...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, July 19, 2018

                                                      கோளாறு எங்கே ? 
நேற்றைய செய்தித்தாள்களிலும் / தொலைக்காட்சியிலும் அதிகமாக பகிரப்பட்ட செய்திகளில் ஒன்று .ஸ்ரீபுரம் (திருநெல்வேலி )போஸ்ட்மாஸ்டர் உள்ளிட்ட மூன்று பேருக்கு நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது 
               சேவைக்குறைபாடு காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு வழங்கப்பட்ட நஷ்டஈடு என நீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்துள்ளது .
இது முதல் முறையல்ல .சமீபகாலமாக நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் நமது துறைக்கு எதிராக வழங்கப்படும் தீர்ப்பு என்பது தொடர்கதை ஆகிவிட்டது .
போஸ்டல் ஆர்டரில் கமிஷன் மாற்றி அச்சடிக்க படவில்லை என்ற வழக்கிலும் அபராதம் 11000 விதிக்கப்பட்டது .பாளையம்கோட்டையில் மின்சாரம் தடைபட்ட நேரத்தில் ஜெனெரேட்டர் இயக்க காலதாமதமானதால் MPCM கவுண்டரில் அதிகநேரம்? காத்திருந்ததால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூபாய் 8000 கடைசியாக இந்தவழக்கு பதிவு செய்யப்பட்ட தபால் செலவு போக மீதி தொகைக்கு கங்கா நீர் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கவுன்டர் PA சொன்னதாக (அன்றைய நாட்களில் கங்கா ஜெல் விற்பனைக்கு இல்லை என்பது வேறு விஷயம் ) ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூபாய் 6000  இன்னும் மஹாராஜநகர் மற்றும் வண்ணாரப்பேட்டை அலுவலகத்தின் மீதும் வழக்குகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன .ஏன் தொடர்ந்து நம் வழக்குகள் தோல்வியடைகிறது என பார்த்தால் ஒரு வழக்கில் நமது துறை சார்பாக ஒழுங்காக ஆஜராகாமல் EX PARTY தீர்ப்பினால் அபராதம் .
ஒரு வழக்கில் சரியான வாதத்தை நமது  அரசு தரப்பில் எடுத்துரைக்கவில்லை என்பதால் அபராதம் -அப்படியென்றால் STANDING கமிட்டி உறுப்பினர்களுக்கு நமது தரப்பில் இருந்து முழுமையான தகவல்களை கொடுக்க வில்லை என்றால் யார் இதற்கு பொறுப்பு? -வழக்குகளில் தோற்றவுடன் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் சத்தமில்லாமல் ரெகவரி பண்ண நோட்டீஸ் அனுப்பப்படுகிறது .ஒரு தோழியருக்கு பணிஓய்வுக்கு ஒருவாரத்திற்கு முன்பாக 4000 கட்ட சொல்லிவந்தது .பணிஒய்வை கருத்தில் கொண்டு அவர்களும் பணம் கட்டிவிட்டார்கள் .மற்றவர்கள் நிர்வாக முடிவை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறார்கள் .ஒவ்வொரு வழக்கிலும் எத்தனை வாய்தா நடந்தது .அதில் எத்தனை வாய்தாவிற்கு நமது தரப்பில் பங்கேற்றோம் அப்படி பங்கேற்கும் போது எந்த கேடரில் ஊழியர் பங்கேற்றார் -IP சென்றாரா ? ASP ரேங்க் இல் உள்ளவர்கள் சென்றார்களா ? தீர்ப்பின் நகல் எங்கே ? தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையிடு முறையாக குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யப்பட்டதா என்ற தகவல்களை நாம் பெற்றுக்கொண்டு பதிலளிக்க வேண்டும் .நிர்வாக தாமதத்திற்கும்  மெத்தனத்திற்கும் தொடர்ந்து அப்பாவி ஊழியர்களை பலியாக்குவதை தடுத்து பாதுகாப்போம் .இனி வரும் நாட்களிலாவது இதுபோன்ற கோர்ட் விவகாரங்களில் நிர்வாகம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
                                             

0 comments:

Post a Comment