...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, February 2, 2018

                                            முக்கிய செய்திகள் 
நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லாதது அரசு ஊழியர்களிடையே பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது .இருந்தாலும் மாத சம்பளதாரர்கள் நிலையான கழிவு ரூபாய் 40000 வரை ஆவணங்கள் ஏதும் தாக்கல் செய்யாமல் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
--------------------------------------------------------------------------------------------------------------------------                                                      நெல்லை செய்திகள் 
1.நமது நெல்லை கோட்டம் CSI க்கு 27.03.2018 அன்று மாறுகிறது .
                                        உளமார பாராட்டுகிறோம் 
மறைந்த GDS நெல்லை கோட்ட செயலர் திரு காலப்பெருமாள் அவர்களின் குடும்பத்திற்கு உதவி தாருங்கள் என கேட்ட மாத்திரத்திலே தோழர் /தோழியர்களின் பங்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது .
பெயர் வெளியிட விரும்பாத நமது தோழியர் ஒருவர் காலப்பெருமாள் அவர்களின் மகள் உயர் கல்வி வரை வருடாவருடம் தான் உதவுவதாக தெரிவித்துள்ளார்கள் .தோழர் பாட்சா மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து ரூபாய் 15000 கொடுக்க உறுதியளித்துள்ளார்கள் .நமது முன்னாள் கோட்ட தலைவர் திரு சௌந்தரபாண்டியன் (Accounts officer ஓய்வு ) அவர்கள் ரூபாய் 1000 திருமதி ஹேனா ரூபாய் 1000 திரு சங்கரலிங்கம் மதுரை ஓய்வு ரூபாய் 1000 தருவதாக தெரிவித்தார்கள் .அனைவருக்கும் நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .நிதிஉதவி செய்வோர் திரு .A.நம்பி GDSBPM VMCHATRAM அவர்களது POSB கணக்கு எண் 0663885912 (மஹாராஜநகர் ) கணக்கில் வரவு வைத்துவிட்டு தகவல்களை திரு .ஜேக்கப் ராஜ் அவர்களுக்கு (9442123416) தெரிவிக்கவும் .வருகிற 12.02.2018 குள் கிடைக்கும் படி செய்தால் நல்லது .13.02.2018 அன்று நடைபெறும் அஞ்சலி கூட்டத்தில் உதவி தொகையை வழங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம் .நன்றி .
                                                தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் P3
SK .பாட்சா கோட்ட செயலர் P4
S.காளிமுத்து @ ஐயப்பன் கோட்ட செயலர் GDS (பொறுப்பு )

0 comments:

Post a Comment