...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, November 11, 2019

                                                முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                  வணக்கம் .கடந்த 08.11.2019 அன்று உச்சநீதிமன்றம் அஞ்சல் துறையில் GDS சேவைக்காலத்தை பென்ஷன் கணக்கீட்டிற்கு சேர்க்கமுடியாது என்ற ஒரு தீர்ப்பினை வழங்கியது நினைவிருக்கும் (GDS SERVICE CANNOT BE COUNTED FOR PENSION UNDER CCS (PENSION) RULES 1972. ALL FAVOURABLE JUDGEMENTS BY CATs & HIGH COURTS QUASHED BY SUPREME COURT)
சுமார் 160 கும் மேற்பட்ட OA மற்றும் பல்வேறு நிர்வாக தீர்பாயகம் கொடுத்த தீர்ப்புகள் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள் இவைகளை ஒரே வழக்காக்கி நடத்தப்பட்டது .இதில் வழங்கப்பட்ட அனைத்து சாதகமான தீர்ப்புகளையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது .ஆக இந்த வழக்கு முழுவதுமாக பென்ஷன் கணக்கீட்டிற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை இல்லாத பதவியுயர்வு பெற்ற ஊழியர்களுக்கு அவர்களின் GDS சேவைக்காலத்தை கணக்கில் எடுக்கவேண்டும் என்ற விசயம் மட்டுமே நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருந்தது .ஆகவே இதற்கும் 2002 மற்றும் 2003 காலியிடங்களில் 2004 யில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் கொடுக்கவேண்டும் என்கின்ற வழக்கிற்கும் சம்பந்தமில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
      *நமது NFPE சம்மேளனத்தின் சம்மேளன செயற்குழு மற்றும் கவுன்சில் வருகிற  24.11.2019 முதல் 27.11.2019 வரை  உபி மாநிலம் மதுராவில் நடைபெறுகிறது 
      * நமது அஞ்சல் மூன்றின் தமிழ்மாநில மாநாடு வருகிற பெப்ருவரி மாதத்தில் கோவையில் நடைபெறுகிறது .இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
        
    

Friday, November 8, 2019

                                                  முக்கிய     செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                       *1986 க்கு முன்பாக PA INDUCTION TRAINING காலத்தை TBOP பதவிஉயர்விற்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற உத்தரவை நமது கோட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுவிட்டது .35 ஊழியர்களுக்கு முதற்கட்டமாக 90 நாட்களுக்கு முன்தேதியி ட்டு  TBOP கொடுக்கப்பட்டுள்ளது .இதில் சில ஊழியர்களுக்கு இந்த   உத்தரவு வழங்கப்படவில்லை .இதற்கு நிர்வாகம் தெரிவிக்கின்ற பதில் என்னவென்றால் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கான பயிற்சிக்கான உத்தரவுகள் நிர்வாகத்திடம் இல்லை என்பதுதான் .இந்த வகையில் இதுவரை நமக்கு வந்த தகவல்கள் அடிப்படையில் தோழியர்கள் 
S .விஜயராணி S .தெய்வராணி மற்றும் ராணி அன்பரசி என்ற மூன்று தோழியர்கள்  விடுபட்டுள்ளார்கள் .கோட்ட சங்கம் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்களுக்கும் இந்த உத்தரவை பெற்றுத்தரும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
                    * MACP குறித்து மீண்டும் ஒரு வழிகாட்டுதலை மத்திய அரசு 22.10.2019அன்று வெளியிட்டுள்ளது .அதன்படி 
* ஒவ்வொரு நிதியாண்டிலும் இரண்டு முறை MACP க்கான ஸ்க்ரீனிங் கமிட்டி கூடவேண்டும் (.ஏப்ரல் -செப்டம்பர் ) க்கான கமிட்டி ஜனவரி முதல் வாரத்திலும் (அக்டோபர் -மார்ச்) க்கான கமிட்டி ஜூலை முதல் வாரத்திலும் கூடவேண்டும் 
*25.07.2016 க்கு பிறகு MACP வருகிறவர்களுக்கு 2013-2014 -2014-2015 -2015-2016 ஆண்டுகளுக்கு கிரேடிங் GOOD என்றும் 2016-2017 மற்றும் 2017-2018 ஆண்டுகளில் VERY GOOD என்றும் இருக்க வேண்டும் 
*ரெகுலர் பதவி உயர்வை ஏற்க மறுத்த ஊழியர்களுக்கு MACP பதவி உயர்வு பரிசீலிக்க கூடாது 
 *தமிழ் மாநிலத்தில் 2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்கான GDS ஊழியர்களிலிருந்து MTS ஊழியர்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.--தேர்வு நாள் :- 22 12 2019 
இந்த தேர்வினை எழுத GDS ஊழியர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை.
 2018ம்ஆண்டுக்கான தேர்வு எழுதுவதற்கு 01.04.2018 மூன்றாண்டுகள் GDS ஊழியராக பணி முடித்து இருக்க வேண்டும்.
 2019 ஆம் ஆண்டுக்கான தேர்வு எழுதுவதற்கு O1.01. 2019 அன்று மூன்றாண்டுகள் GDS ஊழியராக பணி முடித்து இருக்க வேண்டும்.
 கல்வித்தகுதி :- பத்தாம் வகுப்பு
*BSNL VRS  திட்டத்திற்கு இதுவரை குரூப் A பிரிவில் 1856 பேர்களும் குரூப் B பிரிவில் 4044 பேர்களும் குரூப் C பிரிவில் 15216 பேர்களும் 
குரூப் D பிரிவில்2042  பேர்களும் என சுமார் 20000 பேர்களுக்கு மேல் விருப்பம் தெரிவித்து OPT செய்துள்ளார்கள் இது 07.11.2019 தேதியின் நிலைமை .(இதற்கு பெயர் தான் தானா சேர்ந்த கூட்டமா ?)
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

