...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, August 31, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் .

                    இலாகா தேர்வுகளுக்காக(LGO& POSTMAN EXAMINATION )  நமது முன்னாள் பொதுச்செயலர் அருமை  அண்ணன் KVS அவர்கள் தயாரித்து வெளிவந்துள்ள STUDY MATERIALS விற்பனைக்கு வந்துள்ளது .விருப்பமுள்ளவர்கள் கோட்ட சங்கத்தை தொடர்புகொள்ளவும் .மேலும் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் ஆன்லைன் மூலம் (GOOGLE-MEET )நடைபெற்றுவருகிறது .நமது கோட்டத்தில் இருந்து சுமார் 28 தோழர்கள் இந்த ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்கள் .தேர்வுகள் சம்பந்தமாக வகுப்புகளில் சேர விரும்புகிறவர்களுக்கு  STUDY MATERIALS  புத்தக வடிவில் தேவைப்படுவோரும் NELLAI --NFPE கோட்ட செயலர்களை அனுகலாம் .

தமிழக அஞ்சல் வரலாற்றில் சமீபகாலமாக GDSTO PA  GDS TO போஸ்ட்மேன் போஸ்ட்மேன் /MTS TO PA  என அதிக எண்ணிக்கையில் தேர்ச்சிபெற்றுவருவதற்கு அவர்களுக்காக தொழிற்சங்கங்கள் உருவாக்கி கொடுத்த /கண்டுபிடித்து கொடுத்த காலி பணியிடங்களே முக்கிய காரணம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது .காலிப்பணியிடங்கள் சம்பந்தப்பட்ட கோட்டங்களோடு நின்றிருந்த காலம் மாறி அண்டை கோட்டங்களுக்கும் ஏன் RMS காலியிடங்களிலும் நமது அஞ்சல் பகுதி தோழர்கள் பதவி உயர்வு பெற்று இன்று மாநிலம் முழுவதும் நமது தோழர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்த NFPE பேரியக்கத்தின் முயற்சியும் பயிற்சியும் முக்கிய காரணம் என்பதை நினைவில் கொள்ளுவோம் !

               நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                                                டார்கெட்டும் --டார்ச்சரும் 

  தமிழகம்முழுவதும் இன்று அஞ்சல் ஊழியர்கள் மத்தியில்  நிர்வாகத்தால் பரப்பி விடப்பட்டிருக்கும் ஒரு சொல் டார்கெட் ...டார்கெட் ..ஒவ்வொருநாளும் ஊழியர்களை மனஉளைச்சலுக்கு உட்படுத்தும் இந்த மாய இலக்கை எட்டுவதற்கு கோட்ட நிர்வாகங்கள் கடைபிடிக்கும் அணுகுமுறைகள் கோட்டங்கள் தோறும் மாறுபடுகின்றன .ஒருநாள் POSB மெகா லாகின் ,மறுநாள் PLI /RPLI லாகின் ,அடுத்தநாள் TRANSACTION DAY அதற்கடுத்து AEPS  மெகா லாகின் எனவும் அறிவித்துவிட்டு ஒவ்வொரு லாகின் குறித்தும் புதுப்புது அறிவிப்புகள் குறைந்தது 10கணக்குகள் .பாலிசிகளுக்கு குறைந்தது பிரிமியம் 10000,CSC-SPV அன்று 10 CSC பணிகள் ,AEPS என்றால் குறைந்தது 10 பரிமாற்றங்கள் என ஊழியர்களை வி(மி )ரட்டி வரும் போக்குகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன .இதற்கிடையில் ஒவ்வொரு ஆதார் அலுவலகங்களிலும் ஆதார் பணிகள், ,அறிவிக்கப்படும் பொழுதெல்லாம் தங்கப்பத்திரம் விற்றாகவேண்டும் என்ற அன்பு கட்டளைகள் வேறு ? 

                     நமது உபகோட்டம் கோட்ட அளவில் முதல் இடம் பிடிக்கவேண்டாமா என உப கோட்ட அதிகாரிகள் ,நமது கோட்டம் மண்டலத்தில் முதலிடம் பெறவேண்டாமா என கோட்ட அதிகாரிகள் என அவரவர் அவரவரர்களின் உயர்மட்டங்களில் பாராட்டும் சீராட்டும் பெறுவதற்கு நம்மை பிழிந்தெடுக்க தொடங்கிவிட்டார்கள் .

