தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக நிர்வாகிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இருக்க கூடாது என்பது இலாகா விதி --இதையும் மீறி மதுரையில் தேடி, தேடி ஐந்து மாதங்களுக்கு பிறகு நிர்வாகம் கொடுத்துள்ள கடிதத்தை பாரீர் !
10.01.2014 அன்று மதுரையில் மண்டல நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது .சுமார் 500 தோழர்கள் கலந்து கொண்டனர் .நமது நிர்வாகிகள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டனர் .பேச்சு வார்த்தை அன்றும் நடந்தது .வேறொரு நாளிலும் தொடர்ந்தது .சுமார் ஏழு மணிநேரம் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக மாநில சங்கமும் -மண்டல நிர்வாகமும் கையெழுத்து போட்டுபோராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர் .ஆனால் மண்டல நிர்வாகம் ஐந்து மாதங்கள் கழித்து தர்ணாவில் கலந்து கொண்டவர்களின் பட்டியலை பெற முடியாமல் பொத்தாம் பொதுவாக 10.01.2014 அன்று விடுப்பில் சென்ற ஊழியர்களின் பட்டியலை வாங்கி அவர்களுக்கு SHOW CAUSE நோட்டீஸ் வழங்கி இருப்பது காலக் கொடுமை .மாநில சங்கம் விரைந்து இந்த அதிகார ஂமீறலை தடுத்து நிறுத்திடவேண்டும் .நமது கோட்ட செயலருக்கு நிர்வாகம் வழங்கியுள்ள SHOW CAUSE உங்கள் பார்வைக்கு
0 comments:
Post a Comment