பழையன கழிதலும்.. புதியன புகுதலும்
இலாக்கா முதல்வர் அவர்களே "தேவையற்ற வேலைகளை குறையுங்கள்", "நிர்வாகத்தை ஒழுங்காக நடத்துங்கள் "என்று கூறியிருக்கும் போது இனியாவது மணிக்கு ஒரு statement /report கேட்கும் வேலையை நிறுத்துமா நிர்வாகம்
பாரதப் பிரதமரின் அரசுத் துறை வாரியான செயலர்களுடன் கூட்டம் கடந்த 4.6.2014 இல் புது டெல்லியில் நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில் பொது மக்கள் சேவையை திறம்பட கையாளுவதற்கான வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டன . இந்தக் கூட்டத்தின் முடிவுகளை அமல் படுத்தும் விதத்தில் நம்முடைய துறை முதல்வர் மதிப்புக்குரிய MS . காவேரி பானர்ஜி அவர்கள் மாநில அஞ்சல் துறை தலைவர்களின் நேரடி பார்வைக்கு D.O. கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் மிகத் தெளிவாக " IDENTIFY AND DISCONTINUE REPORTS FROM OPERATIVE OFFICES AND DIVISIONS WHICH ARE NO LONGER RELEVANT FOR WHICH INFORMATION IS ALREADY AVAILABLE IN YOUR CIRCLE / REGIONAL OFFICE OR ON THE WEB ' என்கிற அறிவுறுத்தலை அனைத்து மாநில அஞ்சல் நிர்வாகங்களுக்கும் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையில் ஏற்கனவே நம்முடைய தோழர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் , குறிப்பாக தென் மண்டலத்திலும் , மேற்கு மண்டலத்திலும் இது போன்ற தேவையற்ற செயல்கள் கடைப்பிடிக்கப் பட்டு வருவதாகவும் ஏற்கனவே மண்டல அலுவலகத்தில் / கோட்ட அலுவலகத்தில் உள்ள விபரங்களை , அவர்களால் ON LINE இல் எடுக்கக் கூடிய , அல்லது ஏற்கனவே அவர்களுக்கு வேறு விதத்தில் - ஏற்கனவே உள்ள கோப்புகளில் இருந்து - கிடைக்கக் கூடிய விபரங்கள் குறித்த REPORTS களை மீண்டும் மீண்டும் காலை , மதியம், மாலை, இரவு என்று கேட்டுக் கொண்டே இருப்பதாகவும் அப்படி .உடனே அனுப்பப் படவில்லை எனில் அதற்கு விளக்கம் அளித்திட , பொது மக்கள் சேவையை உடனே நிறுத்தி விட்டு மண்டல அலுவலகத்திற்கு சம்பத்தப் பட்ட ஊழியர் நேரே வந்து அங்கு உள்ள குட்டி அதிகாரிகளிடம் விளக்கம் எழுதிக் கொடுக்கவேண்டும் என்று தொலைபேசியில் மிரட்டப் படுவதாகவும் புகார் அடிக்கடி வந்து கொண்டுள்ளது.
0 comments:
Post a Comment