                             டார்கெட்டும் --டார்ச்சரும்  என்ன  ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளா ? RPLI வந்த பொழுதில் இதுபோன்ற நெருக்கடிகள் இருந்தன நமது மாநில சங்கத்தின் தொடர் போராட்டத்தினால் அன்று CPMG அவர்களே  டார்கெட்டும் இல்லை --டார்ச்சரும் இல்லை GDS ஊழியர்களை மோட்டிவேட் பண்ணுங்கள் போதும் என்றார்கள் .

                     ஆனால் இன்று சிலகோட்டங்களில் GDS ஊழியர் என்றால் சம்பளத்தை குறைப்பேன்  என்பதும் இலாகா ஊழியர்கள் என்றால் APAR மதிப்பெண்களை குறைப்பேன் என்றும் ,ஒருமையில் பேசுவதும் ,ஏசுவதும் என ஊழியர்களை அன்றாட பணிகளை செய்யவிடாமல் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நடக்கின்ற நிர்வாகத்தை கட்டுப்படுத்தவேண்டியது காலத்தின் அவசியம் .

                        கடிவாளம் இல்லாத குதிரைகளாக --அங்குசம் இல்லாத யானைகளாக திரிகின்ற போக்கை நம்மை விட்டால் வேறு யாரால் கட்டுப்படுத்திட முடியும் ..ஊழியர்களின் பொறுமையையும் அமைதியையும் கண்டு அலட்சியமாக நடத்தும் நிர்வாகத்திற்கு ஒன்று சொல்லுவோம் .இந்த அமைதி பொங்கும் முன் கடல் கொண்ட அமைதி ,வெடிக்கும் முன் எரிமலை கொடுக்கும் எச்சரிக்கை முனங்கல்கள் ....

                    ஊழியர்களின் மனநிலை இன்று கொதிநிலையில் இருக்கிறது ..நமது மாநிலச்சங்கம் அறைகூவல் விடுக்கின்ற பட்சத்தில் அன்றைய நாட்களை போல மண்டல அலுவலகங்கள் முன்பு நமது படையெடுப்பை நடத்தி காட்டுவோம் ! 

                                             கடையடைப்பு நடத்துகின்ற 

                                             காலங்கள் அல்ல --இது 

                                            படையெடுப்பு நடத்துகின்ற 

                                            காலம் இது -என்ற கவிஞனின் கூற்றை மெய்யாக்குவோம்

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை  

                    


              

Thursday, August 26, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !  வணக்கம் .

  25.08.2021 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை உங்கள் பார்வைக்கு தருகிறோம் .

1.கீழாம்பூர் -VK .புரம் மற்றும் IC பேட்டை -MS யூனிவெர்சிட்டி டெபுடேஷ ன் சென்ற ஊழியர்களின் பயணப்படி வழங்குவது தொடர்பாக அம்பை மற்றும் திருநெல்வேலி ASP களுக்கு தூர அளவுகளை அளந்திட அனுப்பப்பட்டுள்ளது .

2.தச்சநல்லூர் கவுண்டர் பார்ட்டிசிபேஷன் குறித்து LANDLORD க்கு இந்த பணிகளை செய்துதர அறிவுறுத்தப்படும் .கம்ப்யூட்டர் டேபிள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் .

3.சங்கர்நகர் அலுவகத்திற்கு புதிய பிரிண்டர் வழங்கிட ஏற்றுக்கொள்ளப்பட்டுள்து 

4.திருநெல்வேலி தலைமைஅஞ்சலகத்தில் பெண் ஊழியர்களுக்கான கூடுதல் கழிப்பறை கட்டித்தர மண்டல அலுவலகத்திற்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது 

5.VK .புரம் அலுவலக கட்டடத்திற்கு மாற்று இடம் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது 

6.வள்ளியூர் மற்றும் அதன் சுற்றியுள்ள தென்பகுதிகளுக்கு மெயில் வேன் வசதிகள் செய்திட புதிய பரிந்துரையை மேற்கொள்ளப்படும் 

