...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, December 31, 2018

                     கரிசல் குயில் கிருஷ்ணசாமி SPM மேலச்செவல் அவர்களின் பணி ஓய்வு விழா --31.12.2018  

குயிலே --இனிதான் -உன் 
குரல் இன்னும் வலிமையாக ஒலிக்கப்போகிறது -ஆம் 
உன் அழைப்பிதழில் அச்சிட்ட மாதிரி 
விட்டு விடுதலை ஆகி நிற்பாய் --இந்த 
சிட்டு குருவியை போல --

ஆரம்ப நாட்களில் -அஞ்சல் அரங்கில் 
இரண்டு குயில்கள் -
ஒன்று சந்திரசேகர் எனும் இசைக்குயில்
 சங்கரன்கோயிலோடு  நிறுத்திக்கொண்டது 
கரிசல் குயில் மட்டும் தான் 
எல்லையைத்தாண்டி பறக்க தொடங்கியது 
பட்டி தொட்டியெல்லாம் அதன் புகழ் 
சிறக்க தொடங்கியது 


அஞ்சல் துறைக்கு கிடைத்திட்ட 
அரிய கலை பொக்கிஷங்களில் நீயும் ஒருவன் 
அழியா புகழ் கொண்ட கலைஞர்களின் 
அணிவகுப்பினில் நீ தான் முதல்வன் 

நரிகுளம் எனும் நந்தவனம் 
தந்திட்ட நாடறிந்த குயிலே !
எட்டுத்திக்கும் உன் குரல் ஒலித்து கொண்டிருந்தாலும் 
ஏதுமறியா சராசரி ஊழியனைப் போலல்லவா 
அஞ்சலக பணிகளில் தொடர்ந்தாய் ! 

கலை இலக்கிய இரவுகளில் --விடியவிடிய 
சாமான்யர்களும்  விழித்திருந்த து -இடையிடையே 
உன் காந்த குரலை  கேட்பதற்கு தான் 
அரசுத்துறை எனும் இரும்பு வளையத்தை தாண்டி 
அரசியல் அரங்கிலும் உன் தடம் பதிந்தது 
ஆச்சர்யம் தான் -அதிசயம் தான் 

கோவில்பட்டி எனும் கொள்கை பட்டறையில் 
செதுக்கப்பட்ட சிற்பங்களில் நீயும் ஒருவன் 
கொண்ட கொள்கைகளில் நமக்குள் சில 
வேறுபாடுகள் என்றிருந்தாலும் 
விமர்சனங்கள் என்ற பெயரில் ஒருபோதும்  நீ 
காயப்படுத்திடவில்லை -

அஞ்சல் பொருள் கிடங்கிற்கு நீ 
அடியெடுத்து வைத்தபிறகுதான் நமக்குள் 
அறிமுகம் ஏற்பட்டது -
அப்பொழுது 1992 சாதி பிரச்சினையில் 
நெல்லை பற்றி எரிந்த நேரம் 
நான் எழுதி கொடுத்து -
நீங்கள் மெட்டுப்போட்டு ஒரு மேடையில் 
பாடிய வரிகள் எனக்கு நினைவுக்கு வருகிறது 

திருநெல்வேலி அல்வா கூட -இப்ப 
ரொம்ப கசக்குது --அதை 
பொதிந்து தந்த காகிதத்தில் 
ரத்த வாடை எடுக்குது 
பள்ளிக்கூட சண்டைகூட 
படு கொலையில் முடியுது 
அங்கே ஒன்னு இங்கே ஒன்னு என 
விக்கெட்டு போல வீழுது 
பழைய நிலைமை திரும்பணும் -முதலில் 
பஸ்சு ஒழுங்கா ஓடணும் 

உங்களிடம் 
கொள்கையின் பிடிப்பை கற்று கொண்டோம் 
போராட்ட பிடிப்பினை கற்று கொண்டோம் 
அணி மாட்சியங்களை கடந்து 
ஆரோக்கிய நட்பை கற்று கொண்டோம் 

அஞ்சல் துறையில் பணியாற்றி -இன்று 
அரசியல் மற்றும் சினிமாக்களில் மின்னும் 
தமிழ்செல்வனாய் --வேலு ராமமூர்த்தியாய் 
கிருஷ்ணசாமி எனும் இந்த கரிசல் குயிலும் 
புகழ் வானில் சிறகடிக்க வாழ்த்துகிறோம் 
               தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
















0 comments:

Post a Comment