...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 1, 2018

அன்பார்ந்த தோழர்களே !
     இன்று 01.09.2018 மாலை 6 மணிக்கு பாளையில் நடைபெறும்  அஞ்சல் மூன்று &அஞ்சல் நான்கு செயற்குழு கூட்டத்திற்கு தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறோம் .
----------------------------------------------------------------------------------------------------------------------
நமது கண்காணிப்பாளர் அவர்களுடனான மாதாந்திர பேட்டி 06.09.2018 அன்று நடைபெறுகிறது .ஏதேனும் விவாதத்தில் சேர்க்க வேண்டிய விஷயங்கள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் .
---------------------------------------------------------------------------------------------------------------------
நமது மத்திய சங்க இதழ் DAK JAGRITI -ளில் நமது பொதுச்செயலர் தோழர் RN .பராசர்எழுதிய  கட்டுரையில் சில பகுதிகள் ..........
 நாம் ஒரு கடினமான கால கட்டத்தில் பணியாற்றி வருகிறோம் .புதிய தாராளமய கொள்கைகளின் பிடியில் நாம் சிக்கி தவிக்கிறோம் .இதற்கு ஒரு உதாரணம் ஏழாவது சம்பளக்குழு .இதில் தான்முதன்முதலாக பெற்றுவந்த அலவன்சுகளை நாம் இழந்தோம் .தனியார்மயம் என்பது வெளிப்படையாகவே ஊடுருவி இருப்பதை ரயில்வே மற்றும் அரசு அச்சங்களில் பார்த்து வருகிறோம் .நமது துறையிலும் முன்னாள் கேபினெட் செயலர் தலைமையில் அமைந்த TSR கமிட்டி முடிவின் படி அஞ்சல் துறை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது .
1.வங்கி நிறுவனம் 2.இன்சூரன்ஸ் நிறுவனம் 3.லாஜிஸ்டிக் பார்சல் 
4.e- COMMERCE 5. To Manage Govt Service 6.மெயில் டெலிவரி .
 இவைகளில் 5 நிறுவனங்கள் அமைக்கப்பட்டு அதற்கான வாரிய அதிகாரிகள்  நியமிக்கப்பட்டுள்ளனர் .இவைகள் அஞ்சல் துறையில் உள்ள கட்டமைப்புகளை பயன்படுத்திக்கொள்ளும் .
இன்று தொடக்க விழா கானும் IPPB பணிகளை அஞ்சல் ஊழியர்கள்தான் செய்ய போகிறார்கள் .IPPB ஒரு BACK OFFICE ஆக மட்டும் செயல்படும் .அங்கே பொதுமக்கள் நேரடி பணிவர்த்தனை செய்திட முடியாது .அடுத்து பார்சலு க்கென்று தனி இயக்குனரகம் அமைக்கப்பட்டுவிட்டது .அடுத்து PLI /RPLI கான தனி வாரியம் விரைவில் வரவிருக்கிறது .இந்த சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும் .முன்னதாக 2011-2012 காலகட்டத்தில் 9797 அஞ்சலகங்கள் 325 RMS அலுவலகங்களை MNOP என்ற பெயரில் மூடிட அஞ்சல் வாரியம் முனைந்தபோது நாம் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பினால் தடுக்கப்பட்டது .அதே நம்பிக்கையோடு இந்த சவால்களை எதிர்கொள்வோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை  

0 comments:

Post a Comment