...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 29, 2012


INFRINGEMENT OF PERSONAL LIBERTY OF THE POSTAL STAFF

தென் மண்டல இயக்குனர் திரு .V.S. ஜெயசங்கர் அவர்களின் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரான காட்டு தர்பார் உத்திரவு !

ஊழியர்கள் தங்களது EB BILL ஐ அந்தந்த மாதம் அவர்கள் பணி புரியும் அந்தந்த அஞ்சலகங்களில் தான் கட்ட வேண்டும் ! இல்லையென்றால் ' IT WILL BE VIEWED SERIOUSLY' என்றும் அந்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது அதிகார வரம்பை மீறிய உத்திரவு !

இதனை நாம் ஏற்று நடத்திடலாம் ! ஆனால் , நாளை ஒவ்வொரு ஊழியரும் தனது ஊதியத்தில் RELIANCE COMPANY இன் தங்கத்தை அந்தந்த அஞ்சலகத்தில் மாதா மாதம் வாங்க வேண்டும் . இல்லையென்றால் உடன் தண்டனை கொடுக்கப் படும் என்பார் !.

பிரிதொரு நாள் , அஞ்சலகத்தில் எல்லோரும் ' CHOTTU KOOL' கட்டாயம் வாங்க வேண்டும் என்பார் ! இல்லையென்றால் தண்டனை என்பார் !

மற்றொரு நாள் வேறு ஏதேனும் 'டுபாக்கூர் ' பொருளை ஏஜென்சியில் எடுத்து அதனையும் வாங்க வேண்டும் என்பார். இதற்கெல்லாம் உன் சம்பளத்தில் ஏற்கனவே ECS இல் பிடித்தாயிற்று . உனக்கு இந்த மாதம் சம்பளமில்லை என்பார் . இவையெல்லாம் சரியா ?

எதை வாங்க வேண்டும் . எதை வாங்க வேண்டாம் . எங்கு கட்ட வேண்டும் . எங்கு கட்ட வேண்டாம் . என்றெல்லாம் தீர்மானிக்க தனி மனிதனுக்கு முழு உரிமை உள்ளது ! இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தெளிவாகக் கூறுகிறது . அவரவர்களுக்கு உணர்வும் உள்ளது. இலாக்கா மீது பற்றும் உள்ளது. அதை அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள்.

இலாக்கா நடத்தை விதிகளிலோ , இலாக்கா சேவை விதிகளிலோ, பணி நியமன விதிகளிலோ , அடிப்படை விதிகளிலோ இதுவெல்லாம் செய்ய வேண்டும் என்றோ, இல்லை எனில் தண்டனை என்றோ எங்கும் இல்லை.

இந்த விதிகளையெல்லாம் மீறி , தானே புதிதாக விதி வகுக்க இந்த அதிகாரிக்கு அதிகாரம் யார் தந்தது ? அரசாங்கமா ? இலாக்காவா ? அல்ல ! அல்ல !

இவருக்கு முன்னோடியாக அஞ்சல் பயிற்சி மைய இயக்குனர் , மதுரை அவர்கள் , கழிப்பறை கழுவ வில்லை என்றால் தண்டனை கொடுப்பேன் என்று வெட்ட வெளிச்சமாக , பட்டவர்த்தனமாக பல ஊழியருக்கு எழுத்து மூலம் உத்திரவு கொடுத்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ! நாமும் பிரசுரித்துள்ளோம் !

இதன் தாக்கமே இது ! இது சரியா என்று உயர் அதிகாரிக்கு NFPE-FNPO அஞ்சல் மூன்று சங்கங்களின் சார்பாக கூட்டுக் கடிதம் அளித்துள்ளோம் ! சரி செய்யப்படும் என்று எண்ணுகிறோம் ! கடிதத்தின் நகலை கீழே பார்க்க ! அனைத்து ஊழியருக்கும் இதனை தெரிவிக்க !


0 comments:

Post a Comment