லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பேரணி : தில்லி சிவந்தது!
நாடு முழுதுமிருந்து திரண் டிருந்த மக்கள் வெள்ளத்தால் புதுதில்லி சிவந்தது.
சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்திய தொழிற் சங்கங்களும், மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள், வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் சம்மேளனங்கள் விடுத்த அறைகூவலுக்கிணங்க பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும் ஊழியர்களும் தில்லி ராம் லீலா மைதானத்திலிருந்து நாடாளு மன்ற வீதி நோக்கி நடத்திய பிரம்மாண்ட மான பேரணியால் தில்லி சிவந்தது. நாடு முழுதும் இருந்து தொழி லாளர்கள் டிசம்பர் 8இலிருந்தே தில்லியை முற்றுகையிடத் தொடங்கி விட்டனர்.
தில்லி, நாடாளுமன்ற வீதியினருகே அமைந்துள்ள ஜந்தர் மந்தரில் 9ஆம் தேதியிலிருந்தே பல்வேறு சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தர்ணா போராட் டங்கள் நடைபெறத் துவங்கிவிட்டன. வங்கி ஊழியர் சங்கங்கள், கிராமிய வங்கி ஊழியர்கள், அஞ்சல் துறை ஊழியர்கள் ஆகியோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.தமிழகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான தோழர்கள் அஞ்சல் மூன்றின் மாநில செயலர் JR தலைமையில் கலந்து கொண்டனர். கூடுதலாக புதுச்சேரி, ஆங்கிலோ பிரெஞ்சு தொழிலாளர்களும் தங் கள் ஆலை நவீனப்படுத்தப்பட வேண் டும் என்று முழக்கமிட்டார்கள். நாடு முழுதும் பணியாற்றும் மின் துறை ஊழியர்களும் எரிசக்தி உரிமைமனித உரிமை என்பதை வலியுறுத்தி சிறப்பு மாநாடு நடத்தினார் கள்.
0 comments:
Post a Comment