...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, May 1, 2018

                                                நெல்லையில் நடைபெற்ற மே தின விழா 
நெல்லையில் 01.05.2018 அன்று இரண்டு தலைமை அஞ்சலகங்களிலும் மே தின கொடியேற்றுவிழா சிறப்பாக நடைபெற்றது .
முதலாவதாக திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற விழாவில் அஞ்சல் மூன்றின் கோட்ட தலைவர் தோழர் T .அழகுமுத்து அவர்கள் தலைமை தாங்கினார்கள் .கலங்கரை விளக்கு ஆசிரியர் ஹாஜி மாலிக் அவர்கள் நமது சம்மேளன கொடியை ஏற்றி வைத்தார்கள் .தோழர்கள் SK .பாட்சா வண்ணமுத்து ஜேக்கப் ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் .தோழியர் பவானி நன்றி கூறினார் .
--------------------------------------------------------------------------------------------------------------------
பாளையம்கோட்டையில் நடைபெற்ற விழாவில் நமது கோட்ட செயல் தலைவர் தோழர் N .கண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .தோழர் KG.குருசாமி அவர்கள் நம் சம்மேளன கொடியை ஏற்றி வைத்தார்கள் .தோழர் சீனிவாச சொக்கலிங்கம் புஷ்பாகரன் SK .பாட்சா ஜேக்கப் ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் .தோழர் M .தளவாய் அவர்கள் நன்றி கூறினார்கள் .
கொடியேற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெல்லை NFPE யின் சார்பாக நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் 
தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
------------------------------------------------------------------------------------------------------------------




மாநில உதவி தலைவர் தோழர் S .ஐயம்பெருமாள் அவர்களுக்கு குமரி கோட்டம் சார்பாக 30.04.2018 அன்று நாகர்கோவில் தலைமை 
அஞ்சலகத்தில் தோழர் சேக்மதார்  அவர்கள் தலைமையில் சிறப்பானதொரு பாராட்டு விழா நடைபெற்றது .நிகழ்வில் நமது முன்னாள் பொது செயலர் தோழர் KVS மாநில செயலர் தோழர் JR மாநில தலைவர் தோழர் M .செல்வ கிருஷ்ணன் நெல்லை கோட்ட தலைவர் தோழர் T .அழகுமுத்து செயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர் .நிகழ்ச்சிகளை தோழர் கார்த்திகேயன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்கள் .அஞ்சல் மூன்றின் நிர்வாகிகள் தோழர் சுரேஷ் குமார் ஜஸ்டின் ஜோஸ் உள்ளிட்ட முன்னணி தோழர்கள் நிகழ்ச்சிதனை சிறப்பாக செய்திருந்தனர் .







அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
         உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய மே தின புரட்சி வாழ்த்துக்கள் 
                                        நிமிரும் பொழுதெல்லாம் 
                                       நசுக்க படுவதற்கு 
                                       தொழிலாளி சாக்கடை 
                                       புழுக்கள் அல்ல 
                                       சரித்திர சக்கரங்கள் -
                                       தொழிலாளி நினைத்தால் 
                                       நிர்வாகத்தை முடுக்கவும் முடியும் 
                                       முடக்கவும் தெரியும் 

நெல்லையில் மே தின கொடியேற்றுவிழா 
01.05.2018 காலை 09.15 மணி திருநெல்வேலி HO
01.05.2018 காலை 09.30 மணி பாளையம்கோட்டை HO 
தோழர்கள் /தோழியர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அன்போடு அழைக்கிறோம் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள்