...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 4, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் . 

                           தமிழகத்தில் தலைவிரித்தாடும் டார்கெட் பிரச்சினைக்கு முடிவுகட்டிட கூட்டு போராட்டக்குழுவின் சார்பாக மூன்றுகட்ட போராட்டங்களை நடத்துவதாக அறிவித்திருப்பது நமக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது .மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மண்டல அலுவலகங்கள் முன்பு நமது போர்க்குரல் ஒலிக்கப்போகிறது .மதுரையில் நடைபெறவிருக்கும் (15.09.2021 ) தர்ணா போராட்டத்திற்கு நமது கோட்டத்தில் இருந்து பெருமளவில் நாம் கலந்துகொண்டு தர்ணாவை வெற்றிகரமாக்குவோம் 

நன்றி .போராட்ட வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Friday, September 3, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                     நாம் யாருக்கும்  அடிமைகளல்ல ! நமக்கு யாரும் எஜமானாரும் அல்ல !

கணக்குப்பிடி ! பாலிசி பிடி ! AEPS நடத்து ! IPPB கொடு ! தங்க பத்திரம் வாங்கு அல்லது விற்றுக்கொடு !சரி இவைகளைக்கூட சகித்துக்கொண்டு நமது தபால்காரர்கள் மனச்சுமையோடு செல்வது போதாதென்று ஒவ்வொருநாளும் கண்டிஷன் பெயிலில் வந்த குற்றவாளி காவல்நிலையத்திற்கு சென்று கையெழுத்து போடுவதைபோல் உபகோட்ட அலுவகத்திற்கு சென்று ரிப்போர்ட் கொடுக்கவேண்டும் என்று எந்த சட்டம் சொல்லுகிறது ! தபால்காரர் /MTS விடுப்பு கேட்டால் ஆளை(GDS) ப்பிடித்துக்கொண்டு வா !இல்லையென்றால் விடுப்பு கிடையாது அல்லது COMBINED DUTY பார் என கட்டளைபோடுவது சரியா ? OFFICIATING பார்க்கின்ற GDS ஊழியர்களை அடிமைகளின் வாரிசுகளைப்போலவும் OUTSIDER களை கட்டாயப்படுத்தி கண்ணீர்வரவைப்பது ஏற்புடையது தானா ? அவர்களே பிழைக்க வழியின்றி அன்றாட கூலியைப்போல வறுமையின் விளிம்பில் நமதுஅலுவலகம் தேடி அண்டி கிடக்கின்றனர் உங்கள்   இலக்கு பாவம் அவர்களையும் விட்டுவைக்கவில்லையே ?ஒரு தலைமை அஞ்சலகத்தில் பணிபுரிகின்ற தபால்காரர்களை கண்காணிப்பது தலைமை அஞ்சல் அதிகாரியா ?அல்லது அதையும் தாண்டி உபகோட்ட அதிகாரிகளா ?  விரைவில் இதுபோன்ற குட்டி அதிகாரிகளின் அதிகார மீறல்களை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்திட அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு முடிவெடுத்துள்ளது .இதர சங்கங்களிடமும் கலந்தாலோசித்து நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டங்களை மிகப்பெரும் இயக்கமாக நடத்திக்காட்டுவோம் .

                     இதுபோன்ற தாக்குதல்கள் ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்ட போதெல்லாம் NFPE எனும் நமது  பேரியக்கம்  வீறுகொண்டெழுந்து ஒற்றுமை எனும் கவசம் தரித்து  எங்கள் தோழர்களை பாதுகாத்து தந்திருக்கிறோம் ..பழைய வரலாறு மீண்டும் படிக்கவேண்டிய அவசியம் அதிகரிகளுக்கும் பழைய வரலாறு மீண்டும் படைக்கவேண்டிய கட்டாயத்தில் நாங்களும் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதே உண்மை .அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்து போராடாது அநீதி களைய முடியாது .தேவையில்லை அனுதாபம் தேவையெல்லாம் நீதியும் சுதந்திரமும் தான் ...ஒன்றுபடுவோம் ..வென்று காட்டுவோம் ..ஆம் தோழர்களே நம்மில் யாரும் அடிமைகளல்ல ! நமக்கு யாரும் எஜமானாரும் அல்ல !

 இன்குலாப் ஜிந்தாபாத் !  தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                          

                                

Thursday, September 2, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

              கடந்த 25.08.2021 அன்று நடைபெற்ற  மாதாந்திர பேட்டியின் நடைமுறை குறிப்புகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன. பெரும்பாலான பிரச்சினைகளில் சாதகமான முடிவுகளும் ,தனது அதிகார வரம்பிற்கு மேலான விஷயங்களை மண்டல நிர்வாகத்திற்கும் எடுத்துசெல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .ஓரிரு பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து எந்தவித Request இல்லை என்று முடித்துவைக்கப்பட்டுள்ளது .மாதாந்திர பேட்டி தவிர நமது கோட்ட சங்கம் எழுதுகின்ற கடிதஙக்ளுக்கு உடனுக்குடன் நிர்வாகத்தால் பதில் வருவது பாராட்டிற்குரியது .அடுத்த பேட்டி 23.09.2021அன்று நடைபெறுவதாகவும் வருகிற 15.09.2021 குள் நாம் நமது பிரச்சினைகளை கோட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .ஆகவே நமது தோழர்கள் /தோழியர்கள் தங்கள் அலுவலக பிரச்சினைகளை எங்களிடம் தெரிவித்தால் மாதாந்திர பேட்டிக்கு செல்வதற்கு முன் சம்பந்தப்பட்ட அலுவகத்தில் இருந்து கடிதங்களை அனுப்ப நமது கோட்ட சங்கம் உதவி செய்திட தயாராக இருக்கிறது ..நமது கோரிக்கைகளின் மீது அலட்சியம் காட்டாமல் அலசி ஆராய்ந்து அதை நிவிர்த்திசெய்ய முனைப்பு காட்டும் கோட்ட நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நாமும் பூர்திசெய்வோம் .வெறும் வாய்மொழியால் மட்டுமே பிரச்சினைகளை சொல்லிக்கொண்டு இருக்காமல் கோட்ட நிர்வாகத்திற்கு எழுத்துபூர்வமாக பிரச்சினைக்ளை கொண்டு சேர்ப்போம் ....நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை