...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, August 14, 2018

                          இந்தியா போஸ்ட் பேமைண்ட் பேங்க்  IPPB 
                             போஸ்டல் வங்கி  அஞ்சலக சேமிப்புக்கு 
                              நிகரானதா ? எதிரானதா ?
வருகிற 21.08.2018 முதல் நாடுமுழுவதிலும் IPPB என்ற வங்கி சேவை தொடங்கப்படவிருக்கிறது .பிரதம அமைச்சர் தொடங்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாநில முதமைச்சர் முதல் மக்கள் பிரதிநிதிகள் வரை பங்கேற்க அழைப்புக்கள் விடப்பட்டுள்ளது .விழா மற்றும் விருந்து செலவுகளுக்கு தொகைகள் நிர்ணயிக்க பட்டு திருமண மண்டபங்கள் மற்றும் கலையரங்குகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படவிருக்கின்றன .வழக்கம்போலவே இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு தமிழகத்திற்கு 1 லட்சம் கணக்குகள் ஒவ்வொரு கிளைக்கும் 3500 கணக்குகள் தொடங்க படவிருக்கிறன்றன .அதற்காக வருகிற 17.08.2018 20.05.2018  வரைக்கும்  புதிய கணக்குகளை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது .ஏற்கனவே சம்பள கணக்குகளை IPPB யில் தொடங்க அறிவிப்புகள் வந்துள்ளன .
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு நிகராக அனைத்து சேவைகளையும் இங்கு வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் நமக்கு ஆனந்தத்தையும் வங்கிகளுக்கு அதிர்ச்சியையும் ஒருவேளை தந்திருக்கலாம் .ஏற்கனவே பரந்து விரிந்துள்ள அஞ்சலக சேமிப்புகளிலே இந்த வசதிகளை செய்திருக்கலாம் என்ற நமது ஆதங்கங்கள் குறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை .நமது கோட்டத்தில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் களக்காடு துணை அஞ்சலகம் மற்றும் அதன்கீழுள்ள மூன்று கிளை அஞ்சலங்களிலில் வங்கிசேவை தொடங்கப்படவுள்ளன .
                       
                             மேளாவுக்கும் -விழாவுக்கும் 
                             வித்தியாசம் கொஞ்சம் தான் 
                             பிரபலங்கள் வந்தால் விழா 
                             நீயும் நானும் என்றால் மேளா! 
                   

                            விழாவிற்கு அன்போடு அழைக்கிறார்கள் 
                            மேளாவிற்கு எச்சரிக்கையோடு அழைப்பார்கள் 
                            பளபளக்கும் தளங்களில் விழா நடக்கும் 
                            பெஞ்சிக்கும் நாற்காலிக்கும் -மேளாவில் 
                            பஞ்சம் இருக்கும் .

                            பலமுறை -இந்த துறையால் 
                            நாங்கள் ஏமாற்றப்பட்டிருப்போம் 
                           பழசையெல்லாம் மறந்தபடி 
                            பச்சை கொடி காட்டி மகிழ்கிறோம் 

                            எங்களோடே நாங்கள் 
                           போட்டிக்கு போகிறோம் 
                           என்பதை கூட புரியாமல் 

                           வங்கிகளோடு போட்டிக்கு போகிறோம் என்று 
                            வரிந்து கட்டி கொண்டு போகிறோம் 
                           பட்டி தொட்டியெ ல்லாம்  -எங்கள் 
                          முத்திரையை பதிக்க போகிறோம் -என்று 
                          முழக்கங்களை முன் வைக்கிறோம் .

                          அஞ்சல் துறையே ! உன் 
                          அஸ்திவாரத்தை 
                         அழகுபடுத்தாவிட்டாலும் பரவாயில்லை 
                          அங்கீகரிக்க மறந்துவிடாதே !
                          வீடுதோறும் அஞ்சல் அட்டையை அனுப்பி 
                          விளம்பரம் படுத்து !
                           வீடு தேடி மணிஆடர் போகும் என்று 
                           பெருமை படுத்து ! 
                          அரசாங்க தஸ்தாவேஜுகளுக்கு -இங்கு 
                          உத்தரவாதம் உண்டு என்று 
                         ஊரெல்லாம் தண்டோரா சாற்று 
                         எத்தனை நூற்றாண்டு என்றாலும் 
                         நிலைத்து நிற்கும் என்று 
                         சத்தியம் பேசு 
                           இங்கு மட்டும் தான் 
                          ஒரே குடையில் 
                           அனைத்து சேவைகளும் உண்டென்று 
                            உரக்க சொல்லு -ஆம் 
                             பெருமை கொள்வோம் 
                            அஞ்சல் ஊழியர் என்பதில்
                             பெருமை கொள்வோம் 
                           அப்பழுக்கற்ற சேவை என்பதில் 
                           ஆனந்தம் கொள்வோம் 
                                                                        -----------------    ஜேக்கப் ராஜ் -------------
                           




                       

                         
                         

0 comments:

Post a Comment