...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, September 3, 2018

அன்பார்ந்த தோழர்களே !
                 01.09.2018 அன்று நமது NFPE P 3 மற்றும் P 4 சங்கங்களின் கூட்டு செயற்குழு கூட்டம் பாளையம்கோட்டையில் கோட்ட தலைவர்கள் தோழர்கள் T .அழகுமுத்து -சீனிவாச சொக்கலிங்கம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .கூ ட்டத்தில் 06.09.2018 அன்று நடைபெறவிருக்கும் மாதாந்திர பேட்டியில் நாம் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகளை தோழர்கள் எடுத்துரைத்தனர் .அதன் அடிப்படையில் அஞ்சல் மூன்று 25 பிரச்சினைகளையும் அஞ்சல் நான்கு 10 பிரச்சினைகளையும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன .
                               கூட்டத்தில் எடுக்கப்பட்ட இதர முடிவுகள் 
1.ஜனவரி 6-7 தேதிகளில் கோவையில் நடைபெறும் அஞ்சல்  நான்கின் மாநில மாநாட்டிற்கு நன்கொடைகளை P 3.&P 4 உறுப்பினர்களிடம் சேர்ந்து வசூலிப்பது 
2.அக்டோபர் 20 யில் மறைந்த முன்னாள் மாநிலசெயலர் அண்ணன் பாலு அவர்களின் 3 ம் ஆண்டு நினைவஞ்சலி -மற்றும் நவம்பர் 15 வேலைநிறுத்த சிறப்பு கூட்டம் நடத்துவது 
             உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
                 IPPB புறக்கணிப்பும் -நமது கண்காணிப்பாளர் அவர்களின் அழைப்பும் 
             நமது மத்திய சங்கத்தின் கடைசி நேர அறிவிப்பான IPPB நிகழ்ச்சிகளை புறக்கணிக்க போகிறோம் என்று நமது கோட்ட P.3 மற்றும் P4 வாட்ஸாப்ப் பதிவுகளில் நாம் 31.08.2018 மாலை பதிவிட்டிருந்தோம் ..அதனை கேள்விப்பட்டு 01.09.2018 அன்று நன்பகல் 12 மணியளவில் நமது கண்காணிப்பாளர் அவர்கள் நமது கோட்ட செயலர்களிடம் தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமது கோட்டத்தில் நிலவும் ஊழியர் தரப்பு மற்றும் நிர்வாக தரப்பு உறவுகளை கருத்தில் கொண்டு பங்கேற்கும் ஊழியர்களை அனுமதிக்கவேண்டும் -நீங்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கடைசி நேர வேண்டுகோளினை விடுத்தார்கள் .காரணம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது முதல் மாநிலங்களவை உறுப்பினர்களை அழைத்து வருவதுவரை ஏற்கனவே நமது தோழர்கள் ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை ஏற்று கொண்டதால் அவர்கள் இந்த அழைப்பை விடுத்தார்கள் .ஆகவே விழா புறக்கணிப்பு என்பதனை நாம் மேற்கொண்டு அழுத்தம் கொடுக்காமல் யாரையும் கட்டுப்படுத்தவும் இல்லாமல் கட்டாய படுத்தவும் இல்லாமல் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவெடுக்க அனுமதித்தோம் .
  விழாவில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர் திருமதி .விஜிலா சத்தியானந்த் அவர்கள் GDS கமிட்டிக்கு நாம் கொடுத்த கோரிக்கை மனு அதையொட்டி மாநிலங்களவையில் அவர்கள் பேசிய விவரங்கள் -இன்று வந்திருக்கும் உத்தரவுகள் என மிக விளக்கமான உரையினை தந்து நமது ஊழியர்களின் அன்றைய சந்திப்பை நினைவு கூர்ந்தார்கள் .
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 



0 comments:

Post a Comment