பாலு மறைந்தார்
உன்னை போல் தலைவன் உண்டோ ?தம்பிகளிடம்
உண்மையாய் இருந்ததொண்டோ ?
அண்ணனின் மரண செய்தி இடியாய் இடித்தது
இதயத்தில் வெடியாய் வெடித்தது
அண்ணன் பாலு மறைந்துவிட்டார்-தொழிற்சங்கத்தில்
எங்களை வளர்த்து விட்ட தலைவன் போய் விட்டார்
நெருக்கடிகளில் சிங்கத்தின் கர்ஜனை -சோர்ந்து போகையில்
சிறுத்தையின் வேகம்
அதிகாரவர்கத்தின் சிம்ம சொப்பனம் -EDகளின்
இதய சிம்மாசனம்
வறுமை அண்ணனை விரட்டி கொண்டே வந்தது
வெறும் கையாலே அதையும் வெற்றி கண்டே வந்தார்
எதிர்பார்த்து எவரிடமும் நின்றதில்லை --எமனிடமும்
அவ்வளவு எளிதாய் சிக்கியதில்லை
வெள்ளை நிற ஆடையில் உன்னை இனி பா ர்பதெப்போ ?
வேங்கை குண பாய்ச்சலை இனி கான்பதெப்போ ?
வெள்ளை உள்ளம் கொண்ட தலைவனிடம் பேசுவதெப்போ ?
வேகத்தில் தம்பிகளிடம் கோபத்தை வீசுவதெப் போ ?
19 ஆண்டுகள் அசைக்க முடியாத செயலர் --ஓய்வுக்கு பிறகும்
பல அண்டுகள் ஒதுக்க முடியாத தலைவர்
மறைவிற்கு பிறகும் மறுதலிக்க முடியாத மன்னவன்
மறைந்தும் மறையாத மாமனிதன்
அழுவதற்கும் விழிகளில் கண்ணீர் இல்லை-ஏனென்றால்
அண்ணன் கொடுத்த உறுதி நெஞ்சில் குறையவில்லை
அனாதை ஆகிவிட்டோம் என்ற கவலையும் இல்லை-காரணம்
அணியின் அஸ்திவாரம் என்றும் குன்றவில்லை
அண்ணன் வழியில் தொடர்ந்து உழைப்போம்
அவர் தன் கனவை முடிப்போம்
தம்பி
ஜேக்கப்ராஜ்
கண்ணீர் அஞ்சலி

0 comments:
Post a Comment