனவரி 2020  எட்டாம் தேதி ஒருநாள்  வேலைநிறுத்தத்தை வெற்றிபெற செய்திடுவோம் .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை