வாழும் தலைவர்கள் -
தோழர் .டேவிட் ஞானையா -3
தோழர் .டேவிட் ஞானையா -3
JCM (Joint Consultative Machinery ) துவக்கம்
1960 வேலை நிறுத்தத்தின் ஒரு முக்கிய வெற்றி JCM (Joint Consultative Machinery ) என்ற கூட்டு ஆலோசனை குழு மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பற்றி பரிசிலிக்க 1966 இல் அமைக்கப்பட்டது .1960 வேலைநிறுத்தத்தை கடுமையான அடக்குமுறைகளை கொண்டு நசுக்கிய அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இவ்வேலைநிறுத்தம் ஒரு சிவில் கலகம் என்று நாடாளுமன்றத்தில் பேசிவிட்டு இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்பொழுது எழுப்பப்படும் கோரிக்கைகளும் ,குறைகளும் சுமூக தீர்வு காண ஒரு அமைப்பு உருவாக்கப்படும் என்று உறுதி மொழி தந்தார் .
1966 அக்டோபர் 28 இம் தேதி JCM (Joint Consultative Machinery ) துவக்க விழாவிற்கு உள்துறை அமைச்சர் குல்சாரிலால் தலைமை வகித்தார்
தொழிலாளர்கள் சார்பில் மணி பென்கரா (AIRF .HMS ) AP சர்மா (NFIR -INTUC )D ஞானையா (NFPTE ) ஆகியோர் உரையாற்றினார்கள்
வேலை நிறுத்தங்கள் தேவைப்படவில்லை என்ற அளவிற்கு தொழிலாளர்களின் குறைகள் இந்த அமைப்பின் மூலம் தீர்க்கபடுவது ஒன்றே வேலை நிறுத்தங்கள் நடைபெறாமல் தவிர்க்கும் வழி என்று தோழர் ஞானையா தனது கருத்தை பதிவு செய்தார் .
SKJ ( தொடரும் )
0 comments:
Post a Comment