7.கோட்ட அலுவகத்தில் இருந்து இயக்கப்படும் திருநெல்வேலி டிவிசன் வாட்ஸாப் மூலம் ஊழியர்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதை குறித்து விவாதிக்கப்பட்டது .இதுஒன்றும் இலாகா செலவில் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட செல்போன் அல்ல மேலும் இலாகா செலவில் RECHARCE செய்துதருவதும் இல்லை என சுட்டிக்காட்டியபோது SSP அவர்கள் இது வெறும் தகவல்களை பரிமாறிக்கொள்ள மட்டுமே எனவும் ஊழியர்கள் அதில் தங்கள் அலுவலக குறைகளை பதிவிட்டாலும் நிச்சயம் அந்த குறைகளை களைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றும் SSP அவர்கள் தெரிவித்தார்கள் 

8.இட்டமொழி CASHOFFICE திசையன்விளைக்கு மாற்றிட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது 

9.தபால்காரர்களுக்கு வழங்கப்பட்டுவரும் DRESS அலவன்ஸ் குறித்து விவாதிக்கப்பட்டது .பிறகோட்டங்களில் வழங்குவதில் உள்ள முறைகளை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் விண்ணப்பித்த ஊழியர்களுக்கு உரிய பதில் வந்தவுடன் அதை மாநில அளவில் எடுத்து கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது 

10.மதுரை PSD யில் இருந்து தினமும் அதிகஎடைகொண்ட பார்சல்கள் பதிவு தபால்களாக வருவதால் அதை PSD க்கு டெலிவரி செய்வதில் உள்ள சிரமங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது .இதுகுறித்து விரைவில் மாற்று ஏற்பாடுகளை செய்திட  ஏற்றுக்கொள்ள பட்டது .

11.தோழர் லிங்கப்பாண்டி போஸ்ட்மேன் ஏர்வாடி அவர்களின் MACP குறித்தும் தோழர் கந்தசெல்வன் போஸ்ட்மேன் பணகுடி அவர்களின் இடமாறுதல் குறித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டது . .

12.NDC பாளையில் ஊழியர்கள் இருக்கையில் அமர்ந்து பணிசெய்யும் அளவிற்கு இருக்கைகள் மாற்றி தரப்படும் என்றும் திருநெல்வேலி தலைமை HO விற்கு நான்கு மானிடர் வழங்கிட மீண்டும் போஸ்ட்மாஸ்டர் திருநெல்வேலிக்கு சில விளக்கங்கள் கேட்டு கடிதம் அனுப்பப்ட்டுள்ளதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

                                   மாநில சங்கத்திற்கு நன்றி !நன்றி !

பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு புதிதாக வாங்கப்பட்ட 63 KV ஜெனெரேட்டரை பொருத்திட கால தாமதம் ஏற்படுவதை கடந்த 12.08.2021 அன்று மதுரையில் நடைபெற்ற BI-MONTHLY கூட்டத்தில் PMG அவர்களிடம் வலியுறுத்தியதின் விளைவாக நேற்று AE (ELECTRICAL ) குழு பாளை தலைமை அஞ்சலகத்திற்கு வந்து ஆய்வு செய்துவிட்டு இன்னும் 2 வாரத்திற்குள் பணிகளை செய்திட போவதாக தெரிவித்து சென்றுள்ளார்கள் .நமது நெல்லை -NFPE இயக்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த மகத்தான சாதனைகளில் இதும் என்று என பெருமையோடு தெரிவித்து கொள்கிறோம் 

மேலும் தோழர் R .சண்முக சுப்ரமணியன் APS தோழரின் LSG RE-ALLAOTMENT கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலிக்கு மாற்றி தருவதிலும் PMG SR அவர்களை அனுகி கடிதம் கொடுத்ததின் விளைவாக தோழர்  R .சண்முக சுப்ரமணியன் APS அவர்களுக்கு திருநெல்வேலி கோட்டத்திற்கு REALLOTMENT கிடைத்துள்ளது .இந்த இருபிரச்சினைகளை PMG SR அவர்களிடம் எடுத்துச்சென்று தீர்த்துவைத்த நமது மாநில செயலர் சகோதரர் வீரமணி அவர்களுக்கும் தென்மண்டல செயலர் தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -- கோட்ட செயலர் நெல்லை