...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, March 4, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                 தமிழக அஞ்சல் நான்கின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 
கோரிக்கைகள் 
1.மூன்றாண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் நேரடி தபால்காரர் தேர்வை உடனே நடத்து !காலியாகவுள்ள அனைத்து தபால்காரர் MTS மற்றும் LR தபால்காரர் பதவிகளை நிரப்பு !
2.அட்பற்றாக்குறைக்கு மத்தியில் COMBINED DUTY உள்ள நிலையில் [பார்சல் நோடல் டெலிவரிக்கு தபால்காரரை பயன்படுத்துவதை நிறுத்து !
3.நடைமுறைக்கு சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்து SB RD TD SSA IPPB கணக்குகளை பிடிக்கவும் PLI RPLI பாலிசிகளை பிடிக்கவும் கொடுக்கும் நெருக்கடிகளை கட்டுப்படுத்து !
  மாநிலச்சங்க அறைகூவல் படி பாளையம்கோட்டையில் வருகிற 10.03.2020 அன்று நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைத்து P 3 P 4 மட்டும் GDS ஊழியர்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
* நமது கோட்டத்தில் எழுத்தர் முதல் MTS வரை இடமாற்றம் குறித்து பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டுவருகின்றன .ஆகவே TENURE முடிக்கும் முன்பே  சில இடங்கள் நிர்வாக  காரணங்களுக்காக ? நிரப்படுவதாக இருக்கலாம் .ஆகவே அனைத்து ஊழியர்களும் குறிப்பாக LSG யில் வெளியிடம் சென்ற ஊழியர்களும் PA வாக புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட ஊழியர்க்ளும் இன்றே ஒரு விருப்ப இடமாறுதல் விண்ணப்பத்தை (WITHOUT TA /TP ) கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு அதன் நகல்களை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .
*எங்கேயாவது உங்கள் விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டு ஜூனியர் அந்த இடத்தை பெற்றுக்கொண்டால் தயங்காமல் மேல்முறையிடு செய்ய கோட்ட சங்கத்தை அணுகும் படியும் கேட்டுக்கொள்கிறோம் .
*வருகிற 08.03.2020 அன்று மதுரையில் நடைபெறும்அஞ்சல் மூன்றின்  மதுரை கோட்ட மாநாட்டிற்கு நமது P3 மாநிலசெயலர் வருகிறார் .ஆகவே குறைகள் ஏதும் இருப்பின் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
  
                        

Tuesday, March 3, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                              *நடந்து முடிந்த எழுத்தர் தேர்வில் இருந்த SURPLUS  தேர்ச்சியாளர்கள் 121 ஊழியர்கள் சார்ட்டிங் அசிஸ்டன்ட் ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார்கள் .நமது கோட்டத்தில் SA ஆக தேர்ச்சிபெற்றுள்ள தோழர் ருக்மணி கணேசன் (வள்ளியூர் ) தோழர் மகேந்திரன் அவர்களை நெல்லை NFPE வாழ்த்துகிறது .
                          *மதுரை அஞ்சல் மூன்றின் கோட்ட மாநாடு 08.03.2020 அன்று மதுரை தல்லாகுளத்தில் நடைபெறுகிறது .நமது முன்னாள் பொதுச்செயலர் அண்ணன் KVS மற்றும் மாநிலசெயலர் தோழர் A .வீரமணி ஆகியோர் கலந்துகொள்கின்றனர் .மாநாடு சிறக்க NELLAI NFPE வாழ்த்துகிறது .
                       *நமது கோட்டத்திற்கு RULE 38 யின் கீழ் வந்துள்ள தோழர் சரவணன் MTS ராமேஸ்வரம் அவர்களை வரவேற்கிறோம் .
                     * ஏற்கனவே RULE 38 யின் கீழ் நமது கோட்டத்திற்கு வந்துள்ள எழுத்தர்கள் மற்றும் தபால்காரர்களுக்கான இடமாறுதல் உத்தரவுகளுக்கான கமிட்டி 28.02.2020 அன்று நடைபெற்றது ..உத்தரவுகள் இன்று சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது .
                               நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, March 2, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
   நெல்லை கோட்டத்தின் மூத்த தோழியர் MP.விஜயா LSG OA  DO  அவர்களின் பணிநிறைவு 01.03.2020 அன்று பாளையம்கோட்டை கோபாலன் மஹாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது .நமது கோட்டத்தலைவர் அழகுமுத்து உதவி செயலர் வண்ணமுத்து PRI கனகசபாபதி ஓய்வூதியர் சங்க நெல்லை மாவட்ட உதவி செயலர் விஜயராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் .நிகழ்ச்சியை நமது கோட்ட செயலர் ஜேக்கப் ராஜ் தொகுத்து வழங்கினார்கள் .தோழியரின்பணிஓய்வு காலங்கள் சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது