கெய்ல் நிறுவனத்திற்கு ஆதரவாக வீரப்ப மொய்லியின் கருத்தால் சர்ச்சை
- SUNDAY, 24 MARCH 2013 18:17
டெல்லியில் பத்திரிகையாளர் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, கெய்ல் நிறுவனத்துக்கு அதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
நிலத்தில் எரிவாயு குழாய் அமைத்து, எரிவாயு கொண்டு வருவதால் விவசாய நிலம் பாதிக்காது. ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக எரிவாயு குழாய் பதித்து இந்தியாவுக்கு எரிவாயு கொண்டுவர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பாறைகளுக்கு இடையே இருக்கும் எரிவாயுவை எடுக்கும்போது நிலத்தடி பாதிப்படைந்து பூகம்பம் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு என்பதை மறுக்க முடியாது என்றாலும், புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, எரிவாயுவை எடுக்கும் முயற்சிகள மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் கெய்ல் நிறுவனத்துக்கு ஆதரவாக பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மத்திய அமைச்சர் கெய்ல் நிறுவனத்துக்கு ஆதரவாக பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கெய்ல் நிறுவனம் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் எரிவாயு குழாய்களை பதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என தமிழக விவசாயிகள் கருதிவருவதால் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருவதுடன் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.
கோவை, தருமபுரி, சேலம் உள்ளிட்ட இந்த 7 மாவட்டங்கள் வழியாக கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு எண்ணெய் எடுத்து செல்லும் குழாய்களே தமிழகத்தில் அமைக்கபட்டு வருகின்றன.
0 comments:
Post a Comment