...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, September 1, 2015

POSTAL WORKERS ARE THE COLONIAL SLAVES OF THE NEO LIBERALISATION !


சுதந்திர தேசத்தின் நவீன  கொத்தடிமைகளா அஞ்சல் துறை ஊழியர்கள் ? 
தாராளமயத்தின் புதிய அவதாரமா  நவீன  அஞ்சல்  காலனித்துவம் ?

பொதுத்  துறையான  வங்கித் துறையில் பணியாற்றும் சுமார் 6,20,000 வங்கி ஊழியர்களுக்கு  மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில்  முழு விடுமுறை அளிக்க  மத்திய அரசு  ஒப்புதல் அளித்து  எதிர்வரும் செப்டம்பர் 1 முதல் இதனை அமலாக்க உத்திரவும் அளித்துள்ளதாக வெளியான  செய்தியை  கீழே  பார்க்கவும் .

ஏற்கனவே பொதுத்துறை வங்கிகள் சனிக்கிழமை அன்று அரை நாள் மட்டுமே  பணியாற்றுகின்றனர்.  அவர்களிடமும்  CBS , ONLINE  சேவை, ATM  என்று  பல்வேறு தொழில் நுட்ப முன்னேற்றங்கள் வந்து  MANUAL  RECORD  பராமரிப்பது நின்று  பல காலம்  ஆகிறது.

ஆனால் ,  வங்கிகளை பார்த்து  நம்மிடமும் வங்கி  துவக்க வேண்டும் என்றும்  PO SB யை  விரிவாக்க வேண்டும் என்றும் நாட்டின்  மூலை முடுக்குகளிலெல்லாம்  பரவிக் கிடக்கும் 1,55,000 அஞ்சலகங்கள் மூலம் இந்த  சேவையை   சிறப்பாக செய்ய வேண்டும் என்று  கூறும் நமது அதிகாரிகள் , 

1) COUNTER  பணி  நேரத்தை  தன்னிச்சையாக ஆங்காங்கே  நீட்டித்து  உத்திரவு  இடுகிறார்கள் .

2) சனியன்று  இனி முழு  நாளும்  COUNTER  வேலை  செய்ய  வேண்டும் என்று  உத்திரவு  இடுகிறார்கள் .

3)"24 மணி  நேரத்தில்  DELIVERY " என்று  E -COMMERCE  கம்பனிகளிடம் தன்னிச்சையாக ஒப்பந்தம் போட்டு  ஞாயிறு மற்றும்  மதப் பண்டிகை நாட்களில் கூட DELIVERY  செய்திட  பணிக்கு  வரவேண்டும் என்று உத்திரவு  இடுகிறார்கள்.

இதுதான்  " MODEL  EMPLOYER " போலும் . வங்கித்துறையைப் பார்த்து மாற்றங்களைக் கொண்டு வருகிறோம் என்று கூறிக் கொள்ளும்  நம் துறை  அதிகாரிகள் , வங்கித்துறையில் இருக்கும் சலுகைகளை   நம் ஊழியர்களுக்கு  கொண்டு வர மறுப்பது  ஏன் ? இருக்கும்  உரிமைகளையும்  படிப்படியாக  பிடுங்குவது  ஏன் ? 

நவீன காலனியாதிக்கத்தின்  புதிய அடிமைகளாக அஞ்சல் துறை ஊழியர்களை மாற்றுவது  ஏன் ?  சிந்திப்பார்களா  அல்லது கொத்தடிமை அரசாங்கம்  நடத்துவார்களா ?

அதிகாரிகளின்  சிந்தனைக்கே விடுகிறோம் .

0 comments:

Post a Comment