...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, July 24, 2013

MINUS

MINUS BALANCE குறித்து பிரட்சினைகள் வந்தால் அதை எதிர்கொள்வது
குறித்து மாநில செயலரின் கருத்துக்கள்

MINUS BALANCE RECOVERY ORDERS AND A DRAFT REPLY TO COUNTER THE CHARGES

அன்புத் தோழர்களே ! வணக்கம் ! நம்முடைய இலாக்காவில்  கணினி மயமாக்கப்படும் போது அவசர கதியாக சேமிப்பு  வங்கிப் பிரிவில் DATA ENTRY செய்ததை  எவரும் மறந்துவிட முடியாது . ஒவ்வொரு தனி நபரின் கணக்குகளும்  மிகச் சரியாக  கணினியில்  மாற்றம் செய்திடவேண்டும் என்பதை மனதில் கொள்ளாமல் , இலாக்காவில் சொன்னார்கள் என்று மேல் அதிகாரிகளும் , மேல் அதிகாரி சொன்னார் என்று கீழ் அதிகாரிகளும் , " வெள்ளைக் காக்கை பறக்கிறது என்றால் .. ஆமாம்.. ஆமாம் நான் கூட பார்த்தேன் .. நாலு காக்கை பறப்பதை "   என்பது போல ,  அதற்கான துறைசார்ந்த அறிவைச் செலுத்தாமல் கீழ் மட்ட ஊழியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி  சேமிப்பு வங்கிக் கணக்குகளை குப்பைக் காடாக்கிய கொடுமை  நம் துறை தவிர வேறு எந்த துறையிலும் நடந்திருக்க சாத்தியக் கூறு இல்லை.  

கடந்த 10 ஆண்டுகளாக இவை சரி செய்யவே முடியவில்லை .  விளைவு , BO,  SO, SO SB , SBCO , ICO(SB), MAIL OVERSEER, IPO, ASP , SPOS.,  என்று  ஆயிரம் CHECKING MECHANISM  இருந்தும் கூட  கோடிக்கணக்கில்  பல அலுவலகங் களில் MULTIPLE FRAUD.   போதாதற்கு CORE BANKING  கூத்துகளில்...................... கணக்குகளின் இருப்புகள் சரி செய்யப்பட வேண்டிய  அவசரம் மீண்டும் ...... பார்த்தால்  மீண்டும் கோடிக் கணக்கில் MINUS BALANCE.................

இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டுமே ... எப்படி செய்வது ?  இருக்கவே இருக்கிறான் ... எதையும் சுமக்கும் பொதிக் கழுதை....   அப்பாவி  அஞ்சலக எழுத்தன்.... பிடித்து மாட்டு ...  பணத்தைக்  கட்டு ...  இல்லையானால்  விதி 16, விதி 14........  பணி ஒய்வு பெறுபவரா ? ........ நிறுத்து  ஓய்வுக் கால பலன்களை ...  "ஐயோ வேண்டாம் .............. ஆளை விட்டுவிடு ..  நான் VR இல் செல்கிறேன்" என்றால் .. அதுவும் கிடையாது ... நீ இங்கேயே  சாக வேண்டும் இல்லையேல்  பணத்தைக் கட்ட வேண்டும் .... இதுதான் இன்றைய  நிர்வாகத்தின்  மோசமான  பார்வை ...

பயந்த ஊழியர்கள்  பலர் ................. எவன்   எவனோ சுருட்டியதற்கு  தங்கள்  உழைப்பில் வந்த பணத்தைக் கட்டினர் ....... ....இதற்கு வழியே இல்லையா ? என்று புலம்பித் தவிப்போர்  பலர் ... "தொழிற்சங்கம்  என்ன செய்கிறது ?" என்று கேள்வி கேட்டு தங்களுக்காக  போராடும் அமைப்பையே  வெறுத்து ஒதுக்கி விரக்தியின் பிடியில்  பலர் ....... 

 "கொட்டுவது  தேளின் குணம் .........  தடுப்பது மனிதனின் குணம்" ....... தேள் ஏன் கொட்டுகிறது  என்று கேட்க முடியுமா ? .........அதிகார அமைப்பு பெரும்பாலும் அப்படித்தான்....... ஒரு சில  நல்லவர்களைத் தவிர ... அவர்களும் கூட அதிகார அமைப்பின் கட்டுக்குள் ... நாங்கள் என்ன செய்வது .. மேலே சொல்லுகிறார்கள்  ...  நாங்கள் செய்து தானே ஆக வேண்டும் ... என்று  தட்டிக் கழிப்பது  கண்கூடு.

