...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, July 8, 2016

                      வேலைநிறுத்த அறிவிப்பு எனும் புஷ்வானம் 
 இன்னும் எத்தனை காலம் தான் ?
மத்தியஅரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வழக்கம் போல் வாக்குறுதி அடிப்படையில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது .பிட்மேன் பார்முலா குறித்து ஒரு கமிட்டியும் ,இதர அலவன்சஸ்   குறித்து மற்றொரு கமிட்டியும் , ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தனது முடிவினை அறிவிக்கும் .
                                                 SRMU    அன்றே சொன்னது 
       சினிமா வில் ஒரு காட்சி வரும் .பிச்சைக்காரன் வீட்டுவாசலில் நின்று பிச்சை கேட்பான் .அந்தவீட்டு மருமகள் ஓடிவந்து இல்லை என்பாள் .உள்ளேயிருந்த மாமியாருக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்து ,போன பிச்சைக்காரனை அழைத்து அவள் என்ன சொல்வது நான் சொல்கிறேன் உனக்கு இல்லை --பிச்சைக்காரன் தலையில் அடித்துக்கிட்டு போவான் .அதே மாதிரி தான் கடந்த 30 ம் தேதி என்ன நிலைமையோ அதைத்தான் 06.07.2016 அன்று உறுதி தந்துள்ளது .
                          வாதாட தலைமை இல்லையா ?
 33 லட்சம் ஊழியர்கள் போராட தயாராக இருந்தும் இந்த போராட்டத்தை நடத்த தலைவர்கள் அஞ்சுவது ஏன் ? பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் எல்லாம்  ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகின்றது .சர்வீசில் உள்ள தலைவர்களை அழைத்து செல்ல தயங்குவது ஏன் ?
   ED பிரச்சினை --பேச்சும் இல்லை மூச்சும் இல்லை 
ஊதியக்குழு ED கோரிக்கையை ஏற்று கொள்ளும் வரை போராட்டம் வாபஸ் கிடையாது என்று புரட்சி பேசிய கூட்டம் இன்று ED குறித்து ஒருவார்த்தை பேசவில்லையே ?
                       வட்டியில்லாத அலவன்ஸ் 
         இதைக்கூட பேச்சுவார்த்தையில் வெற்றி பெறமுடியாத தலைமை --இன்று ஊழியர்களின் மனக்குமுறலுக்கு யார் பதில் சொல்வது ?
  கமிட்டி குறித்து வாட்ஸாப்ப் துணுக்குகள்  
lower  level  committee Midle   level   committee Side   level   committee 
Upper   level   committee Powered    committee Empowered  committee high  level  committee 
இதில் ஏதாவது எப்போதாவது ஒரு நல்லது நடந்ததா சொன்னா .......
                                          அரியஸ் எப்போது 
இப்போ சாதரண ஊழியர்கள் மத்தியில் இருக்கும் ஒரே கேள்வி --இதை 30 ம் தேதி கேட்டிருந்தா அரியசாவது உடனே கொடுத்திருப்பான் . --கமிட்டி எப்போ வந்து ,அதன் அறிக்கை தந்து ,அதன்மீது அமைச்சரவை விவாதம் செய்து .அதைமீண்டும் மூன்று அமைச்சர்கள் பேசி இறுதி முடிவு எடுக்க எவ்வளவு நாட்கள் ஆகும் ?
            ஐயா 33 லட்சம் மத்தியஅரசு ஊழியர்களில்பணியில் இருக்கும் தலைவர்கள்  பேச்சுவார்த்தைக்கு செல்ல தடுப்பது ஏன் ?
ஓய்வு பெற்றவர்கள் எங்களுக்கு தடையாய் இருக்காதீர்கள்                               

STRIKE IS DEFERRED, BUT THE STRUGGLE SHALL 

CONTINUE
இதை பார்த்து அழுவதா ? சிரிப்பதா ?
                                     SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் 














0 comments:

Post a Comment