...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... ........ நெல்லையில் 25.09.2018 அன்று GDS கோரிக்கைகளுக்காக நடைபெறும் உண்ணாவிரதத்தில் அனைவரும் பங்கேற்போம் ....... .......

Thursday, February 8, 2018

அஞ்சல் நான்கின் முன்னாள் மாநில செயலர் தலைவர் AG .பசுபதி அவர்கள் மறைவு 

பசுபதி எனும் பாசத்தலைவனும் 
போய்விட்டான் -
திராவிட இயக்கத்தின் அணையா 
தீபமும் அணைந்துவிட்டது 

காக்கி சட்டைக்கு -தனி 
கவுரவம் பெற்று தந்த 
கறுப்பு சட்டை காரனே !
கொள்கை சிறகுகளல்ல என மேடைதோறும் 
கொட்டி முழங்கியவனே !

தபால் காரனுக்கு புது 
முகவரி எழுதியவனே !
தமிழக தொழிற்சங்கத்திற்கு -ஒரு 
எழுச்சியை கொடுத்தவனே !

நீ -அறிமுகப்படுத்திய 
அரை நிர்வாண போராட்டம் -தமிழக 
அஞ்சல் அதிகாரிகளை 
வெட்கப்படவைத்தது -
அப்பாவி ஊழியர்களின் நெஞ்சங்களில் 
விடுதலை வேட்கையை 
வெளிக்கொண்டு வந்தது 

கிழட்டு சிங்கமே ! உன்னிடம் தான் 
கர்ஜனையை கடைசிவரை 
கேட்க முடிந்தது -
உடல் சோர்வினும் -உறுதி குறையா 
உள்ளத்தினை பார்க்க முடிந்தது 

பெரியாரின் பிடிவாதமும் 
உனக்கு உண்டு 
பேரறிஞரின் நினைவாற்றலும் 
நிரம்ப உண்டு 
திராவிடத்தின் மீது 
தீரா காதல் உண்டு -இறுதிவரை 
தோழர்களின் தோழமையில் 
பிடிப்பும் உண்டு 

நிகழ்ச்சிகளுக்கு வந்து சென்றபின் 
நினைவுகளை பகிர்ந்து 
நீ எழுதும் கடிதம் -அதுதான் 
தொண்டனுக்கு நீ அனுப்பும் 
பாராட்டு பத்திரம் 

பதில் கடிதம் எழுதாமல் 
இருந்ததில்லை -
பார்க்கும் பொழுதெல்லாம் பழைய 
நினைவுகளை பரிமாறாமல் 
விட்டதில்லை 

தமிழக தொழிற்சங்கத்தில் மீண்டும் 
ஒரு வெற்றிடம் -நிரந்தமாகிறது 
நிரம்ப பேர் இருந்தாலும் 
நிரப்பப்போவது யார் ?
உன்னைப்போல் கொள்கை காற்றை 
ஊழியர்கள் நெஞ்சங்களில் 
பரப்ப போவது யார் ?பாதுகாப்பது யார் ?

     தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 






0 comments:

Post a Comment