...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, April 5, 2018

                                           முக்கிய செய்திகள் 
1.கேடேர் சீரமைப்பு இரண்டாவது பட்டியல் வெளியாகும் வரை தமிழகத்தில் RT -2018 யை நிறுத்திவைக்கவேண்டும் என்ற நமது மாநிலச்சங்க கோரிக்கையை மாநில நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை .பல கோட்டங்களில் RT அறிவிப்புகள் வர தொடங்கிவிட்டன .
2.IPPB செயல்படத்தொடங்கினால் தபால்காரருக்கான வேலைநேரம் என்ன ?பணிகள் என்ன ? என்ற சந்தேகத்தை தோழர் அரிகிருஷ்ணன் தபால் காரர் VK புரம் அவர்கள் கேட்டிருந்தார்கள் .
தபால்காரருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் .அதன் மூலம் அவர்கள் BANKING சர்வீஸ் செய்திடவேண்டும் .இதற்காக மைக்ரோ சிம் அந்த போஸ்ட்மேன் APP உடன் கொடுக்கப்படும் .இரேகை மிசினும் மினி ப்ரின்டரும் இணைந்திருக்கும் .இதற்காக டெலிவரி ஸ்டாப் களுக்கு இன்சென்டிவ் மட்டும் பெயரளவில் வழங்கப்படும் ..
3.GDS கமிட்டிக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் கொடுத்துவிட்டது .கடைசி கட்டமாக அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது .அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு அமுலாக்க உத்தரவு அஞ்சல் வாரியத்தால் வெளியிடப்படும் .
4.திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் அவர்களிடம் நேற்று எழுத்துபூர்வமான வாக்குமூலங்கள் ASP  (PLCSUBDN ) மூலம் பெறப்பட்டுள்ளது .விசாரணை தொடர்கிறது ..............
5.நமது கோட்டத்தில் ஆதார் பதிவிற்கான உபகரணங்கள் அடையாளம்காட்டப்பட்ட 46 அலுவலகங்களுக்கு வந்துவிட்டன .
ஆனால் இந்த சாதனங்களை வைக்க தனி மேஜை இல்லை -பொதுமக்கள் வந்து அமர நாற்காலிகள் இல்லை .ஆகவே அந்தந்த SPM தோழர்கள் தங்கள் அலுவலக நிலை குறித்தும் தேவைப்படும் FURNITURE குறித்தும் கோட்ட அலுவலகத்திற்கு கடிதம் மூலம் தெரிய படுத்துங்கள் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment