...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, March 4, 2017

                          மத்திய சங்க செயற்குழு 
அன்பார்ந்த தோழர்களே !
                      நமது அஞ்சல் மூன்று மத்திய சங்கத்தின் செயற்குழு கான்பூரில் 08.03.2017 மற்றும் 09.03.2017 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது .அஞ்சல் மூன்றின் இன்றைய முக்கிய பிரச்சினைகளை மாநிலச்சங்கம் சார்பாக முன்வைக்கப்படவுள்ளன .அதிலும் குறிப்பாக இன்றைய முக்கிய பிரச்சினையான கேடெர் சீரமைப்பு குறித்து மாநிலசங்க நிலைப்பாட்டினை மாநில செயலர் அறிவித்துள்ளார் .
LSG பதவிகள் அனைத்தையும் கோட்ட அளவிலான பதவிகள் என மாற்றப்படவேண்டும் .
நியமன விதிகளை தளர்த்தி  LSG ,HSG II பதவிகள் நிரப்பப்படவேண்டும் 
பெஞ்ச் மார்க் நிபந்தனைகளை நிர்பந்திக்கக்கூடா   து    
                                 கேடெர் சீரமைப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல 

முக்கியமாக LSG ,HSG கொடுக்கும்பொழுது Higher Responsiblity இருப்பதை கருத்தில் கொண்டு ஒன்றோ /இரண்டோ ஆண்டு ஊதிய உயர்வுடன் பதவி உயர்வு வழங்கவேண்டும் .பதவி உயர்வு பெறுவோர் கூடுதல் ஊதியம் பெறவும் ஒரு வாய்ப்பு உண்டு .இதன் அடிப்படையால் பார்த்தால் பதவி உயர்வை மறுத்தாலும் MACP பாதிக்கப்படாது               

.காசாளர் பதவி LSG என்றால் அதன் TENURE காலம்  
இரண்டு ஆண்டுகள் என்பதால் இரண்டாண்டுக்கு ஒரு மாறுதலை ஊழியர்கள் சந்திக்க வேண்டியதிருக்கும் 

தரம் உயர்த்தப்பட்டதற்கு மாநிலங்களுக்கு மாநிலம் அளவுகோல் வேறுபடுகிறது 

சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள யூனிட் அலுவலகங்களுக்கு கூடுதலாக LSG பதவிகள் உருவாக்கப்படாவிட்டால் GPO அண்ணாசாலை  பாரின் போஸ்ட் ஊழியர்கள் வெளிக்கோட்டங்களுக்கு செல்லவேண்டிய நிலை உருவாகும் 

2800GP உள்ளவர்கள் LSG என்றும் 4200 வாங்குகிறவர்கள் HSG II என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கும் இடங்களிலே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் (நமக்கு முன்பே இந்த முறை ரயில்வே துறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது ) 
ஆகவே  நடைமுறை சிக்கல்கள் தீரும் வரை /தீர்க்கப்படும் வரை இந்த திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .
 மேலும் MACP III ஊழியர்கள் பதவியுயர்வை மறுப்பதற்கு எவ்வித நிபந்தனை இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் 
  கேடெர் சீரமைப்பு குறித்து வேறேதும் மத்திய சங்கத்திற்கு சங்கத்திற்கு கருத்துக்களை தெரிவிக்க விரும்புவோர் 
jacobraj 2011@gmail .com இல் தெரிவிக்கலாம் .
                                      வாழ்த்துக்கள் 

உறுப்பினர் எண்ணிக்கையில் தமிழகம் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் முதன்மை மாநிலமாக தலை நிமிர்ந்து நிற்பதாகவும் கடந்த உறுப்பினர் சரி பார்ப்பில் 76 சதம்  எட்டியிருக்கும் என்ற  செய்திகள் நமக்கு புது உத்வேகத்தை தருகிறது 
                                             ALL IN UNITY -வெல்லட்டும் 
                          .  தோழமையுடன் SKஜேக்கப் ராஜ்

0 comments:

Post a Comment