                                           முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
        *  ஆய்வாளர் தேர்வு எழுதுவோர்களுக்கான ஹால் டிக்கெட் பெற்றுவிட்டீர்களா ?
Whomever applied for this year's IP Examination, shall download Admit Card by heading to this site. 
Admit Card will be available for download from 07.11.2019 on wards
User ID: Your registered E-mail ID
Password: given at the time of registration of IP Examination.
தேர்விற்கு தயாராகும் அனைவருக்கும் NELLAI NFPE யின் சார்பாக  தேர்வில் வெற்றிபெற  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் 
--------------------------------------------------------------------------------------
Rule 38 யின் கீழ் இன்றளவும் RELIVE செய்யப்படாத ஊழியர்களை வருகிற 30.11.2019 குள் RELIVE செய்திட வேண்டும் என CPMG அலுவலகம் மீண்டும் அனைத்து PMG களுக்கும் அறிவுறுத்தியுள்ளது .ஏற்கனவே 31.10.2019 குள் RELIVE செய்யவேண்டும் என்பதற்கு பல கோட்டங்களில் இருந்து INWARD மற்றும் OUTWARD காரணங்களை காட்டி தாமதப்போக்கை தொடர்ந்ததால் மீண்டும் CPMG அலுவலகத்தில் இருந்து இந்த உத்தரவு வந்துள்ளது .
--------------------------------------------------------------------------------------------------------------------
*நமது கோட்டத்தில் நிலவும் MTS/போஸ்ட்மேன் காலியிடங்கள் குறித்த சில தகவல்கள் 
பாளை உப கோட்டம் MTS -10 POSTMAN-33
திருநெல்வேலி                 MTS-4   POSTMANS-18
அம்பை                                 MTS-3   POSTMANS-18
வள்ளியூர்                            MTS- 3 POSTMANS-   5
மொத்தம் MTS-20 POSTMAN --74
----------------------------------------------------------------------------------------------------------------------
*பணமதிப்பிற்கு இன்று மூன்றாம் ஆண்டு -நவம்பர் 8 2016
 சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயர்மதிப்புள்ள ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகள் திடிரென செல்லாததாக அறிவிக்கப்பட்டது .
பண முதலைகளுக்காக விரிக்கப்பட்ட வலைகளில் புழு கூட சிக்கவில்லை என்றும் இது மாபெரும் தோல்வி எனவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை