...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, November 2, 2012

                சிறப்பு  செய்திகள்  -தகவல்  4 TAMIL 


ஐ.நாவில்இலங்கைமனிதஉரிமைநிலவரங்கள் குறித்தவிவாதம்முடிவுற்றது

User Rating: / 0
PoorBest

இரண்டாம் இணைப்பு : ஐ.நாவில் இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து விவாதம் இன்று மாலை நடைபெற்று முடிந்துள்ளது.
முதலாம் இணைப்பு :
யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகளின் பின்னர் ஏனைய உறுப்பு நாடுகளுக்கு முன்னிலையில் இலங்கை குறித்து நேரிடை விவாதம் நடத்தப்படுவது இதுவே முதன் முறை என்பதால் இந்நிகழ்வு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
குறித்த விவாதத்தின் போது இலங்கை மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை மனித உரிமை நிலை மீளாய்வு செய்யப்பட்ட போது போர் உச்சகட்டத்தில் இருந்தது. இதனால் அப்போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், பொதுமக்கள் படுகொலைகள், இது வரை விசாரிக்கப்படாத பல அத்துமீறல்கள் தொடர்பில் இலங்கை அரசு இம்முறை மீளாய்வின் போது பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இன்று மாலை, ஐரோப்பிய நேரம், 14.30 தொடக்கம் 18.00 மணிவரை இலங்கை குறித்து விவாதம் நடைபெறவிருக்கிறது. இதன் போது சுமார் 99 நாடுகள் இலங்கையிடம் தமது சந்தேகங்களை கேள்விகளாக கேட்கவுள்ளன. பின்னர் இந்தியா, ஸ்பெயின் உள்ளிட்ட மூன்று நாடுகள் ஒன்றிணைந்து ஒரு அறிக்கையை தயாரித்து அதை மனித உரிமை ஆணையகத்திடம் ஒப்படைக்கவிருக்கிறது. மனித உரிமை பேரவையின் பொறுமுறைக்கு உட்படுத்தப்படும் பிற உறுப்பு நாடுகளை போன்று இந்த அறிக்கையை இலங்கையும் அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குள் சிக்கும்.

இவற்றை விட இங்கு கவனம் பெறுவது, இலங்கை அரசு, தற்போதைய மனித உரிமை நிலவரங்கள் குறித்து இன்றைய விவாதத்தில் முன்வைக்க போக்கும் கருத்துக்களின் உண்மைத்தன்மையே ஆகும். இவை ஆட்சேபணைக்கு உரியவை எனில் உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்படும். எனவே ஐ.நாவின் அங்கத்துவ நாடுகள், இலங்கையின் சமகால நிலைமை குறித்து ஒரு தெளிவான பார்வையை இன்றைய விவாதத்தின் முடிவில் எடுத்துக்கொள்ள முடியும்.

0 comments:

Post a Comment