...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, March 5, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

நேற்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் கீழ்கண்ட பிரச்சினைகளில் நல்லதொரு தீர்வு எட்டப்பட்டுள்ளது 

1.தோழியர் A .அன்புச்செல்வி தபால்காரர் வண்ணார்பேட்டை அவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை மத்திய கோட்டத்தில் CONFORMATION உத்தரவு பிறப்பிக்கப்படாமல் இருந்தது .இந்த சூழ்நிலையில் தோழியர் நடந்துமுடிந்த எழுத்தர் தேர்விலும் தேர்ச்சிபெற்றுள்ளார்கள் .அவர்களுக்கு கடந்த 17.02.2021 அன்று நாம் கொடுத்த கடிதத்தை தொடர்ந்து நேற்று CONFORMATION உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .

2.நடந்துமுடிந்த எழுத்தர் தேர்வில் தோழியர் M.சுந்தரி தபால்காரர் அம்பாசமுத்திரம் அவர்களுக்கு விடுபட்ட /தவறுதலாக எடுத்துக்கொள்ளப்பட்ட விடைக்கு சரியான மதிப்பெண்களை வழங்கவேண்டி தோழியர் கொடுத்த விண்ணப்பமனுவினை  .இன்று மதுரையில் நடைபெறும் DPC யில் கமிட்டியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது 

3.தோழியர் S.பார்வதி PA பாளையம்கோட்டை அவர்களுக்கு (முன்னாள் பாண்டிச்சேரி கோட்டம் ) மறுக்கப்பட்ட MACP கிடைப்பதற்கு வசதியாக APAR கிரேடிங் நகல் வழங்கப்படவேண்டும் என்ற தோழியரின் 11.02.2021 தேதியிட்ட கடிதத்திற்கு APAR நகல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது 

4.மருத்துவ விடுப்பு விண்ணப்பித்த தோழியர் E.சுபா SPM ராஜவல்லிபுரம் அவர்களுக்கு தேவையில்லாமல் இரண்டாவது மருத்துவ ஒப்பீனியன் அனுப்ப கொடுத்த கடிதம் குறித்து கோட்ட சங்கம் சார்பாக நேற்று தனி கடிதம் கொடுத்து விவாதிக்கப்பட்டு மறு ஆய்வுக்கு செல்வது குறித்து மறுபரீசீலினை செய்ய ஏற்றுக்கொள்ளப்பட்டது .இதே போல் தோழியர் முத்துலட்சமி LRPA அம்பாசமுத்திரம் அவர்களின் பிரச்சினையும் பேசப்பட்டது .மேலும் மருத்துவ விடுப்பு கேட்கும் ஊழியர்களுக்கு பழைய நடைமுறையை பின்பற்றி விடுப்பு வழங்கிட வலியுறுத்தப்பட்டுள்ளது 

5.MACP பதவி உயர்வு மறுக்கப்பட்ட தோழர் லிங்கப்பாண்டி அவர்களுக்கு அடுத்துவரும் DPC யில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு பழைய தேதியில் இருந்து அவருக்கு MACP வழங்கப்படும் என தெரிவிக்க பட்டது 

6.தோழர் M.ஆசைத்தம்பி அவர்களின் TRANSFER TA  குறித்து மீண்டும் விவாதித்து TA பில் சமர்ப்பிக்க ஏற்பட்ட இரண்டு நாள் காலதாமதத்தை சரி செய்து  TA பில் வழங்கிட  வலியுறுத்தப்பட்டுள்ளது 

7.பாளையம்கோட்டை BPC பிரிவில் நிறுத்திவைக்கப்பட்ட ரூபாய் 2400 க்கான அச்சக செலவு வழங்கிட ஏற்றுக்கொள்ளப்பட்டது 

8.முனைஞ்சிப்பட்டி SO வில் நிலவும் நெட்ஒர்க் பிரச்சினை குறித்து ஏற்கனவே மேல் மட்ட அளவில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது 

9..நமது கோரிக்கையை ஏற்று அனைத்து துணை /தலைமை அலுவலகங்களுக்கும்திருத்தப்பட்ட  CBS SB MANUVAL வழங்கிட ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்காக 100 புத்தகங்கள் வாங்கிட ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது 

10.MMS ஊழியர்களின் பிரச்சினைகள் மீண்டும் எடுக்கப்பட்டு ஓட்டுனர்களின் நலன் கருதி காலை மற்றும் இரவு டிபன்க்கான நேரமும் --மிகுதிநேர படி வழங்குவது குறித்தும் விரைந்து முடிவெடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது 

11.பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு புதிதாக மூன்று கணினிகள் வழங்கிட ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டது .

12.பணகுடி மற்றும் முனைஞ்சிப்பட்டி அலுவலகங்களுக்கு RULE 38 யினல்  வரவேண்டிய ஊழியர்கள் வராததால் டெபுடேஷன் அடிப்படையில் ஊழியர்களை அனுப்பிட வலியுறுத்தப்பட்டுள்ளது .

13.CASH COUNTING மெஷின் தேவையான அலுவலகங்களுக்கு தரமான மெஷின் வாங்கிட ஒப்புக்கொள்ளப்பட்டது .சம்பந்தப்பட்ட SPM தோழர்கள் இதுகுறித்து கடிதங்களோ /மெயில் அனுப்பியிருந்தால் கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .

14.பணகுடி அஞ்சலகத்திற்கு கூடுதல் ஒரு டெலிவரி ஊழியர் மற்றும்  வள்ளியூர் அலுவலகத்திற்கு ஒரு CASHOVESEER  இவைகளுக்கான பணிகள் நடைபெற்றுவருவதாகவும் வாய்ப்புள்ள ஊர்களில் BANK DRAWINGS  செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது 

15.இறுதியாக நமது மகிளா கமிட்டி சார்பாக கலந்துகொண்ட தோழியர் விஜயலட்சுமி அவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக சேவைமுடித்த ஊழியர்களை டெபுடேஷன் அனுப்புவதை கூடுமானவரை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் டெபுடேஷன் DIRECTION கொடுக்கும் பொழுதே கோட்ட நிர்வாகம் இதை கருத்தில்கொண்டு DIRECTION பிறப்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் .

-------------------------------------------------------------------------------------------------------------------

                                         இதர செய்திகள் --மகளிர் தினம் 

வருகிற 08.03.2021 அன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வழக்கம் போல் நமது கோட்ட சங்கம் சார்பாக பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் மாலை 05.30 மணியளவில் ஒரு சிறப்பு மகளிர்  கூட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது .நமது கோட்ட மகிளா கமிட்டி நிர்வாகிகள் (P3-P 4-GDS ) விரைந்து செயல்பட கேட்டுக்கொள்ள படுகிறார்கள் 

                                                        வரவேற்கிறோம் 

நமது திருநெல்வேலி CGHS மருத்துவமனை மருத்துவராக இன்று பணியேற்கும் மருத்துவர் -நமது NFPE மகிளா கமிட்டியின் முன்னணி நிர்வாகி தோழியர் ஹைருனிஷா பேகம் அவர்களின் புதல்வி அவர்களை நெல்லை அஞ்சல் கோட்ட ஊழியர்கள் சார்பாகவும் நெல்லை மாவட்ட மத்தியஅரசு ஊழியர்கள் சார்பாகவும் வாழ்த்தி வரவேற்கிறோம் .

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


0 comments:

Post a Comment