...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, September 27, 2012


தோழர். ஜெயக்குமார் தற்கொலைக்கு PTC கொடுமைகளே காரணம் என்பதற்கு PTC, DIRECTOR ன் எழுத்து பூர்வமான கடிதமே ஆதாரம் !

'சிரமதானம்' என்ற பெயரில் , மண் வெட்டுதல், புல் பிடுங்குதல், களை வெட்டுதல் , தோட்ட வேலை செய்யச் சொல்லுதல், கழிப்பறை கழுவச் சொல்லுதல் என்ற கொடுமைகளா ?

இதற்கு மகாத்மா காந்தியடிகளை உதாரணம் காட்டுவதா ?

தானே மனமுவந்து செய்வது மனித நேயமிக்க சேவை !
அடுத்தவரை துன்புறுத்தி செய்யச் சொல்லுதல் மனிதாபிமானமற்ற செயல் அல்லவா ?

அதுவும் மருத்துவ சான்றிதழ் அளித்த பின்னும் விலக்களிக்காமல் அதில் ஏதாவது ஓட்டை இருக்குமா என்று தேடித் பிடித்து மேலும் துன்புறுத்துதல் என்ன குணம் ?

அதற்கு தண்டனையும் வழங்கச் சொல்லுதல் கொடூர எண்ணம் அல்லவா ?

மகாத்மா காந்தியடிகள் கழிப்பறை கழுவியது சரியென்றால் அது எல்லோருக்கும் பொருந்தும் தானே ?

அப்படியானால் குமாரி. நிர்மலாதேவி அவர்கள் தன் கூற்றுக்கு முன்னுதராணமாக தானே முன் நின்று PTC கழிவறைகளை தினம்
கழுவுவாரா ?

அடுத்தவருக்கு உதாரணமாகவும் சேவை மனப்பான்மையை வளர்ப்பதற்கும் இது சிறந்த வழியாக இருக்குமல்லவா ?

அப்படி செய்யாமல் அவர் ' dignity' பார்ப்பரானால் அவரது கூற்றுப் படி அதுவும் தவறுதானே ?

உங்கள் சிந்தனைக்கே விடுகிறோம் !



0 comments:

Post a Comment