...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, November 2, 2018

                                                    நன்றி ! நன்றி !  நன்றி 
கொட்டும் மழையிலும் கொள்கை முழக்கம் --சற்று நேரம் மழை நின்று நமக்கு ஆதரவு தந்தது -
ஆர்ப்பாட்டம் வெற்றிபெற துணைநின்ற இயற்கைக்கும் -இயக்க தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
முன்னதாக கருப்பு பேட்ஜ் போராட்டத்தை சிறப்பாக செய்துமுடித்த அனைத்து தோழர் /தோழியர்களுக்கும் நெல்லை NFPE இன் வீர வாழ்த்துக்கள் .
SAP பிரச்சினை -நெட்ஒர்க் தாமதம் இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களால் தாக்கப்பட்ட அலகாபாத் சம்பவத்தை கண்டித்தும் அஞ்சல் ஊழியர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வழங்கிட நிர்வாகத்தை வலியுறுத்தியும் நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மாபெரும் எழுச்சியை தந்தது .ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள் அழகுமுத்து -சீனிவாச சொக்கலிங்கம் ஆகியோர் கூட்டு தலைமை தா ஙகினார்கள் .தோழர்கள் SA ராமசுப்ரமணியம் FNPO முன்னாள் கோட்ட செயலர் தோழர் N .கண்ணன் செயல்தலைவர் தோழர்கள் புஷ்பாகரன் ச ண்முகசுந்தரராஜா கிருஷ்ணன் *ஓய்வூதியர் சங்கம் ) வண்ணமுத்து ஞானபாலசிங் மற்றும் SK பாட்சா  ஜேக்கப் ராஜ் ஆகியோர் வாழ்த்திப்பேசினார்கள் -இறுதியாக தோழர் M.தளவாய் நன்றி கூறினார் .
                          நெட்ஒர்க் பிரச்சினை -பொதுமக்களிடம் கொண்டு செல்லவும் -வருகிற 24.11.2018 நமது சம்மேளன தினத்தை முன்னிட்டு புதிய ஓய்வூதிய திட்டஎதிர்ப்பு  விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஊழியர்களிடம்  முன்னெடுக்கவும்  தோழர்கள் தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
                                  13.11.2018 மதுரையில் தர்ணா 
நமது இரண்டாவது கட்ட போராட்டம் 13.11.2018 அன்று மதுரை PMG அலுவலகம் முன்பு நடைபெறுகிறது .கோட்டசங்கத்தின் சார்பாக ஒரு வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .மதுரை தர்ணாவிற்கு வரவிரும்பும் தோழர்கள் தங்கள் பெயர்களை கோட்ட செயலரிடம் தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறோம் .
13.11.2018 சரியாக காலை 6 மணிக்கு பாளையில் இருந்து வேன் புறப்படும் .விடுப்பு விண்ணப்பிக்கிற தோழர்கள் தங்கள் சொந்த காரணங்களை காட்டி விடுப்பு விண்ணப்பிக்கவும் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா கோட்ட செயலர்கள் 
                                     







0 comments:

Post a Comment