48 HOURS STRIKE ALMOST TOTAL IN TAMILNADU ! RED SALUTE TO ALL OUR COMRADES !!
தமிழகத்தில் அஞ்சல் மற்றும் RMS பகுதிகளில்
48 மணி நேர வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி
வேலை நிறுத்தத்திற்கு இரவு பகல் பாராது , கண் துஞ்சாது பாடுபட்ட அனைத்து மாநிலச் சங்கங்களின் அனைத்து மாநில மட்ட, கோட்ட மட்ட/ கிளை மட்ட நிர்வாகிகளுக்கும் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின், அஞ்சல் RMS இணைப்புக் குழுவின் , மாநில JCA வின் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழ் மாநில அமைப்பின் நெஞ்சார்ந்த நன்றி !
நமக்குக் கிடைத்த செய்திகளின் படியும் , பத்திரிகை, தொலைகாட்சி செய்திகளின் படியும் இதுவரை நடைபெற்ற அனைத்து வேலை நிறுத்தங்களையும் விட இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிக்கும் நூற்றுக்கு நூறு விழுக்காடு என , எந்தவித பேதமும் இல்லாமல் அனைத்து பகுதி ஊழியர்களும் கலந்துகொண்டது உண்மையிலேயே நம் தமிழ் மாநில சங்கங்களுக்கு பெருமை ! இது மட்டற்ற மகிழ்வை ஏற்படுத்துகிறது ! .
இது நமது ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி ! நிச்சயம் நம் ஒன்றுபட்ட குரலுக்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் ! கோரிக்கைகளில் நாம் நிச்சயம் வென்றே தீருவோம் !
மீண்டும் அனைத்து பகுதி தோழர்களுக்கும் , தோழியர்களுக்கும் எங்கள் நெஞ்சு நிறைந்த நன்றியை காணிக்கை ஆக்குகிறோம் !
நம்முடைய மாபொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் அவர்களிடம் தொலைபேசியில் பேசும் போது " TAMILNADU STANDS FIRST ! I REALLY APPRECIATE THE WORK ! PLEASE CONVEY MY CONGRATS TO ALL OUR COMRADES " என்று மனம் திறந்த பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். அவருக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் !
================================================
0 comments:
Post a Comment