...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Sunday, October 18, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே!

                  அஞ்சல் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிட வேண்டி ஆர்ப்பாட்டம் 

நாள் --20.10.2020 செவ்வாய்   நேரம் மாலை 6.மணி 

இடம் -பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் (PSD வாயில் )

அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு மற்றும் GDS ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து நடத்தும் ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் தவறாது கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம் .ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு நாம் ஏற்கனேவே அறிவித்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் .

இதுபோன்ற ஊழியர்களை நேரிடையாக பாதிக்கின்ற விசயங்களில் நம்மை தவிர வேறு எவரும்  போராட்டத்தை முன்னெடுக்கப்போவதில்லை.நாம் போராடுவது நமக்கு மட்டுமல்ல நம்மை  சுற்றியுள்ள அனைவருக்கும் சேர்த்துதான் என்பதும் மறுக்கமுடியாத உண்மை .அதே போல் போனஸ் குறித்தும் ஒரு நீண்ட நெடிய வீரம் செறிந்த வரலாறு நமக்கு உண்டு .நமது மகா சம்மேளனமும் போனஸ் குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அரசு தனது முடிவை அறிவிக்காவிட்டால் ஒரு வேலைநிறுத்தத்திற்கு செல்ல நாம் தயாராக இருக்கவேண்டும் என்றும் ரயில்வே தொழிற்சங்கங்களும் போனஸ் அறிவிக்காவிட்டால் நேரடி தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்குவதாக அறிவித்துள்ளது .

---------------------------------------------------------------------------------------------------------------------

பஞ்சப்படி உயருமா ? கிடைக்குமா ?என கடந்த இருதினங்களாக பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன .அதாவது பஞ்சப்படி கணக்கீடு என்பதன் அடிப்படை வருடம் 2016 என மாற்றப்பட்டு அன்று 100 புள்ளி இருந்ததாக கருதப்பட்டு உயர்வு ஏற்படும் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தப்படும் என அதற்கான கமிட்டி தனது முடிவை அறிவிக்கவுள்ளது  .தற்சமயம் நமக்கு 2001 ஆண்டு அடிப்படை வருடத்தை  கணக்கிட்டு பஞ்சப்படி வழங்கப்பட்டு வருகிறது .மேலோட்டமாக பார்த்தால் பஞ்சப்படி உயர்வு 2016 ஆண்டின் அடிப்படையில் இருந்தால் உயரத்தான் செய்யும் ஆனால் ஏற்கனவே உள்ள நுகர்பொருளில் சிலவற்றை நீக்க மத்தியஅரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது .அதில் தான் நமக்கு அச்சமும் ஆபத்தும் தெரிகிறது .பழைய அடிப்படையில் நுகர்வோர் குறீயீட்டை  நிர்ணயிக்க லக்னோ மற்றும் கொல்கத்தாவில்  செயல்பட்டுவரும் ஆய்வு மையங்கள் அந்த கணக்கெடுப்பை செய்துவருகிறது .தற்சமயம் INDUSTRIYAL மற்றும் அரசு ஊழியர்க்ளுக்கு முறையே 3 மற்றும் 6 மாதங்களுக்கு ஒருமுறை நுகர்வோர் விலை குறீயீட்டின் அடிப்படையில் பஞ்சப்படி வழங்கப்பட்டுவருகிறது .அதில் நுகர் பொருளாக இருக்கும் சில பொருள்களில் மாற்றம் செய்துவிட அரசு முனைந்திருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன .ஆகவே பஞ்சப்படி தொடர்ந்து நமக்கு கூடுதலாக கிடைக்குமா என்ற சந்தேகத்தை ஊழியர்களுக்கு  போக்கவேண்டும் .ஆக நேற்றைய பத்திரிக்கை செய்திகள் ஏதோ முடக்கப்பட்ட பஞ்சபடியை அரசு முன் வந்து தருவதாக தவறுதலாக நினைத்துக்கொள்ளவேண்டாம் .சீர்திருத்தம் என்றாலே சீரழிவு என்று மற்றொரு பொருள் அதற்கு உண்டு என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது .

தோழமை வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


2 comments:

  1. சீர்திருத்தம் என்றாலே சீரழிவு என்று மற்றொரு பொருள் :- SUPER

    ReplyDelete