...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, May 13, 2013

போஸ்டல் வங்கி  திட்டம்  சாத்தியமா ? இதை பாருங்கள்  

அஞ்சல் துறை வங்கி துவங்க நிதி அமைச்சகம் எதிர்ப்பு

புதுடில்லி:இந்திய அஞ்சல் துறை, வங்கித் துறையில் கால் பதிக்க, மத்திய நிதி அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.நாட்டின் அஞ்சல் துறை, அஞ்சலக சேமிப்பு கணக்கு, பொது சேம நல நிதி கணக்கு, வரிச் சலுகை கொண்ட குறித்த கால முதலீட்டு திட்டங்கள் உள்ளிட்டவற்றை கையாண்டு வருகிறது.
பாதிப்பு:இந்நிலையில், தனியார் துறையில், கூரியர், மின்னஞ்சல் என பல தரப்பட்ட தகவல் பரிமாற்ற சேவைகள் வந்து விட்டதால், இந்திய அஞ்சல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அஞ்சலக சேவையில், தனியார் துறையின் போட்டியை சமாளிக்க முடியாத அஞ்சல் துறை, மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட இதர துறைகளுக்கான சேவை கட்டணத்தை வசூலித்துக் கொடுத்து, குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்கிறது.எனினும், அஞ்சல் துறை, தொடர்ந்து இழப்பை கண்டு வருகிறது. கடந்த 2012ம் நிதியாண்டில், இந்திய அஞ்சல் துறை, 6,346 கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளது.இந்நிலையில், தனியார் துறையில், புதிய வங்கி உரிமம் வழங்க உள்ளதாக, மத்திய அரசு அறிவித்தது. 
ரிசர்வ் வங்கி:இதையடுத்து, அஞ்சல் துறையும், வங்கித் துறையில் இறங்க விருப்பம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும், 1.55 லட்சம் அஞ்சல் அலுவலகங்களில், வங்கிக் கிளைகளை துவக்கவும் முடிவு செய்துள்ளது.ரிசர்வ் வங்கியிடம் இருந்து, உரிமம் பெற்ற பின்னர், போஸ்ட் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் வங்கி துவங்க, அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், அஞ்சல் துறையின் இந்த முயற்சிக்கு, மத்திய நிதி அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வங்கித் துறையிலும், கடன்களை கையாளுவதிலும், போதிய அனுபவம் இல்லாத அஞ்சல் துறை, எவ்வாறு திறம்பட வாடிக்கையாளர்களின் வரவு, செலவு கணக்குகளை கையாளும் என்று, நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள நிதிசேவைகள் துறை கேள்வி எழுப்பியுள்ளது.ஒரு சில பொதுத் துறை வங்கிகளும், அஞ்சல் துறை, வங்கிப் பணிகளில் இறங்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடு முழுவதும், அஞ்சலக கிளைகளை கொண்டுள்ள அஞ்சல் துறை, தங்களுக்கு கடும் போட்டியாக உருவெடுக்கும் என, ஒரு சில பொதுத் துறை வங்கிகள் அஞ்சுகின்றன.இந்திய அஞ்சல் துறை, கடந்த 2006ம் ஆண்டு, வங்கித் துறையில் களமிறங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. தற்போது, எர்னஸ்ட் அண்டு யங் நிறுவனத்தை, ஆய்வுக்காக அமர்த்தியுள்ளது.
கிராமப்புறங்கள்:மேலும், ஜெர்மனி, ஜப்பான் நாடுகளை சேர்ந்த அஞ்சல் துறைகள் மேற்கொண்டு வரும் வங்கிச் சேவைகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறது.கடந்த, 2011ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில், 1,39,040 அஞ்சலகங்கள், கிராமப்புறங்களில் உள்ளன. கிராமப்புறங் களில், ஒரு அஞ்சலகத்தை சராசரியாக, 6,000 பேரும், நகரங்களில், 24 ஆயிரம் பேரும் பயன்படுத்துகின்றனர்.
இதனால், அஞ்சல் துறையின், வங்கிச் சேவையால் கிராமப்புற மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "அஞ்சல் துறை, வங்கிப் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்வதில் இடர்பாடு எதுவும் இல்லை' என, எர்னஸ்ட் அண்டு யங் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அஞ்சலக @சமிப்பு:சென்ற 2012-13ம் நிதியாண்டு நிலவரப்படி, இந்திய அஞ்சலக சேமிப்பு கணக்கில், 6 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் உள்ளது. இது, பொதுத் துறையை சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம் உள்ள டெபாசிட்டில், 50 சதவீதம் என்ற அளவிலும், தனியார் துறையை சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்கிடம் உள்ள டெபாசிட்டை விட, இரு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி, கடந்த, 9 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வரும் ஜூலை 1ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். குறைந்தபட்சம், 500 கோடி ரூபாய் மூலதனம் கொண்ட நிறுவனங்கள், வங்கி துவங்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.இதன்படி, மகிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா, எல் அண்டு டி, உள்ளிட்ட பல நிறுவனங்கள் வங்கித் துறையில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளன.

0 comments:

Post a Comment