இவற்றை எதிர்கொள்ள  சட்டம் இருக்கிறதா ?  நிச்சயம்  இருக்கிறது ... ஆனால் நம்மில் பலருக்கு தெரிவதில்லை ............ தெரிந்து கொள்ள ......... தொழிற்சங்கம்  நடத்தும்  பயிற்சி வகுப்புகளுக்கும்  வருவதில்லை ......முன்னணித் தோழர்கள் கூட  இப்படித்தான் ......... இந்த நிலை தொடர்ந்தால் , எதிர் வரக்கூடிய  தனியார்  மய சூழலில்....... மீண்டும் அடிமை வாழ்வு தான் .......

MINUS BALANCE என்று கூறி  நேரிடையாக  சம்பளப் பிடித்தம் செய்திட முடியாது ...  சட்டப் படி SHOW CAUSE NOTICE வழங்கப் பட வேண்டும் ... இப்படி SHOW CAUSE NOTICE வழங்காமல்  ஊதியத்தில் பிடித்தம் செய்திட உத்திரவிடப் பட்டால்  உடன் உங்கள் கோட்ட/ கிளைச் செயலரை அணுகுங்கள் ... அவர்கள் நிச்சயம்  உங்கள் கோட்ட அதிகாரியிடம்  சட்ட விதிகளை எடுத்துக் காட்டி , இது தவறான அணுகுமுறை  என்பதை நிலை நிறுத்துவார் ... 

SHOW CAUSE NOTICE வழங்கப் பட்டால் , உடன் உங்கள் செயலரை அணுகி அதற்கு உரிய வகையில்  பதில்  தயார் செய்து அனுப்ப  உதவிடக் கோருங்கள் ..... உங்களுக்கு .... உங்கள் மீதான  தவறு சரிவர நிரூபிக்கப்  பட ... அதற்கான ஆவணங்கள் உங்களிடம் காட்டப் பட வேண்டும் ...................  அதன் நகல்கள் உங்களுக்கு வழங்கப் பட வேண்டும் ... MINUS BALANCE க்கு  உரிய  DEPOSITOR இடம் இருந்து  உங்கள் கோட்ட அதிகாரி  உரிய தொகையை வசூல் செய்திட சட்ட ரீதியாக  நடவடிக்கை எடுத்திட வேண்டும் ....................   இவை எதுவும் செய்யாமல்  உங்களிடம்  எந்தத் தொகையும் பிடித்தம் செய்திட  சட்டம்  அவர்களுக்கு எந்த உரிமையும் வழங்கிட வில்லை ....

உங்களின் ....... தொழிற் சங்கத்தின்......  எல்லாவித முயற்சிகளையும் மீறி .......... அடாவடியாக  உங்களின் சம்பளத்தில்  பிடித்தம் செய்திட உத்திரவிடப்பட்டால் நிச்சயம் நீதி மன்றம்  உங்களுக்கு பாது காப்பு வழங்கும் .......... அதற்கு செல்ல உங்களுக்கு  தொழிற் சங்க நிர்வாகிகள்  உதவி செய்வார்கள் ............ அதற்கு  கூட்டாக ............ தனியாக .......கோட்டச்  சங்கம் சேர்த்து ... என்று பலவகையில்  வழக்கு  தொடுத்து  தடையாணை  வாங்கிட .... அந்தந்த  சூழலுக் கேற்ப .......... அந்தந்த CASE க்கு ஏற்ப ....  வழி வகை உள்ளது ... 

மாதிரிக்கு  இரண்டு விதமான CASE களின்.. அந்தந்த சூழலுக்கு ஏற்புடைய     MODEL REPLY    கீழேஅளித்துள்ளோம்  ..............  படித்துப் பார்த்து  உபயோகப் படுத்திக் கொள்ளவும் .......................  உங்கள்  கோட்ட/ கிளைச் செயலரின் உதவியையும்  கேட்டு பெறவும் ........

மேலும்  இது போன்ற ஒரு MINUS BALANCE RECOVERY CASE இல் நீதி மன்றத்தால் தடையாணை பெறப் பட்டதால் , RECOVERY நிறுத்தப் பட்ட  உத்தரவையும் உங்கள் பார்வைக்கு  வைக்கிறோம் .... 

முயன்றால் முடியும் ... தொழிற் சங்க உணர்வு கொள்ளுங்கள் ..... உதவிகளை கேட்டுப் பெறுங்கள்....உங்களுக்கு உதவிடத்தானே  நம் தொழிற் சங்க அமைப்பு?  அன்றில் வேறு எதற்கு ?....   உணர்வு கொள்வோம் .... ஒன்று கூடுவோம் ... உயிரோட்டத்துடன்  தொழிற்சங்கப் பாதையில்  தோழர்களை பயணிக்க செய்வோம் ...

என்றும் உங்களுடன்...
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று .

0 comments:

Post a Comment